Header Ads



சர்வதேச முட்டை தினம்

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதத்தின் இரண்டாம் வெள்ளிக்கிழமை சர்வதேச முட்டை தினமாக கொண்டாடப்படுகிறது.

சர்வதேச முட்டை ஆணையத்தால் 1996-ஆம் ஆண்டிலிருந்து இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது. மக்களிடம் முட்டை பயன்பாட்டினை அதிகரிப்பதே இந்த தினம் கொண்டாடுப்படுவதன் முக்கிய குறிக்கோளாகும். 1996-ஆம் ஆண்டில் ஆஸ்திரியாவின் தலைநகர் வியன்னாவில் நடந்த சர்வதேச முட்டை ஆணையத்தின் மாநாட்டில்தான்,  அக்டோபர் மாதத்தின் இரண்டாம் வெள்ளியை சர்வதேச முட்டை தினமாக அனுசரிப்பது என்பது முடிவானது.

முட்டை என்னும் அற்புத உணவின் பயனையும், நமதுவாழ்வில் அது வகிக்கும் பங்கையும் உலக மக்களுக்கு  எடுத்துரைக்க உதவும் நாளாக இது அமைகிறது.


No comments

Powered by Blogger.