Header Ads



அப்துர் ரஹ்மானின் BCAS Campus, முதல்தர உயர்கல்வி நிறுவனமாக தெரிவு


Pearson ( Edexel UK ) நிறுவனத்தின் அதியுயர் விருதான 'பிளற்றினம்' விருது BCAS CAMPUS  நிறுவனத்திற்கு வழங்கபட்டுள்ளது. இலங்கையில் BTEC HND பாடநெறிகளை வழங்கிவரும் உயர்கல்வி நிறுவனங்களுக்கு மத்தியில் முதல்தர  நிறுவனமாக தெரிவு செய்யப்பட்டதன் காரணமாகவே இந்த அதியுயர் விருதானது, BCAS CAMPUS க்கு வழங்கப்பட்டுள்ளது. கடந்ந 25.10.16 அன்று கொழும்பு 'கோல் பேஷ்' ஹோட்டலில் இடம்பெற்ற Pearson UK நிறுவனத்தின் உயர்கல்வி நிறுவனங்களுக்கான நிகழ்வின் ( Higher Education Forum) போதே இந்த முதல் தர  சிறப்பு விருது BCAS CAMPUSற்கு வழங்கப்பட்டுள்ளது. 

இந்நிகழ்வின் போது, 'பிளெற்றினம்' என்ற முதல்தர விருதிற்கு அடுத்த, இரண்டாம் நிலை விருதான 'கோல்ட்'  விருது E-Soft  நிறுவனத்திற்கும் , மூன்றாம் நிலை விருதான 'சில்வர்' விருது CSCT ( Colombo School of Construction Technology) கிடைத்துள்ளன.  இந்நிகழ்வின் பிரதம அதிதியாக கலந்து கொண்ட Pearson UK நிறுவனத்தின் உயர் அதிகாரியான Jane Baker என்பவரினால் இந்த விருதுகள் வழங்கி வைக்கப்பட்டன.

 கடந்த 18 வருடங்களாக இலங்கையின் தனியார் துறை உயர்கல்வியில் முன்னோடியாகவும் முன்னணி நிறுவனமாகவும்  திகழும்  BCAS CAMPUSஇன் தூர நோக்கு, கல்வித்தரம், தொழில் சந்தைக்கேற்ற பயிற்சிகள், மாணவர் தொழில்வாய்ப்பு என்பவற்றுக்கான சான்றுகளாக பலவகையான சர்வதேச விருதுகளை BCAS நிறுவனம் இவ்வருடத்தில் பெற்றிருக்கிறது. அந்த வகையில் Pearson,UK நிறுவனத்தின் அதி உயர் விருதானது இலங்கையிலுள்ள தனியார் உயர்கல்வி நிறுவனங்களுக்கு மத்தியில் BCAS CAMPUS இன் தனித்துவத்தினை மேலும் நிரூபிப்பதாக அமைந்துள்ளது. 

கடந்த 2002ம் ஆண்டு BTEC HND பாடநெறிகளை  இலங்கையில் ஆரம்பித்த BCAS  நிறுவனமானது தற்போது தொழிற்சந்தைக்கேற்ற அதிகமான துறைகளில் இந்த கற்கை நெறிகளை வழங்கி வருகின்றது. அந்த வகையில் Civil Engineering, Computing, Quantity Surveying , Business Mgt, Bio Medical Sciences, Law, Electrical& Electronic Engineering   ஆகிய   துறைகளில்  பட்டப்படிப்பு பாடநெறிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

 இலங்கையில் கொழும்பு, கல்கிஸ்ஸை, கண்டி, குருணாகல், கல்முனை ,மட்டக்களப்பு மற்றும் யாழ்ப்பாணம்  ஆகிய நகரங்களில் பிரதான மற்றும் பிராந்திய வளாகங்களை BCAS கொண்டுள்ளதன் காரணமாக நாட்டின் சகல பாகங்களையும் சேர்ந்த மாணவர்கள் HNDபாடநெறிகளை கற்றுக்கொள்ளக்கூடிய வாய்ப்பு காணப்படுகின்றது. இப்பாட நெறிகளைத் தொடர்ந்து  இலங்கையிலேயே Top-Up Degree எனும் 1 வருட கால பாடநெறியினை பூர்த்தி செய்வதன் மூலம் மாணவர்கள் சர்வதேச இளமானிப் பட்டங்களை இலங்கையிலேயே முழுமையாக பூர்த்தி செய்து கொள்ளக்கூடிய வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த உயர்கல்வி பாதையினூடாக இங்கிலாந்திலுள்ள சிறந்த  பல்கலைக்கழகங்களான Uni of Wolverhampton மற்றும், London SouthBank University  என்பன நேரடியாக வழங்கும் BSc(Hons), BEng(Hons), LLB(Hons) ஆகிய பட்டப்படிப்புகளை மிகக்குறைந்த செலவிலும் மிகக்குறுகிய காலத்திலும் ( 3 வருடங்கள்)மாணவர்கள் பெற்றுக்கொள்ள முடிகின்றது.

 தற்போது கிடைத்திருக்கும் இந்த அதி உச்ச விருதுக்கு முன்னர் QSi நிறுவனத்தின் முக்கிய விருதொன்றினையும் அத்துடன் SAPS  நிறுவனத்தின் தெற்காசிய விருதொன்றினையும் BCAS CAMPUS அண்மையில் பெற்றுக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். 


3 comments:

  1. Well done brother Abdul Rahman for your innovative venture n opening new vista's in the field of education .

    ReplyDelete
  2. Alhamdulillah - May Allah reward you immensely for your efforts in educating the people.

    ReplyDelete
  3. இலங்கையை பொருத்தமட்டில் 3 வழி கலிள் சம்பாதிக்கலாம்
    1. அரசியல்
    2. சமயத்தைவைத்து
    3. படிப்புரீதியாக
    This is real point by the king

    ReplyDelete

Powered by Blogger.