Header Ads



அரசியலமைப்பு வரையும் பணி துரிதம், இரகசியம் காக்கிறோம் என்கிறார் சுமந்திரன்

நாங்கள் கடைப்பிடிக்கும் மெளனத்துக்குக் காரணங்கள் இருக்கின்றன. எங்கள்மக்கள் எங்களை நம்புவார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கின்றது. இடைக்காலஅறிக்கை வெளிவருகின்ற போது எல்லா விடயங்களும் வெளிவரும். அதுவரைக்கும் மக்கள்நம்பிக்கை காக்க வேண்டும். இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்றஉறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

பன்முகப்படுத்தப்பட்ட வரவு - செலவுத் திட்ட நிதியின் ஊடாக மக்களுக்குப்பல்வேறு உதவித் திட்டங்களை பகிர்ந்தளிக்கும் நிகழ்வு கரவெட்டிப் பிரதேசசெயலகத்தில் பிரதேச செயலர் சிவசிறி தலைமையில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில்கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அரசியல் தீர்வு தொடர்பில் பல வேலைத்திட்டங்கள் எம்மால் துரிதமாகமுன்னெடுக்கப்பட்டு வருகின்றது. ஆனால், எல்லா விடயங்களும் ஏதோ இரகசியமாகநடத்தப்படுகின்றது என்ற குற்றச்சாட்டுக்களை பல்வேறு தரப்பினரும்முன்வைக்கிறார்கள். ஏற்றுக்கொள்கின்றோம். சில விடயங்கள் இரகசியமாகத்தான்நடக்கின்றது. பேச்சுக்கள் சம்பந்தமான விடயங்கள் விரைவில் வெளிவரும். அதற்கானசூழலை ஏற்படுத்துவதில் நாங்கள் தீவிரமாக இறங்கியிருக்கின்றோம்.

நாங்கள் கடைப்பிடிக்கின்ற மெளனத்துக்கு காரணங்கள் இருக்கின்றன. எமதுமுயற்சிகள் தொடர்பில் வெளியில் பேசுவதில்லை என்ற உறுதியான தீர்மானத்தில்இருக்கின்றோம். எதைப்பற்றிப் பேசுகின்றோம், எப்படியான இணக்கப்பாடுகள் பேச்சுமேடையில் எட்டப்பட்டன போன்ற விடயங்கள் வெளியே தெரியவந்தால், அதில் பங்கெடுத்தஒவ்வொரு கட்சிகளும் தமது நிலைப்பாடுகளை பகிரங்கப்படுத்த வேண்டிய சூழல்ஏற்படும்.பகிரங்கப்படுத்திய பின்னர், பேச்சு மேசையில் இணக்கப்பாட்டை ஏற்படுத்தமுடியாது.

விடயம் தெரிந்தவர்களுக்கு இது விளங்கும். சில விடயங்களைச் சிலகாலத்தில் இரகசியமாக வைத்திருக்காவிட்டால் பேச்சு மேசை பலமற்றுப்போய்விடும்.இப்போது நடக்கின்ற அரசமைப்பு உருவாக்கம் பற்றிய வழிகாட்டல் குழுக்கூட்டங்களில் பல்வேறு முன்னேற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. கடந்த வெள்ளிக்கிழமைநடந்த கூட்டம் மாபெரும் திருப்பு முனையான கூட்டமாக அமைந்தது. நாட்டின்ஆட்சிமுறை எப்படி இருக்கவேண்டும், நாட்டின் ஆட்சியமைப்பு எப்படிஇருக்கவேண்டும் என்பதில் பெரிய முன்னேற்றம் காணப்பட்டிருக்கின்றது.

அரசமைப்பு வழிநடத்தல் குழுக் கூட்டங்களில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்தலைவர் இரா.சம்பந்தன் பேசினால் பிரதமர், ஜனாதிபதி மற்றையவர்கள் எல்லோரும்அமைதியாகி விடுவார்கள். அப்படியான முறைக்குள்ளால் எமது நகர்வுகள் நடந்துகொண்டிருக்கின்றன. இணக்கப்பாடுகள் பல எட்டப்பட்டுள்ளன.ஒரு முக்கியமான விடயத்தில் மாற்றம் வந்திருக்கின்றது.

