Header Ads



"பெண்களுடன் இணையத்தில் உரையாடுவது, வருந்தக் கூடிய செயல்"

சவுதியில் திருமணம் ஆகாத ஆண், பெண் பழகுவது தண்டனைக்குரிய குற்றமாகும். அவ்வாறு யாரேனும் பழகினால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். இதுதவிர சிறையிலும் அடைக்கப்படுவர். இதனால் அந்நாட்டு இளைஞர்கள் பார்வை இணையதளங்களின் பக்கம் திரும்பியுள்ளது. இதனால் இணையதளங்களையும் சவுதி போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

சவுதியை சேர்ந்த அபு சின்(19) என்ற இளைஞர் கலிபோர்னியாவைச் சேர்ந்த கிறிஸ்டினா கிராக்கட்(21) என்ற பெண்ணிடம் இணையதளம் மூலம் பழகி வந்துள்ளார்.

இணையம் மூலமாக சில வாரங்கள் பேசிப் பழகியபின் கிறிஸ்டினாவிடம், ‘நான் உன்னைக் காதலிக்கிறேன்’ என்று கூற கிறிஸ்டினாவும் புன்னகையுடன் அபுவின் காதலை ஏற்றுக் கொண்டார். நான் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்று 
அபு விளையாட்டாக கிறிஸ்டினாவிடம் கேட்க, அவரும் நான் உன்னைத் திருமணம் செய்ய விரும்புகிறேன் என தெரிவித்தார்.

இவர்கள் உரையாடலைக் கண்காணித்த சவூதி போலீசார் நாகரிகம் மற்றும் மத மதிப்புகளை மீறியதாக அபு சின்னைக் கைது செய்து கடந்த மாதம் சிறையில் அடைத்தனர்.

தற்போது,பெயிலில் வெளிவந்திருக்கும் அபு சின் இனி சமூக வலைதளங்களை நீண்ட நாள் பயன்படுத்த மாட்டேன் என்றும் பெண்களுடன் இணையத்தில் உரையாடுவது வருந்தக் கூடிய செயல் என்றும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

7 comments:

  1. இது மனிதர்களுக்கு பொருத்தமில்லாத சட்டம். சவுதியின் காட்டுமிராண்டிச் சட்டத்தை எல்லாம் இஸ்லாம் என்று தவறாக விளங்கிக் கொள்ளக் கூடாது.

    ReplyDelete
    Replies
    1. இது உங்களைப்போன்ற மனிதக் கூத்தாடிகளுக்கு பொருத்தமில்லைதான். ஆனால் உண்மையான மூமின்களை உருவாக்க இவ்வாறான சட்டங்கள் மிக மிக அவசியம். ..
      அதனால் தான் இலங்கையிலும் கூட இஸ்லாமிய மதம் சார்ந்த அனைத்து இடங்களிலும் இந்தச்சட்டம் அமுலில். ...

      Delete
  2. பெண்களை வெறும் போகப்பொருளாக மட்டுமே கருதுபவர்களுக்குத்தான் இப்படியான விடயங்களெல்லாம் தோன்றும். சக மனிதனாக பழகக்கூடிய பக்குவத்தை வளர்க்கும் வாழ்க்கைமுறையைத் திட்டமிடாமல் காவல் சட்டமியற்றிப் பலனில்லை.

    ReplyDelete
    Replies
    1. You must learn Islam from beginning

      Delete
    2. மஹ்ரமி இல்லாத இருவர் எவ்வாறு சக மனிதன் என்றாலும் காதல் லீலை பாடுவது ஜஜ இது இலேக இருக்கலாம் கண்டகண்டவனோடல்லாம் பல் இழிப்பது ஆனால் இஸ்லாம்இடம் கொடுக்காது

      Delete
  3. யார் இந்த அசாத் கணேதன்ன இவருக்கு முதலில் இஸ்லாம் என்றால் என்ன என்பதை சொல்லி கொடுக்க வேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.