Header Ads



காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி அல்ல - பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம்


காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி அல்ல என்று பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மேலும், காஷ்மீர் பிரச்னை உள்பட இரு நாடுகளுக்கு இடையே நிலவிவரும் பல்வேறு பிரச்னைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண்பதற்கு இந்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த முன்வர வேண்டும் என்று அந்த தீர்மானத்தில் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. பாகிஸ்தான் நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டம் புதன்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், நாடாளுமன்றம் வெள்ளிக்கிழமை கூடியவுடன் பாகிஸ்தான் பிரதமரின் வெளியுறவு விவகாரங்களுக்கான ஆலோசகர் சர்தாஜ் அஸிஸ் தீர்மானம் கொண்டுவந்தார். அனைத்துக் கட்சி உறுப்பினர்கள் ஒருமனதாக ஆதரவு அளித்ததை அடுத்து, அந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தீர்மானத்தில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் குறித்து பாகிஸ்தான் வானொலியில் வெளியான தகவல் பின்வருமாறு:

காஷ்மீரில் நடைபெற்றுவரும் மனித உரிமை மீறல்கள் குறித்து சர்வதேச சமூகம் தனிப்பட்ட முறையில் விசாரணை நடத்த முன்வர வேண்டும். காஷ்மீரில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள பிரிவினைவாதிகள், சமூக ஆர்வலர்கள் ஆகியோரை இந்திய அரசு விடுவிக்க வேண்டும். காஷ்மீர் தங்கள் தேசத்தின் ஒரு பகுதி என்று இந்தியா கூறிவருகிறது. காஷ்மீர் இந்தியாவின் பகுதி அல்ல. அது சர்ச்சைக்குரிய பகுதி என்று பாகிஸ்தான் அரசு வானொலியில் செய்தி வெளியிடப்பட்டது.

6 comments:

  1. பாக்கிஸ்தானில் பாராலுமன்றம் இயங்குகிறதா?. அதுக்குள்ளே தீர்மாணம் வேற!. 😃😃

    அங்கு தினமும் குண்டு வெடிப்பதால் கிரிக்கட் விளையாடக்கூட ஒருவரும் போவதில்லை, இலங்கை உட்பட. 😳😳

    ReplyDelete
  2. Then what about Balochistan .which is fighting for freedom from pakistan

    ReplyDelete
  3. See these ltte terrorist loosers barking like dogs...

    ReplyDelete
  4. பாகிஸ்தானே இந்தியாவின் பழைய துண்டு தானே 😂😂😂😂

    ReplyDelete
  5. Ajan
    இலங்கையில் புலி காட்டு மிராண்டி தீவிரவாதிகளால் வெடிக்காத குண்டா உலகில் வேறு நாடுகளில் வெடிக்கின்றது? என்ன குண்டு வைத்து தீவிரவாதம் செய்த புலி பன்றிகள் முகவரி அற்று மண்ணோடு மண்ணாக செத்து ஒழிந்து விட்டார்கள் என்பதே ஒரு ஆறுதல்

    ReplyDelete
  6. Who can define Pakistan and Kashmir is a part of India? It was separate countries before British occupie their land. British rulers only created as one country for their administrative purpose. So, who is stupid now?

    ReplyDelete

Powered by Blogger.