Header Ads



இலங்கைக்கு  கடத்தவிருந்த, வயகரா மாத்திரைகள் மீட்பு

-சென்னை-

மண்டபம் அருகே இலங்கைக்கு கடத்த முயன்ற போதைப் பொருட்களை பறிமுதல் செய்துள்ள பொலிஸார், முக்கிய கடத்தல்காரர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராமேஸ்வரம் அருகே கடல்வழியாக இலங்கைக்கு போதைப்பொருட்கள் கடத்தப்பட உள்ளதாக பொலிஸாருக்கு ரகசியத்தகவல் கிடைத்தது. இதனையடுத்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மணிவண்ணன் உத்தரவின் பேரில் சிறப்புபிரிவினர் ராமநாதபுரம் முதல் ராமேஸ்வரம் வரையிலான கடலோரப்பகுதிகளில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு வந்தனர். 

இந்நிலையில் மண்டபம் அருகே ராமேஸ்வரம் நோக்கி வந்த மாருதி ஆமினி வாகனத்தை மடக்கிப்பிடித்தனர். இதனையடுத்து மண்டபம் காவல்நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

 இதனைதொடர்ந்து  வாகனத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 2 இலட்சத்து 250 போதை மாத்திரைகள் மற்றும் வயகார மாத்திரைகளையும்  கடத்தலுக்கு பயன்படுத்தி வாகனத்தையும் பறிமுதல் செய்த பொலிஸார் ராமேஸ்வரத்தை சேர்ந்த இராஜகோபால், முருகன், மனோஷ்  ஆகிய  மூன்று பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

முதல கட்ட  விசாரணையில் சென்னையிலிருந்து ராமேஸ்வரம் அருகே தனுஷ்கோடி அரிச்சல் முனைக்கடல் பகுதிவழியாக படகு மூலம் இலங்கைக்கு கடத்திச் செல்ல முயன்றதாகவும் பறிமுதல் செய்யப்பட்ட கடத்தல் பொருட்களின்   மதிப்பு ரூ.50 இலட்சம்  எனவும்  பொலிஸார்  தெரிவித்தனர்.

சமீப காலமாக ராமநாதபுரம் கடலோரப்குதிகளிலிருந்து இலங்கை வழியாக வளைகுடா நாடுகளுக்கு கடல் அட்டை, கடல்குதிரை மற்றும் போதைப்பொருட்கள்  கடத்தப்பட்டுவருவது அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.