Header Ads



"சம்பந்தன் ஐயாவே'' முஸ்லிம்கள் மீது, சவாரி செய்ய வேண்டாம்..!

இணைந்த வட கிழக்கில் முஸ்லிம்களின் உரிமைகளும் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்பட முடியமென்றால் ஏன் இலங்கையில் தமிழர்களின் உரிமையும் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்பட முடியாது..?

இணைந்த வட கிழக்கில் முஸ்லிம்களின் உரிமைகளும் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்படும் என்றும் முஸ்லிம்களுக்கு எதுவித அநீதியும் இழைக்கப்பட மாட்டாது; என்றும் திரு சம்பந்தன் ஐயா அவர்கள் இன்றைய ஊடகங்களில் உத்தரவாதமளித்திருக்கின்றார். இவற்றை திரு சம்பந்தன் அவர்கள் தனிப்பட்ட முறையில் உறுதிப்படுத்துவாரா? அல்லது த. தே. கூ உறுதிப்படுத்துமா? அல்லது அல்லது அரசியலமைப்புச் சட்டத்தினூடாக உறுதிப்படுத்தப்படுமா?

அரசியலமைப்புச் சட்டத்தினூடாக முஸ்லிம்களின் உரிமைகளை, பாதுகாப்பை உறுதிப்படுத்தப்பட முடியுமானால் அதிகாரப் பகிர்வுக்குப் பதிலாக, அதே அரசியலமைப்புச் சட்டத்தினூடாக தமிழர்களின் பாதுகாப்பை, உரிமைகளை ஏன் உறுதிப்படுத்த முடியாது? என்ற கேள்விக்கு சம்பந்தன் ஐயாவின் பதிலென்ன ? தமிழர்களின் பாதுகாப்பை, உரிமைகளை இலங்கை அரசு அரசியலமைப்புச் சட்டத்தினூடாக உறுதிப்படுத்த முடியாது ஆனால் முஸ்லிம்களின் உரிமைகளை வட கிழக்கு 'தமிழ் அரசு' அரசியலமைப்புச் சட்டத்தினூடாக உறுதிப்படுத்தும் ; எனவே முஸ்லீம்கள் வட கிழக்கு இணைப்பிற்கு இணங்க வேண்டும்; என்பது எந்த வகையில் நியாயம். அல்லது தனிப்பட்ட முறையில் திரு சம்பந்தன் அவர்களோ அல்லது த. தே. கூட்டமைப்போ உறுதிப் படுத்தும், என்பது அறிவுடமை ஆகுமா, என்பது ஒருபறமிருக்க, அதே உத்தரவாதத்தை ரணிலோ, மைத்திரியோ தந்தால் அதிகாரப்பகிர்வுக் கோரிக்கையை அவர்கள் கைவிடுவார்களா? கடந்தகால, சம கால அனுபவங்கள்தான் எங்களை அதிகாரப் பகிர்வைக் கோரவைக்கின்றது; என்று நீங்கள் கூறலாம். அதே கடந்தகால, சமகால அனுபவங்கள்தான் அதிகாரப் பகிர்வு தொடர்பாக எங்களை அச்சப்பட வைக்கின்றது; என்பதைப் புரிந்து கொள்ளுங்கள் .

அதுமட்டுமல்லாமல் யாழில் நடைபெற்ற இரு மாணவர்களின் கொலையைத் தொடர்ந்து அதிகாரப் பகிர்வின் மூலமே வட கிழக்கில் பாதுகாப்பை உறுதிப்படுத்தப்பட முடியும்; என்று திரு சம்பந்தன் ஐயா தெரிவித்திருக்கின்றார். அந்தக் கொலையை நாமும் கண்டிக்கின்றோம். ஆனால கிழக்கிற்கு வெளியே வாழுகின்ற முஸ்லிம்களது உரிமை, பாதுகாப்பு அதே அதிகாரப்பகிர்வின் மூலம் பாதுகாக்கப்படுமா? அல்லது மேலும் அதல பாதாளத்திற்குள் தள்ளப்படுமா? திரு சம்பந்தனின் பதில் என்ன? வடக்கில் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழுகின்றார்கள். எனவே அதிகாரம் அவர்களின் கைகளுக்குச் செல்லும்.  கிழக்கிற்கு வெளியே வாழுகின்ற முஸ்லிம்களைப் பொறுத்தவரை அதிகாரம் யாரின் கைகளுக்கு செல்லும். 

போதாக்குறைக்கு கிழக்கில் மாத்திரம் பெரும்பான்மையாக இல்லாவிட்டாலும் சிறுபான்மை இல்லை என்கின்ற நிலையில் வாழுகின்ற முஸ்லிம்களை வட கிழக்கை இணத்து இங்கும் சிறுபான்மையாக்கி ஒன்பது மாகாணங்களிலும் அடிமைச் சமூகமாக முஸ்லிம்கள் வாழ, அதே நேரம் இணைந்த வட கிழக்கில் ஆளும் சமூகமாக தமிழர்கள் வாழ்ந்து ஆளப்படுகின்ற ஒரு அடிமைச் சமூகமாக கிழக்கிலும் முஸ்லிம்களை மாற்ற முற்படுவது மனித தர்மமாகுமா?

