October 27, 2016

பிரபாகரனுக்கு ஒரு பதில்...!

-யாழ் அஸீம்-

'தமிழினத்தின் நீண்ட பெருமைமிக்க வரலாற்றில் புதைந்து போன ஒரு வீர மரபு மீண்டும் புதுப்பிக்கப்பட்டிருக்கிறது'.

தேசியத் தலைவர் 
வே. பிரபாகரன்

இந்த வீர வசனமானது 1990 ஒக்டோபர் 30ம் திகதி யாழ் முஸ்லிம்களை அவர்களது தாயக மண்ணிலிருந்து விரட்டிவிட்டு யாழ் ஒஸ்மானியக் கல்லூரி முகப்புச் சுவரில் விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் அவர்களால் எழுதப்பட்டிருந்த வாசகமாகும்.

விடுதலைப் புலிகளின் போராட்டத்துக்கு எவ்வித இடையூறும் செய்யாது தமிழ் மக்களுடன் இரண்டறக் கலந்து வாழ்ந்த, நிராயுதபாணிகளான யாழ் முஸ்லிம்களை ஆயுதமுனையில் வெளியேற்றியதுடன் அவர்களது சொத்துக்களையும் சூறையாடி இனச்சுத்திகரிப்புச் செய்த ஈனத்தனமான செயலை ஒரு வீர மரபு எனக் குறிப்பிட்டிருப்பது நகைப்புக்கிடமானது. இரண்டு மணி நேரத்தில் இருநூறு ரூபாயோடு வேளியேற்றி, அவர்களது கண்ணீரையும், கவலைகளையும் மூலதனமாக்கி தன் மீது வரலாறு படைக்க நினைத்த அவரது கோழைத் தனமான செயலுக்கு வீரமரபு எனப் பெயரிட்டுள்ள பிரபாகரனின் முடிவு அராஜகங்கள் நிலைப்பதில்லை என்ற உண்மையை, வரலாறு எமக்கு கற்றுத் தந்த பாடமாகும்.

பிரபாகரனது இந்த வசனத்தை கண்ணுற்ற போது 'வரலாறு நீ எழுதுவதல்ல' என்ற தலைப்பில் 2006ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் பத்திரிகை ஒன்றில் எழுதப்பட்ட கவிதை இது. 

வரலாறு நீ எழுதுவதல்ல...
வரலாறு
நீயா எழுதுகிறாய்?
எழுத்தாணி அவன் கையில்
ஏடும் அவன் கையில்!

வல்லவன் அவனெழுதும்
வரலாற்றின் பாத்திரம் நீ...
எழுத்தாளன் அவனெழுதும் 
வெறும் எழுத்துத்தான் நீ!

வல்லவன் அவனெழுதும்
வரலாற்றுக்கு
முற்றுப்புள்ளி நீ வைப்பதா?
நீயே 
அவனிட்ட காற்புள்ளி
எனக்கென்ன
முற்றுப்புள்ளி நீ வைப்பது?
காற்புள்ளி 
உனக்கென்ன மமதை?
உனக்கும் அவனன்றோ
முற்றுப்புள்ளி வைப்பது!

எழுத்தாளன் அவனிருக்க
எழுத்துனக்கேன் ஆணவம்
அவன் கையில் நூலிருக்க 
ஆடும் பொம்மை 
உனக்கென்ன ஆணவம்

நிலை தடுமாறும் பொம்மையே!
நினைத்திடும் வேளை அவன் 
இழுத்திடும் போதினில்
நீ வீழ்வாய் ஓர் நாளில்!

ஆட விடுகிறான் - உன் 
ஆட்டம் தவறினால் 
அவுட்டாக்கி விடுகிறான்.
ஓட விடுகிறான் - உன் 
ஓட்டம் தவறினால் 
வீழ்த்தி விழுகிறான்.

எழுத விடுகிறான் - உன் 
எழுத்து தவறினால் 
அழித்து விடுகிறான்
உன்னையே!

சதுரங்கப் பலகையின் 
பகடைக்காயே!
பகல் கனவு காணாதே!
ராஜாவென்றும்... ராணியென்றும் 
பேரிட்டு அவன் உருட்டும்
பகடைக் காய் நீ!

நீ போடுகின்ற வேடமெல்லாம்
நிஜமல்ல..
ராஜா வேடம் ராணி வேடம்
புலி வேடம் பூனை வேடம்
இறைவன்தான் உனக்கு 
வேடம் போடுகிறான்...
பாத்திரம் நீ உணராவிட்டால்
பறித்து விடுகிறான்!

அடுத்தவன் வரலாற்றை 
அழிப்பது வரலாறல்ல...
வாழ வைப்பதுதான் வரலாறு...

