Header Ads



மஹிந்த அமைச்சராக இருந்தபோது, அஷ்ரப் செய்த காரியம்

-Alhaj Mha Samad-

waffa farook அவர்கள் எழுதிய அனுபவபகிர்வு நான்சம்பத்தப்பட்ட ஒருநிகழ்வை நினைவூட்டியது

மகிந்த ராஜபக்ச தொழில்நுட்ப பயிற்ச்சி அமைச்சராக இருந்த பொழுது எனது கிழக்குமாகாண த்துக்கான தொளில்நுட்பகல்வி அபிவிருத்தி திட்டம் அமுல்நடாத்தபட்ட்து தலைவர் அஷ்ரப் நோராட்திடமிருந்து 100 மில்லியன் நிதிஉதவி பெற்றுத்தந்தார் அம்பாறை மாவட்டத்தில் 17 பிரேதேச பிரிவுகளிலும் ஒவொரு தொழில்நுட்ப நிலையமாக திறந்து வைத்தோம் மகிந்த ராஜபக்ச பிரதம அத்திதியாக வந்தார்.

தலைவர என்னிடம் சொன்னார் அம்பாறை உகனை தேஹியதகண்டி சம்மாந்துறை காரைத்தீவு கல்முனை நற்பிட்டிமுனை ஆகியன திறந்து முடிந்ததும் மகிந்தவை திருப்பி கொழும்புக்கு அனுப்பிவிடுவோம் என்னயவற்றி மறுநாள் நான் திறந்து வைக்கிறேன் என்றார்.

அதன்படி நான் ஒழுங்குசெய்தேன் கரைதிவு திறந்து முடிய மாலை 5மணி ஆகிவிட்டது அடுத்த சென்டர் கல்முனை. கல்முனை பஞ்சாலையில் உள்ள அந்த சென்டரை சட்டத்தரணி நிஸார் தான் கல்முனை எஸ் எல் எப் பீ இணைப்பாளர் என்று சொல்லிக்கொண்டு பலவந்தமாக திறந்து வைத்துள்ளார் எங்களுக்கு எதுவும் சொல்லாமல் இது நடைபெற்றது இந்த குழப்பமான நிலையில் பாதுகாப்புக்கரனங்களுக்காக மகிந்த்ரஜபகசவை அம்பாறைக்கு திருப்பி அனுப்பி விட்டு தலைவர் அஸ்ரப் அம்பாறை எஸ் பீ ஐ அழைத்து பின்வருமாறு கோபமாக கூறினார்.

இந்த முட்டாள் வேலையை செய்த நிசாரை நீங்கள் கைது செய்து கல்முனையில் ரிமாண்ட் பண்ணுகிறீர்களா அல்லது நான் எனது ஆட்களை ஏவி அவரின் கால் கைகளை உடைத்து ஒரு சொப்பின் பாக்கினுள் போட்டு உங்களிடம் தரட்டுமா என்றார் இல்லை இல்லை நான் இப்போதே அவரை அரெஸ்ட் பண்ணி களமுனையில் வைத்து மறுநாள் கோர்டில் சமர்பிக்கிறேன் என்றார் எஸ் பீ. அவ்வாறே நடைபெற்றது தலைவர் தலைவரே

No comments

Powered by Blogger.