Header Ads



அற்பப் பொருள்

ஹூஸைன் ஹாஜி
இவருக்கு இன்னொரு பெயர் பானம் ஹாஜியார்
(வானம் ஹாஜியார்)
இவருக்கு இந்த பெயர் வரக் காரணம்
இவரின் வீடு அவ்வளவு உயரமானது 
வானத்தை தொடுமளவுக்கு உயரமானது.
அவரின் வீட்டை நீங்கள் ஓரெயடியாக மேலிருந்து கீழே பார்த்தால் உங்கள் கலுத்து உலுக்கிவிடும்.
அந்த வீடு
இல்லை வீடு என்று சொல்ல முடியாது 
அந்த மாளிகை 8 மாடிகளை கொண்டது 
ஒவ்வொரு மாடியும்
ஒவ்வொரு விளையாட்டு மைதானத்துக்கு சமன் அவ்வளவு பெரியது
ஹூஸைன் ஹாஜியின் வீடு.
ஹூஸைன் ஹாஜி மிகுந்த மார்க்கப்பற்று கொண்டவர்
நேரத்துக்கு தொழுவதில் 
இவர் பள்ளி இமாமையே மிஞ்சியவர்
அதான் சொல்ல 15 நிமிடத்திற்கு முன்னரே 
என்ன முக்கிய வேலை இருந்தாலும் 
தூக்கி எரிந்து விட்டு மஸ்ஜித்கு சென்றுவிடுவார்.
அது மட்டுமல்ல 
ஹூஸை ஹாஜி தொழுவதனை பார்த்து 
பலரும் பேசிக்கொள்வதுண்டு
தொழுகை யென்றால் 
ஹூஸைன் ஹாஜியின் தொழுகை போல் இருக்க வேண்டும்.
அவர் எவ்வளவு பக்தியுடன் 
அல்லாஹ் மீது உள்ளச்சத்துடன் தொழுகிறார் என்பது
அவர் தொழுவதனை பார்த்தாலே புரியும்.
முன் பின் சுன்னத்துக்களை தவறவிடமாட்டார்
கட்டாயம் வருடத்தில் ஒரு முறையாவது அல்லாஹ்வின் வீட்டை கஃபாவை தரிசிக்காமல் இருக்கமாட்டார்.
எத்தனை பெரிய தக்வாதாரியாக இருந்தாலும்
மனிதன் என்ற வகையில் எல்லோரும் தவறு செய்வது சகஜம்.
அந்த வகையில் ஹூஸைன் ஹாஜி சின்ன சின்ன தவறுகள் செய்யாமலுமில்லை.
ஹூஸைன் ஹாஜியின் வீட்டுக்கு பக்கத்தில் ஒரு வீடு
அதனை வீடு என்று கூட சொல்ல முடியாது
ஹூஸைன் ஹாஜியின் வீட்டுடன் ஒப்பிட்டால்
ஹூஸைன் ஹாஜியின் வீட்டு பாத்ரூம் 
இந்த சிரிய வீட்டை விட பத்து மடங்கு பெரியது.
இந்த வீட்டுல இருப்பது ஸனூபா தாத்தாவும் அவரின் மகளும்
ஸனூபா தாத்தாவின் கணவன் இறந்து 10 வருடம் ஆகிறது.
வறுமை காரணமாக வயதுக்கு மீறிய உழைப்பில் ஈடுபட்டு
பாரிசவாதம் வந்து மிக சின்ன வயதிலேயே மௌத்தானவர் தான்
ஸனூப தாத்தாவின் கணவன் காதர் நாநா.
காதர் நாநா மௌத்தாகும் போது அவரின் ஒரே மகள் ஆமினாவுக்கு
வயது 1. இப்பொழுது ஆமினாவுக்கு வயது 10. 
ஸனூபா தாத்தா அங்கும் இங்கும் வீடுகளுக்கு சென்று
வீட்டு வேலைகள் செய்து தான் அன்றைய தின வருமானத்தையும் ஆமினாவின் படிப்பு செலவுக்கான செலவையும் தேடிக்கொள்கிறார்.
ஸனூபா தாத்தா வீட்டுக்கு சொந்தமான 2 அடி நிலத்தை ஆக்கிரமித்து தான்
ஹூஸைன் ஹாஜி அவரின் மதில்களை கட்டி இருக்கிறார்.
இந்த வீடும் காணியும் தந்தையை இழந்த அநாதை குழந்தையான ஆமினாவுக்கு சொந்தமாகப் போகின்றவை.
ஹூஸைன் ஹாஜியோடு போய் காணி சண்டை பிடிக்க
ஸனூபா தாத்தாவுக்கு எந்த பலமுமில்லை
ஹூஸைன் ஹாஜி தன் அரசியல் பலத்தை பயன்படுத்தி
இருக்கும் சிரிய வீட்டை கூட இருந்த இடம் இல்லாமல் செய்துவிடுவார்.
ஹூஸைன் ஹாஜியாரின் முன்னால் இருக்கும் வீடு
மஹ்மூத் நாநாட வீடு.
மஹ்முத் நாநாவின் வீட்டை பார்த்தவுடனே
எல்லோரும் ஒரு முடிவுக்கு வந்துவிடுவர்.
நிச்சயம் இது ஒரு வறுமைப்பட்ட பிச்சைக்காரன் ஒருவரின் வீடு என்ற முடிவுக்கு.
மஹ்மூத் நாநா பாரிசவாதத்தால் கட்டிலோடு கட்டிலாக இருப்பவர்
அவருக்கு 7 பெண்குழந்தைகள்
மஹ்மூத் நாநாவின் மூத்த மகள் தான்
தொழில் செய்து வீட்டை காப்பாற்றுகிறாள்.
மஹ்மூத் நாநாவின் மகள் 
ஏதோ தப்பான தொழில் செய்து தான்