துரதிஷ்டவசமாக அதிகாரப் பகிர்வு என்பது முஸ்லிம் சமூகத்தின் மீது எழுதப்படப் போகின்ற அடிமைச் சாசனம், என்பதை புரிந்துகொள்ள முடியாத முஸ்லிம் கட்சித் தலைமைத்துவங்களை வைத்துக் கொண்டு முஸ்லிம் சமூகம் தூங்கிக் கொண்டிருக்கின்றது. அந்த தலைமைத்துவங்களால் புரிந்து கொள்ள முடியாது, ஏனெனில் அவர்கள் முஸ்லிம் கட்சித் தலைமைத்துவங்களே தவிர முஸ்லிம்களின் தலைமைத்துவங்கள் அல்ல. எனவே, திரு சம்பந்தன் ஐயா அவர்களே! நாங்கள் தலமைத்துவமில்லாத ஒரு சமூகம் , தயவு செய்து எங்கள் மீது சவாரி செய்ய முற்பட வேண்டாம். ஒரு சமூகத்தின் வாழ்வு இன்னுமொரு சமூகத்தின் அழிவில் அல்லது அடிமை வாழ்வில் மலரவேண்டாம்; என்று வேண்டுகின்றேன்.

YLS ஹமீட் 
செயலாளர் நாயகம் 
அ இ ம கா

13 comments:

  1. இணைந்த வட கிழக்கில் முஸ்லிம்களின் உரிமைகளும் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்பட முடியமென்றால் ஏன் இலங்கையில் தமிழர்களின் உரிமையும் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்பட முடியாது..?//// சரியான கேள்வி...

    ReplyDelete
  2. Ungada kadsium appaditthana!

    ReplyDelete
  3. முஸ்லீம்கள் இலங்கை அரசில் அமைச்சு பதவிகளைபெற்று சுதந்திரமாகவாழமுடியுமென்றால் ஏன் இணைந்த வடகிழக்கில் அமைச்சுபதவிகளை ஏன் முதலமைச்சை பெற்று வாழலாமே?

    ReplyDelete
  4. கிழக்கிற்கு வெளியில் முஸ்லீம் பாதுகாப்பு தொடர்பில் ரிசாத் அரசுடன் பேசலமே?
    எல்லா வேலையையும் சம்பந்தன் செய்யவேண்டுமென்றால் நீங்கள் உங்கள் கட்சி கையாலாகதது என்று ஒப்புகொள்கிறீங்க அப்படிதானே.
    சம்பந்தன் மீது ஏறி அரசியல் சவாரி செய்ய முற்படுகிறீர்கள் போல தெரிகிறதே.

    ReplyDelete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. ஹமீட், நியாயமான கேள்வியும் நாகரீகமான வேண்டுகோளும். மதம், மொழி, இனம் போன்ற விடயங்களை தாண்டி கிழக்கு வடக்குடன் இணைக்கப்படுமானால் அது கிழக்கு மாகாண மக்களின் அரசியல் பொருளாதார, இயறகை வளங்கள், தொழில் வாய்ப்பு அனைத்தையும் ( நிட்சயமாக ஆட்சி அதிகாரம் அவர்களின் கையில் தான் இறுக்கப் போகின்றது) கிழக்கில் உள்ள அனைத்து மக்களும் இழக்க வேண்டி வரும். கிழக்கின் சந்ததிகள் எதிர்காலத்தில் அதட்காக போராட வேண்டி வரும். இதுதான் யதார்த்தமும் உண்மையும். இதை கிழக்கில் வாழும் அரசியல் வாதிகளும் மக்களும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. அப்படி ஒன்றும் ஏற்படாது .முஸ்லீம்கள் இதுவரை புடுங்கிய ஆணிகள் போதும் இனி ஒன்றும் புடுங்க வேண்டாம்.

      Delete
  7. ஹமீட், நியாயமான கேள்வியும் நாகரீகமான வேண்டுகோளும். மதம், மொழி, இனம் போன்ற விடயங்களை தாண்டி கிழக்கு வடக்குடன் இணைக்கப்படுமானால் அது கிழக்கு மாகாண மக்களின் அரசியல் பொருளாதார, இயறகை வளங்கள், தொழில் வாய்ப்பு அனைத்தையும் ( நிட்சயமாக ஆட்சி அதிகாரம் அவர்களின் கையில் தான் இறுக்கப் போகின்றது) கிழக்கில் உள்ள அனைத்து மக்களும் இழக்க வேண்டி வரும். கிழக்கின் சந்ததிகள் எதிர்காலத்தில் அதட்காக போராட வேண்டி வரும். இதுதான் யதார்த்தமும் உண்மையும். இதை கிழக்கில் வாழும் அரசியல் வாதிகளும் மக்களும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

    ReplyDelete
  8. உண்மையான யதார்த்தமான அறிக்கை.

    ReplyDelete
  9. சம்பந்தனின் கைகளுக்குள் ஹக்கீம் இருப்பதினால்தான் அவர் இப்படி தைரியமாக பேசுகின்றார் .

    ReplyDelete
  10. இவர் யாரு புதுசா கிழம்பிட்டாரு?
    உப்பு சப்பு இல்லாத, விதண்டாவாதம் பண்ணிக்கொண்டு.

    ReplyDelete
  11. முஸ்லீம் அரசியலில் அட்ரஸ் அற்றவர்களும்,அட்ரஸ் இழந்தவர்களும்,அரசியலில் பிரவேசிப்பவர்களும் பிரபலம் அடைய கண்டுபிடித்த ஒரு யுக்தியே தமிழ் தலைவர்களை விமர்சித்து அறிக்கை விடுவது.

    ReplyDelete

Powered by Blogger.