Header Ads



"பேசாதே பேசாதே" - உயிரையும் இழக்க நேரிடலாம்...!

ஹெட்செட் மாட்டிக்கொண்டு வாகனம் ஓட்டியபடியே போன் பேசிச் செல்லும் பழக்கம் நம்மில் பலருக்கும் இருக்கிறது. ஒற்றைக் கையில் மொபைலை காதுக்குக் கொடுத்து மற்றொரு கையில் வாகனம் ஓட்டிச் செல்வதைக் காட்டிலும் இது மிகவும் பாதுகாப்பானது என்று நாம் நம்பிக் கொண்டிருக்கிறோம். ஆனால், ‘பயணங்களின் போது மொபைலில் பேசுவது என்பதே ஆபத்தானது... அது ஹெட்செட்டில் பேசினாலும் கூட’என்கின்றனர் மருத்துவத் துறையினர். 

வாகனங்கள் பெருகிவிட்ட இக்கால சூழலில் விபத்து விகிதங்களும் அதிகரித்திருக்கின்றன. சாலை விபத்துகளைத் தவிர்க்க வேண்டுமெனில் மிகுந்த கவனத்துடன் வாகனத்தை ஓட்டுவது அவசியமாகும். ஹெட்செட் மாட்டிக்கொண்டு பேசிச்செல்கிறோம் என்றால் வாயால் பேசி, காதால் கேட்கிறோம் அவ்வளவுதானே! அது எந்த விதத்திலும் வாகனத்தை ஓட்டுவதற்கு இடையூறாக இருக்காது என்று நினைக்கிறோம். அது தவறு. 

பேசும்போது அந்த விஷயங்கள் காட்சியாக நம் கண் முன்னே விரியும். அப்படியாக வாகனம் ஓட்டும்போது நமது உரையாடல் மூலம் விரிகிற காட்சி, சாலையின் மீதான கவனத்தைச் சிதறடிக்கும் எனக் கண்டறிந்திருக்கின்றனர். போன் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டுவது பாதுகாப்பற்றது என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும். இதனால் 
உயிரையும் இழக்க நேரிடலாம். 

No comments

Powered by Blogger.