Header Ads



"என் மனைவி எந்த கட்சியை சேர்ந்தவர், என்பது எனக்கு தெரியவில்லை" நைஜீரியா ஜனாதிபதி

பெண்கள் சமையல் வேலைக்கு தான் தகுதியானவர்கள் என்ற அர்த்தத்தில் பேசியுள்ள நைஜீரியா நாட்டு ஜனாதிபதிக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

நைஜீரியா நாட்டு ஜனாதிபதியான முகமது புகாரியின் மனைவி அய்ஷா புகாரி சில தினங்களுக்கு முன்னர் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார்.

அப்போது, ‘ஜனாதிபதியான எனது கணவருடன் திருமண வாழ்க்கையை தொடங்கி 27 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால், அவர் சரியான முறையில் அரசை வழிநடத்துகிறாரா? என சந்தேகம் எழுந்துள்ளது.

ஜனாதிபதியின் கீழ் பணி செய்ய நியமிக்கப்பட்ட 50 அரசு அதிகாரிகளில் 45 பேர் யார் என்பது கூட அவருக்கு தெரியாது. ஜனாதிபதியின் கட்டுப்பாட்டில் அரசாங்கம் இருக்கிறதா? என சந்தேகமாக உள்ளது.

ஜனாதிபதியான எனது கணவர் உடனடியாக அரசு அதிகாரிகளை மாற்றி நியமிக்க வேண்டும்.

இந்நடவடிக்கையை அவர் மேற்கொள்ளாவிட்டால், அடுத்த ஜனாதிபதி தேர்தலில் எனது கணவருக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுப்பட மாட்டேன்’ என அய்ஷா புகாரி கூறியுள்ளார்.

இந்நிலையில், அரசு முறைப்பயணமாக முகமது புகாரி ஜேர்மனிக்கு நாட்டுக்கு விஜயம் செய்துள்ளார்.

ஜேர்மன் சான்சலர் மற்றும் முகமது புகார் ஆகிய இருவரும் ஒரே மேடையில் இருந்தபோது ஜனாதிபதியின் மனைவி கூறியதற்கு என்ன காரணம் என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

அப்போது சிரித்துக்கொண்டு முகமது புகாரி பேசியபோது, ‘என் மனைவி எந்த கட்சியை சேர்ந்தவர் என்பது எனக்கு தெரியவில்லை.

நைஜீரியா நாட்டு ஜனாதிபதியான நான் 3 மூன்று முறை வெற்றி பெற்று தற்போது 4-வது முறையாக ஜனாதிபதியாக பதவி வகித்து வருகிறேன்.

எனவே, அரசாங்கத்தை வழிநடத்த என் மனைவியை விட எனக்கு அனுபவம் அதிகம் உள்ளது.

என் மனைவி எந்த நோக்கத்தில் அவ்வாறு பதில் கூறினார் என எனக்கு தெரியாது.

ஆனால், அவர் என் வீட்டு சமையல் அறைக்கும், ஹாலிற்கும்(living room) மற்றும் ”மற்றொரு” அறைக்கும் மட்டுமே சொந்தமானவர்’ என முகமது புகாரி பதிலளித்துள்ளார்.

நைஜீரியா நாட்டு ஜனாதிபதி இவ்வாறு பதில் கூறியபோது அருகில் இருந்த ஏஞ்சலா மெர்க்கல் ஒருவித அதிருப்தியோடு அவரை பார்த்துள்ளார்.

மேலும், ஜனாதிபதியின் இந்த பதில் மூலம் ‘பெண்கள் அனைவரும் சமையல் வேலைக்கு தான் தகுதியானவர்களா?’ என சமூக வலைத்தளங்களில் பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

No comments

Powered by Blogger.