Header Ads



தனது தாய் குறித்து, புதிதாக துறவறம் பூண்ட பௌத்த பிக்கு முறைப்பாடு

தனது தாயிடம் வசித்து வரும் தனது இளைய சகோதரருக்கு தாய், தினமும் இரவில் தூக்க மாத்திரையை கொடுத்து, தனது கள்ளக் கணவனை வரவழைப்பதாக புதிதாக துறவறம் பூண்டுள்ள இளம் பிக்கு ஒருவர் முறைப்பாடு செய்துள்ளார்.

தூக்க மாத்திரைகள் கொடுக்கப்பட்டதால் தனது சகோதரனுக்கு அதிகம் போதை ஏற்பட்டுள்ளதாகவும் இளம் பிக்கு முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

தனது சகோதரனுடன் கொப்பிட்டிகொல்லாவ நீதவான் நீதிமன்றத்தின் சிரேஷ்ட தகுதிகாண் அதிகாரியான கே.கே. கீர்த்திரத்னவிடம் பிக்கு இந்த முறைப்பாட்டை செய்துள்ளார்.

இளைய சகோதரருக்காக தனது தந்தை மாதாந்தம் 5 ஆயிரம் ஜீவனாம்சம் கொடுத்து வருவதாகவும் அதனை தனது தம்பியின் கல்விக்கோ அவரது வேறு தேவைகளுக்கோ செலவிடுவதில்லை எனவும் முறைப்பாட்டில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இளைய சகோதரரை ஜீவனாம்சத்தை பெற்றுக்கொள்ளும் நோக்கிலேயே தாய் வீட்டில் வைத்திருப்பதாகவும் அவர் மீது கொண்ட பாசத்தில் அல்ல எனவும் பிக்கு கூறியுள்ளார்.

மேலும் தனது தம்பியின் வாழ்க்கை பாதுகாப்பற்றதாக உள்ளது எனவும் பிக்கு தெரிவித்துள்ளார்.

சிரேஷ்ட தகுதிகாண் அதிகாரி பிக்குவின் சகோதரரிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்.

தனது தாய் தன்னை சித்திரவதை செய்வதாகவும் தினமும் சாப்பிடுவதற்காக மாத்திரை ஒன்றை கொடுப்பதாகவும் சிறுவன், தகுதிகாண் அதிகாரியிடம் தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணை கொப்பிட்டிகொல்லாவ பொலிஸ் நிலையத்தின் சிறுவர் மற்றும் பெண்கள் பணிகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இளைய சகோதரனை பிக்கு தான் வசித்து வரும் விகாரைக்கு அழைத்துச் செல்ல பொலிஸார் அனுமதி வழங்கியுள்ளனர்.

2 comments:

  1. பாவம் சின்ன பிள்ளைகள் அவர்கள் தன்னையே பாதுகாத்துக்கொள்ள தகுதியற்றவர்கள் அவர்களை பாதுகாத்துக்கொள்ளுவது பெற்றோர் சமூகத்தின் கடமை.
    இலங்கையிலுள்ள எல்லா சிறுவர் இல்லங்களும் அடிக்கடி பரிசோதனை செய்யப்பட வேண்டும் ஏனெனில் அங்கும் முறையற்ற விதத்தில் செயல்பாடுகள் அவ்வப்போது நடைபெறுகிறது.

    ReplyDelete
  2. I am very sorry hear the sad news thes two boys.

    ReplyDelete

Powered by Blogger.