Header Ads



இனவாதத்துடன் செயற்பட்ட மஹிந்தவை, சந்திரிக்காவுக்கு எப்போதும் பிடிக்காது..!!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இனவாத கொள்கைகளை பின்பற்றினார் என முன்னாள் அமைச்சர் டியு.குணசேகர தெரிவித்துள்ளார்.

கொழும்பு வார இறுதி ஊடகம் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,

முன்னாள் ஜனாதிபதி சந்திரக்கா பண்டாரநாயக்கவிற்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராபஜக்ஸவிற்கும் எந்தக் காலத்திலும் இணக்கம் இருக்கவில்லை.

ஒருவரைக் கண்டால் ஒருவருக்கு எப்போதுமே பிடிக்காத நிலைமையே காணப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டள்ளார்.

அரசியல் ரீதியாகவும் சந்திரிக்கா இடதுசாரி கொள்கைகளை பின்பற்றினார் மஹிந்த இனவாத அடிப்படையிலேயே எப்போதும் செயற்பட்டார்.

மாத்தறையில் நடைபெற்ற ஒரு பாத யாத்திரையின் போது மஹிந்த சந்திரிக்காவை நேரடியாக தகாத வார்தையினால் திட்டியுள்ளதாகவும் டியு.குணசேகர கூறியுள்ளார்.

மேலும், எந்தக் காலத்திலும் இருவருக்கும் இடையில் இணக்கப்பாடு இருந்ததில்லை. ஜனாதிபதி வேட்பாளராக மஹிந்தவை நியமிப்பதிலும் சந்திரிக்காவிற்கு பெரிதாக உடன்பாடு இருக்கவில்லை.

இதேவேளை, மஹிந்தவின் ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு தொடர்பிலும் அமைச்சருடன் சந்திரிக்கா நீண்ட நேரம் பேசியதாகவும் தெரிவித்துள்ளார்.

எஸ்.பி திஸாநாயக்கவும்,மங்கள சமரவீரவுமே மஹிந்தவை என்னை விட்டு பிரித்தனர் என சந்திரிக்கா கூறினார்.

அவ்வாறு இல்லாவிட்டால் மஹிந்தவை சிறந்த பிரதமராக பயன்படுத்தியிருக்க முடியும் என சந்திரிக்கா டியு.குணசேகர தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

எனினும் குறித்த சந்தர்ப்பத்தில் தேசிய ரீதியில் மக்களினால் ஏற்றுக்கொண்ட ஒரே தலைவராக மஹிந்த இருந்தகாரணத்தினால் மஹிந்தவை சந்திரிக்கா விருப்பமின்றியேனும் ஜனாதிபதி வேட்பாளராக பெயரிட்டதாகவும் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது, நான் சந்திரிக்காவுடன் பேசிவிட்டு வந்து “ பச்சை சமிக்ஞை கிடைத்துள்ளது வாயை மூடிக் கொண்டு இருக்க வேண்டும்” என மஹிந்தவிற்கு தொலைபேசி மூலம் தெரிவித்ததாகவும் கூறியுள்ளார்.

இவ்வாறான ஓர் நிலையில் மஹிந்த ஜே.வி.பி மற்றும் ஜாதிக ஹெல உறுமயவுடன் வேட்பாளராக இருக்கும் போதே உடன்படிக்கை கைச்சாத்திட்டார்.

இது தொடர்பில் சந்திரிக்கா கடும் கோமடைந்திருந்தார். பின்னர் நான் மைத்திரிபால சிறிசேனவையும் நிமால் சிறிபால டி சில்வாவையும் அழைத்து சென்று சந்திரிக்காவை சமாதானப்படுத்தியதாகவும் முன்னாள் அமைச்சர் கூறியுள்ளார்.

இதேவேளை, மஹிந்தவின் தேர்தல் பிரச்சாரத்தின் போது சந்திரிக்கா முதல் இரண்டு கூட்டங்களில் மட்டுமே பங்கேற்றார் பின்னர் அவர் பிரச்சாரப் பணிகளிலிருந்து முற்றிலுமாக விலகிக்கொண்டார் என டியு.குணசேகர தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. மேலும், எந்தக் காலத்திலும் இருவருக்கும் இடையில் இணக்கப்பாடு இருந்ததில்லை. ஜனாதிபதி வேட்பாளராக மஹிந்தவை நியமிப்பதிலும் சந்திரிக்காவிற்கு பெரிதாக உடன்பாடு இருக்கவில்லை.////விட்ட தவறு நாடு அழிந்து விட்டது...

    ReplyDelete

Powered by Blogger.