சிந்தனை நெருப்பானால் - உன்
மெழுகுக் கோட்டை உருகி விடுகிறது...
சிந்தனை அழுக்கானால் - உன் 
வரலாற்றில் மாசு படிகிறது...

சிந்தனையை அழகாக்கு – உன் 
செயல் அழகாகும்...
சிந்தனையை தூய்மையாக்கு – உன் 
வரலாறும் புதுப்பிக்கப்படும்!

சிந்தனையிலும் செயலிலும் தூய்மை உருவாகவுமில்லை.. அவரது வரலாறும் மாசுபடிந்த வரலாறாக புதைந்து போனது.


11 கருத்துரைகள்:

முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்ட பின்னர்ஒஸ்மானியா கல்லூரி புலிகளின் இராணுவ கல்லூரியாக செயற்பட்டு வந்தது.குறித்த இராணுவ கல்லூரியின் நோகக்கு எல்லை யாக வே குறித்த வசனம் கல்லூரி வாசலில் எழுதப்பட்டிருந்தது.அந்த வாக்கியத்திற்கும் முஸ்லீம்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை.யாழ் அழிம் என்பவர் குறிப்பிட்டது தவறான தகவல் முஸ்லீம்கள் வெளியேற்றத்தை தமிழ னாக ஒரு மனிதனாக வன்மையாக கண்டிக்கிறேன் நியாயம் கற்பிக்க முடியாத தவறு அது.ஆனால் இவ்வாறான திரிவுபடுத்தப்பட்ட செய்திகள் குரோத உணர்வையே உருவாக்கும்.
புலிகளின் இராணுவ கல்லூரியி மகுட வாக்கியத்தை முஸ்லீம்களுடன் தொடர்பு படுத்தி ஆதாயம் தேடுவது இழிவான செயல்.

நெருப்பில் கூதல்காய கூடாது
அந்த அடிப்படையில் பொருள்யாருடையது என deeply have to think about this matter
Realy who is wrong ?????
So நடந்தது நடந்து முடிஞ்சி நடக்கவேண்டியதை பார்க்கவேண்டும்
தப்பு செய்தோர் மன்னிப்பு வேண்டியும் பாதிக்கப்பட்டோர் மன்னிப்பு ஏற்றும் நடந்தால் everything ok then அடுத்த நல்ல மக்கள் தமிழோ முஸ்லீமோ உருவாக வாய்புண்டு
If not எல்லோருடைய வாயிலும் பச்சகொசிகாய அரச்சி நன்ராக தேய்கனும் அதன் பின் ....தொடரும்

This comment has been removed by the author.

Mr. Kumar Kumaran அவர்கள் புலிகளின் இராணுவ கல்லூரியின் பணிப்பாளராக இருந்தார் போல.

பிரபாகரன் எனும் பகடைக்காயின் சிந்தனை நெருப்பானதால் இறைவன் வைத்தான் முற்றுப்புள்ளி .

புலிகளின் வீர வசனம் எழுத இனச்சுத்திகரிப்புச் செய்த யாழ் முஸ்லிம்களின் கல்லூரிதான் கிடைத்ததோ?

அகதி வாழ்வின் வலிகளும் அவலங்களும் அனுபவித்தவர்களுக்குத்தான் புரியும்.நடந்து முடிஞ்சு போச்சென்று இருப்பதற்கு நாம் மரக்கட்டைகளை? தமிழ் மக்கள் 83 படுகொலைகளுக்கு, மாவீரர் தினத்தை வருடாந்தம் நினைவு கூர்கின்றனர்.ஒவ்வொரு இனத்துக்கும் அவர்களது உணர்வுகளையும் உரிமைகளையும் வெளியிட உரிமை உண்டு. வடபுல முஸ்லிம் அகதிகளுக்கும் உரிமையுண்டு.இதை மறுப்பதற்கும் மறக்கும்படி கூறி எமது உணர்வுகளை கொச்சைப்படுத்தவும் எவருக்கும் உரிமையில்லை...

Engallku endrum tamil makkalaludan kuratham kedaiyathu.neer yar ena Emma ku theriyathu.but LTTE udaiya thavarai andru neengal anaivarum. Monamaha parthukondu ireentheerhala illaiya.sol maname sol.

@Abdul carder Azeem
அதற்காக பொய் கூறமுடியாது

அதற்காக வரலாற்றை திரிபு படுத்த முடியாது

யார் வலாற்றை திரிவுபடுத்துவது. தமிழர்களும் முஸ்லீம் ஜீகாத்தால் அழிவுகளை சந்தித்தனர்.உங்களைப்போல் நாம் அதைவைத்து அரசியல் செய்யவில்லை.பொய் கூறீ திரியவில்லை.

Post a Comment