Header Ads



ஆவா குழு என்று கருதியே, மாணவர்கள் மீது துப்பாக்கிச் சூடு - அமைச்சர் சாகல

யாழ்ப்பாணத்தின் வாள்வெட்டு கும்பலான ஆவா குழு என்று கருதியே மாணவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாண துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் கருத்து வெளியிடும் போது சட்டம், ஒழுங்கு மற்றும் தென்பிராந்திய அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர் சாகல ரத்நாயக்க,

யாழ்ப்பாணத்தில் வாள், ஆவா கும்பல் என்ற பெயரில் கத்திகள் கொண்டு கொள்ளை, வாள்வெட்டு சம்பவங்களில் ஈடுபடும் கும்பல் ஒன்று உள்ளது.
இவர்களைக் கட்டுப்படுத்துவதற்காக பொலிசார் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளனர். சோதனைச் சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன.
இவ்வாறான நிலையில் துப்பாக்கிச் சூட்டில் இறந்த இரண்டு மாணவர்களும் பொலிஸ் சோதனைச் சாவடியொன்றில் அவர்களின் வண்டியை நிறுத்துமாறு உத்தரவிட்டபோதும் அவர்கள் அதனை மீறிப் பயணித்துள்ளார்கள்.
அதன்போது முன்னால் இருந்த சோதனைச் சாவடியொன்றில் இருந்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் அவர்கள் உயிரிழந்துள்ளனர்.
குறித்த மாணவர்கள் இரண்டு பேரும் ஆவா குழு என்று பொலிசார் தவறாக கருதியதன் காரணமாகவே அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் சாகல ரத்நாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. நல்ல கற்பனைத் திறன் அமைச்சரே..

    மோட்டார் சைக்கிளைச் செயலிழக்கச் செய்ய அதன் சக்கரங்களுக்குச் சுட்டிருந்தால் கூடப் போதுமே!

    ReplyDelete

Powered by Blogger.