பணம் சம்பாதிக்கிறாள் என்று ஊரில் பலவிதமான கதைகளும் அவதூறுகளும்
இல்லாமலுமில்லை.
பைஸல் ஹாஜி ஹூஸைன் ஹாஜியின் வீட்டுக்கு ஒரு வேலை நிமித்தம் வருகிறார்
மஹ்மூத் நாநாவின் வீட்டை பார்த்து 
பைஸல் ஹாஜி சொல்கிறார்
"பாவம் அந்த மனிதன் இந்த வீட்டில் இருந்கொண்டு 7 கொமருப் புல்லைகளையும் வைத்துக்கொண்டு என்ன பாடுபடுகிறாரோ தெரியவில்லை. மஹ்மூத் நாநக்கு ஏதாவது பெரிய உதவி செய்யனும்" என்றார்.
ஹூஸைன் ஹாஜி உடனே குறுக்கிட்டு
"பைஸல் ஹாஜி இந்த முஸீபத்து புடிச்ச வீட்டுக்கு உதவி செய்யப் போய்
நீங்க உங்க பெயர கெடுத்திக்கொள்ள வானம். 
உங்களுக்கு தெரியும் தானே அந்த வீட்டுல மூத்த புள்ள
என்ன தொழில் செய்ற"
என்று கூறி முடித்ததும்
அந்த வறுமைப்பட்ட நோயாளி மஹ்மூத் நாநாவுக்கு உதவி செய்ய முன்வந்த பைஸல் ஹாஜி அவர்களுக்கு உதவி செய்யும் எண்ணத்தை கைவிட்டுவிட்டார்.
மஹ்ரிப்கு அதான் ஒலி கேட்கிறது
ஹூஸைன் ஹாஜி தொழுகைக்கு விரைகிறார்.
பக்தியோடு தொழ ஆரம்பிக்கிறார்
சூரா பாதிஹாவை ஓதிவிட்டு
சூரா மாஊனை ஓதுகிறார்
ஹூஸைன் ஹாஜி
சூரா மாஊன் ஹூஸைன் ஹாஜியை சொல்கிறது....
மறுமைநாளை மறுப்பவனை நீ பார்க்கவில்லையா
அவன் தான் அநாதைகளுக்கு அநியாயம் செய்பவன்
ஏழைகளுக்கு உணவளிக்க தூண்டாதவன்
இந்தப் பண்புகளை கொண்ட தொழுகையாளிகளுக்கு கேடுதான் 
அழிவு தான் 
நாசம்தான்
அவர்கள் உண்மையாக தொழுவதில்லை 
தொழுவது போல் நடிக்கிறார்கள்
மக்களுக்கு காட்டுவதற்காகவே தொழுகிறார்கள்
இவர்கள் அற்ப பொருள்கைள கொண்டு கூட அடுத்தவர்களுக்கு உதவமாட்டார்கள்...
ஹூஸைன் ஹாஜியை பார்த்து மட்டுமல்ல
முழு சமூகத்தையும் பார்த்து தான்
சூரா மாஊன் அவ்வாறு சொல்கிறது
அடிமட்டவர்க்கத்துக்கு
வறுமைப்பட்ட வர்க்கத்துக்கு
உதவி செய்ய தூண்டுங்கள்
அவர்களை நோக்கி உங்கள் வேலைத்திட்டங்களை
முன்னெடுங்கள்
இல்லையேல் நீங்களும் மறுமைநாளை மறுப்பவர் தான்....

-ARM INAS-

3 comments:

  1. இது ஒரு கற்பனை கதையாக இருந்தாலும் இவ்வாறானவர்கள் பலர் எமது சமுதாயத்தில் நிச்சயமாக உள்ளனர் .

    ReplyDelete
  2. So true. Many rich people think that the prayer means just going to the mosque and perform Salaah. What about the duties to their poor neighbors??

    ReplyDelete
  3. Let us face the truth ! I don't know about this
    "Baanam Haji and Hussain Haji." But I know by
    experience , there are unbelievable amount of
    poor people who are incredibly ungrateful,evil,
    notorious,cruel,harsh,brutal and totally inhuman.
    It has become a fashion for many people to talk
    bad about all the rich and good about all the
    poor because the poor suffers a lot .What's true
    today is , there are more evil people among the
    poor than the rich . That's why the world tries
    to fight against poverty . The world is doing
    everything to fight against poverty because
    poverty is evil but this does not mean wealth is
    virtuous .Wealth and power in wrong hands are
    equally evil . But to think and believe that all
    poor are innocent , you will be badly mistaken .

    ReplyDelete

Powered by Blogger.