Header Ads



பலஸ்தீன் தொடர்பான கொள்கையில், தடம்புரண்ட நல்லாட்சி

பலஸ்தீன் தொடர்பான கொள்கையில்  இலங்கை தடம்புரள்கிறதா?
(நவமணி பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கம்)

முஸ்லிம்களின் மூன்றாவது புனிதத் தலமான பைத்துல் முகத்தஸ் பள்ளிவாசல் மற்றும் அதன் அருகிலிருக்கும் குப்பதுஸ் ஸஹ்ரா பள்ளிவாசல் முஸ்லிம்களின் தனி உரிமை என்றும், அவை உலக முஸ்லிம்களின் பொதுச் சொத்து என்றும் யுனெஸ்கோ நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. 

ஐக்கிய நாடுகள் சபையின் ஓர் அங்கமாக இயங்கும் யுனெஸ்கோ நிறுவனம் பைத்துல் முகத்திஸிற்கு யூதர்களிற்கு மத அடிப்படையிலும், வரலாற்று அடிப்படையிலும் எவ்வித தொடர்பும் இல்லை என்ற யுனெஸ்கோவின் தீர்மானம் தொடர்பாக அதன் 58 அங்கத்துவ நாடுகளிடையே வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. 

கடந்த வியாழனன்று பாரிசிலுள்ள யுனெஸ்கோ தலைமையகத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் 26 நாடுகள் தீர்மானத்தை ஆதரித்தும், 26 நாடுகள் வாக்கெடுப்பில் இருந்து தவிர்ந்துகொண்டதோடு 6 நாடுகள் பிரேரணைக்கு எதிராக வாக்களித்துள்ளனர். 

அமெரிக்கா, பிரித்தானியா, நெதர்லாந்து, லத்துவேனியா, எஸ்டோனியா, ஜேர்மன் ஆகிய நாடுகளே குறித்த பிரேரணையை எதிர்த்து வாக்களித்த நாடுகளாகும். 

எது எவ்வாறான போதும் 26 நாடுகள் பிரேரணைக்கு ஆதரவு வழங்கி வரலாற்றில் முதல் தடவையாக முஸ்லிம்களுக்குரிய புனித தலமான பைத்துல் முகத்தஸின் உரிமை உறுதிப்படுத்தப்பட்டிருப்பது குறித்து முஸ்லிம் உலகிற்கு மட்டுமன்றி நீதியை மதிக்கும் உலகிற்கு மன அமைதி கொள்ளத்தக்க ஒரு முடிவாகும். 

இந்த பிரேரணையில் இலங்கை பங்குகொண்டமையானது விவகார அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது. 

பலஸ்தீன் மற்றும் மஸ்ஜிதுல் அக்ஸா தொடர்பாக இலங்கையின் கொள்கையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதா? இவ்வாறான ஒரு பொதுவான பிரேரணையில் இலங்கை ஏன் மௌனம் சாதிக்கின்றது?

நல்லாட்சி அரசின் வெளிவிவகாரக் கொள்கையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதா? என்ற கேள்வி எழுப்பப்படுகின்றது. 

பலஸ்தீன் தொடர்பான வாக்கெடுப்பொன்றில் பலஸ்தீனுக்கு எதிராக வாக்களித்ததற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது அரசின் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவை அமைச்சர் பதவியில் இருந்து அகற்றியதாக அக்காலத்தில் தெரிவிக்கப்பட்டது. 

மங்கள சமரவீர வெளிவிவகார அமைச்சராக இருக்கும் போதே இந்தப் பிரேரணையும் முன்வைக்கப்படுகின்றது. 

முஸ்லிம்களின் புனிதத் தளமான பைத்துல் முகத்தஸ் தொடர்பான ஒரு பிரேரணைக்கு முஸ்லிம்களின் ஒட்டுமொத்த ஆதரவுடன் பதவிக்கு வந்த அரசு பலஸ்தீனுக்கு ஆதரவளிப்பதில் இருக்கும் பிரச்சினை என்ன எனத் தெளிவுபடுத்துவது அவசியமாகும். 

இலங்கை அரசின் இத்தீர்மானத்தினூடாக பலஸ்தீன் தொடர்பான அரசின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டிருக்கின்றதா? என்ற கேள்வியை எழுப்ப வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. 

அரசில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி முஸ்லிம் உறுப்பினர்கள் அரசின் இந்த தீர்மானத்தை ஆதரிக்கிறார்களா? என்ற கேள்வியை எழுப்ப வேண்டியுள்ளது. 

பலஸ்தீன் தொடர்பாக கடந்தகால அரசுகளுக்கு ஒரு தெளிவான நிலைப்பாடிருந்தது. முன்னாள் பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க, முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச ஆகியோர் இஸ்ரேல் தூதுவராலயத்தை 24மணி நேரத்தில் இலங்கையிலிருந்து வெளியேற்றி பலஸ்தீனுக்கு ஆதரவு வழங்கிய வரலாற்றுப் பெருமைமிகு நாடான இலங்கையில் இந்த இரு பிரதான கட்சிகளும் முஸ்லிம், தமிழ் கட்சிகளது ஆதரவுடன் ஆட்சியமைத்துள்ள நிலையில் வெளிவிவகார அமைச்சு பைத்துல் முகத்தஸ் தொடர்பாக எடுத்துள்ள இந்த நிலைப்பாடு அங்கீகரிக்கக் கூடியதா? வெளிவிவகார அமைச்சு இது குறித்து விளக்கமளிக்குமா?

4 comments:

  1. Muslim must Boycott the upcoming election to protest against government action.

    ReplyDelete
  2. Dear Muslim Minister's when you will going to ask this question, and what is yours answer is matter. please answer to our people.

    ReplyDelete
  3. முஸ்லிம்கள் முதலில் எறுமைகளை பாராளுமன்றுக்கு அநுப்புவதை நிறுத்தவேண்டும்,
    ரனிலின் சுயரூபம் கொஞ்சம்கொஞ்சமாக் வெளிப்படுகிறது!
    ரனில் பிரபாவின் விடயத்தில் காட்டிய நரித்தனத்தை முஸ்லிம்களுக்கு பிரயோகித்தால் அவர் நிறைய கைக்குட்டைகளை வைத்திருக்கவேண்டிவரும்

    ReplyDelete
  4. ஆம், இனி, முஸ்லிம்கள் இஸ்லாமிய உணர்வுள்ள, இறையச்சம் கொண்டோரையே சகல மட்டங்களிலும் தமது பிரதிநிதிகளாகத் தெரிவு செய்ய வேண்டிய சமுதாயப் பொறுப்பில் இருக்கின்றனர். இது பற்றி இறைவன் நிச்சயம் கேட்பான்.

    ReplyDelete

Powered by Blogger.