Header Ads



ராஜபக்சவினரால், உயிருக்கு ஆபத்து - அசாத் சாலி

சீனாவில் நடைபெறும் பாதுகாப்பு மாநாட்டிற்கு முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை அனுப்பியது மிகப் பெரிய தவறு எனவும் அவர் உட்பட ராஜபக்ச குடும்பத்தினருக்கு எதிராக ஊழல், மோசடிகள் தொடர்பில் பல வழக்குகள் இருப்பதாகவும் தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றில் சாலி இதனை குறிப்பிட்டுள்ளார்.

கோத்தபாய ராஜபக்ச எப்படி சீனாவில் நடக்கும் இந்த பாதுகாப்பு மாநாட்டுக்கு செல்கிறார் என நான் கேட்டேன் எவரிடமும்அ தற்கு பதில் இல்லை.

கோத்தபாய ராஜபக்ச உட்பட ராஜபக்ச குடும்பத்தினருக்கு எதிராக ஊழல், மோசடி குற்றச்சாட்டுக்கள் இருக்கின்றன. இதனால், அரசாங்கத்தின் சார்பில் அவரை இப்படியான மாநாடுகளுக்கு அனுப்பி முடியாது.

வழக்குகள் இருக்கும் போது இப்படியானவர்களுக்கு அழைப்பு விடுத்து வரவழைப்பது இலங்கைக்கு செய்யும் அநியாயம்.

ராஜபக்சவினரால், உயிருக்கு ஆபத்து இருக்கின்றது என்பதை அரசாங்கத்தின் இரண்டு தலைவர்களும் மறந்து விடக் கூடாது.

இந்த அச்சுறுத்தல் என்றாவது ஒரு நாள் வெளியாகும் போதே இவர்களுக்கு புரியும்.

பலமுறை நாங்கள் இது பற்றி கூறியும் எவரும் அதனை கேட்பதில்லை எனவும் அசாத் சாலி மேலும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.