Header Ads



வெளிநாட்டில் உள்ள இலங்கையர்கள், இவ்வருடம் நாட்டிற்கு அனுப்பிய பணம் எவ்வளவு தெரியுமா..?

இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலா பயணிகளை விடவும் வெளிநாட்டு சென்ற இலங்கையர்களினாலே அதிகளவு வருமானம் ஈட்டப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள புதிய அறிக்கையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.

2016ஆம் ஆண்டின் முதல் 8 மாதங்களுக்குள் வெளிநாட்டில் உள்ள இலங்கையர்களினால் நாட்டுக்கு அனுப்பி வைத்துள்ள பணத்தின் பெறுதி 695.2 பில்லியன் ரூபாய் என தெரிவிக்கப்படுகின்றது.

இது கடந்தாண்டின் முதல் 8 மாதங்களுடன் ஒப்பிடுகையில் 13.6% வீத அதிகரிப்பாகும். இதன் பெறுமதி 612.3 பில்லியன் ரூபாவாகும்.

இதேவேளை 2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் செப்டெம்பர் மாதம் வரையிலான 9 மாத காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலா பயணிகளின் மூலம் கிடைக்கப்பெற்ற வருமானம் 361.9 பில்லியன் ரூபாவாகும்.

கடந்தாண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில், சுற்றுலா பயணிகளின் வருகையின் மூலம் இலங்கைக்கு கிடைத்த வருமானத்தின் பெறுமதி 291.7 பில்லியன் ரூபாவாகும். இது 24.1 வீத உயர்வாகும் என மத்திய வங்கி அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

2 comments:

  1. I hope Most part of it from Middle Estern ( Muslim World ).

    ReplyDelete
  2. any benefit for GCC.Worker?

    ReplyDelete

Powered by Blogger.