அந்த மாற்றம் - திருப்பு முனை வருவதற்கு முன்னர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர் ஒருவர்சொன்னார், ஏன் நீங்கள் இதை மட்டும் இறுகப் பிடித்துக் கொண்டிருக்கின்றீர்கள்.ஏனைய விடயங்களில் நாங்கள் விட்டுக் கொடுத்திருக்கின்றோம்.காணி அதிகாரம், பொலிஸ் அதிகாரம், ஆளுநர் முறை மாற்றம் என்று எல்லாவற்றிலும்நாங்கள் விட்டுக் கொடுத்திருக்கிறோம். கூடுதலான அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும்என்று இணங்கியிருக்கின்றோம். இந்த ஒருவிடயத்தில் மட்டும் ஏன் இறுகப்பிடித்திருக்கின்றீர் என்று அவர் கேட்டார்.

அவருக்கு நான் சொன்னேன்,எங்களுக்கு இந்த விடயம் முக்கியம். எனவே, அதில் இறுக்கத்தைக் காட்டுகின்றோம்என்றேன்.கட்டாயம் இது நடக்கும் என்று கூறவில்லை. நடப்பதற்கு உரிய சந்தர்ப்பங்களைநாங்கள் செய்தோம் என்ற திருப்தி எங்களுக்கு இருக்கவேண்டும். எங்களால் இதுநடக்காமல் விட்டது என்ற குற்றச்சாட்டு சுமத்தப்படக்கூடாது என்பதில் உறுதியாகஇருக்கின்றோம்.

பேச்சு மேசையில் நாங்கள் செய்வது மட்டுமல்ல எங்கள் செயற்பாடும்அப்படி இருக்கவேண்டும். எனவே, சில சந்தர்ப்பங்களில் நேரம் பொருத்தமில்லை எனக்கூறுகின்றோம்.இதனை அடைவதற்கு நாங்கள் தடையாக இருந்தோம் என்று சர்வதேச சமூகமோ வேறு யாருமோஎங்களை குற்றம்சாட்டாதபடி நாங்கள் நடந்து கொள்கின்றோம்.

எங்கள் மக்கள் எங்களை நம்புவார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கின்றது.இடைக்கால அறிக்கை வெளிவருகின்றபோது எல்லாம் வெளிவரும். அதுவரைக்கும் மக்கள்நம்பிக்கை காக்க வேண்டும். சில சில விடயங்கள் நடக்குமா நடக்குமா என்றகேள்விகளை எழுப்பிக் கொண்டிருந்தால், எதுவும் நடக்காமலே போய்விடும்.

ஆட்சிமாற்றமும் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் நடக்குமா எனக் கேட்டுநம்பிக்கையிழந்திருந்தால் அது நடந்தேயிருக்காது என்று அவர் மேலும்தெரிவித்தார்.

6 comments:

  1. தமிழர்தீர்வுதொடர்பாக ரகசியம் பேணப்பட வேண்டும் இல்லாவிட்டால்.முஸ்லீம் அடிப்படை வாத குழுக்கள் தமிழர் தீர்வை குழப்பிவிட கூடும் (வழமை போல)

    ReplyDelete
    Replies
    1. உண்மைகசக்கும் சிந்தித்தால் இனிக்கும்.

      Delete
    2. After committing all possible atrocities you say that constitutional amendment should be in strict confidence. This statement ridicules and it is out of your ignorance of the process.Because, it is done in secret, it should come to parliament for voting.Do you believe the JHU,JVP,ACMC,joint opposition,selected members of UNP,SLFP and SLMC will vote for you in parliament? Imagine that you won in parliament, it should come to people in the eastern province for referendum.Will Muslims and sinhalese vote for you? Please don't dream for impossible things.
      Your total failure is due to your evil and malicious intention over Muslims.When leader Ashraff brought a draft constitution to parliament, only 8 votes needed to pass that amendment.He spoke with TNA. If that 8 votes had been given, problems of Tamils and Muslims would have been solved and 40000 innocent lives in Mullivaikal would have been saved from death.
      Tamils did not vote for it for their venomous thought that Muslims should not be given any rights. If you repeat the same again you will have to suffer for it.

      Delete
  2. Neenga thanda ettappan kulivinar.plate. EPRLF.Telo. Erose. ENDLF.endru Aeraththu ettu group.oruvarai oruvar oru innam endtru kudaparkkmal kondeer hale Athuvum muslimkalin idea thano.

    ReplyDelete
    Replies
    1. சம்பந்தமே இல்லாத பதிவு.

      Delete

Powered by Blogger.