Header Ads



அரசாங்கம் ஆபத்தை, சந்திக்க நேரிடும் - அநுரகுமார எச்சரிக்கை

அரச நிறுவனங்களை மறைமுகமாக தனியார் மயமாக்க முயற்சித்து வரும் அரசாங்கத்திற்கு எதிராக பெரிய பிரச்சாரம் ஒன்று நடாத்த ஜே.வி.பி திட்டமிட்டு வருகின்றது.

இவ்வாறு அரச நிறுவனங்களை தனியார் மயமாக்குவதால் அதிக ஆபத்து ஏற்படக் கூடிய வாய்ப்பு இருப்பதாக ஜே.வி.பியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

எனவே, இதற்கு எதிராக அரச நிறுவன ஊழியர்கள் தொழிற்சங்கங்கள் இணைந்து பெரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தனியார் மயமாக்க முயற்சித்து வரும் அரச நிறுவனங்களில் கொழும்பு துறைமுகம், கட்டுநாயக்க விமான நிலையம், கல்பிட்டி லகூன், ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலையில் உள்ள எண்ணெய் தாங்கி நிலையங்கள் ஆகியன உள்ளடங்குவதாகவும் இவ்வாறு தனியார் மயமாக்கினால் ஆபத்தை சந்திக்க நேரிடும் என திஸாநாயக்க எச்சரித்துள்ளார்.

மேலும், தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாகவே வருமானத்தை உயர்த்தும் நோக்கில் இவ்வாறு அரச நிறுவனங்களை தனியார் மயமாக்கும் நடவடிக்கையில் ஈடுப்பட்டு வருவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. All the government orgs must be given or converted as semi government orgs to increase the efficiency and for proper management and development

    ReplyDelete

Powered by Blogger.