Header Ads



4 வய­து சிறு­மியின், காதுக்­குள்­ளி­ருந்து 80 புழுக்­கள் அகற்­றம்


4 வய­தான ஒரு சிறு­மியின் காதுக்­குள்­ளி­ருந்து சுமார் 80 புழுக்­களை மருத்­து­வர்கள் அகற்­றி­யுள்­ளனர். 
இந்­தி­யாவைச் சேர்ந்த மத்­திய பிர­தேச மாநி­லத்தின் தார் எனும் கிரா­மத்தைச் சேர்ந்த இச்­சி­று­மியின் இடது காதில் ஒரு வாரத்­துக்கு முன்னர் கடு­மை­யான வலி ஏற்­படத் தொடங்­கி­யது.
ஆரம்­பத்தில், இச்­சி­றுமி சாதா­ரண உபா­தையை பெரி­து­ப­டுத்­து­கிறாள் என அவளின் பெற்றோர் எண்­ணி­னராம். ஆனால், இச்­சி­றுமி வேத­னையால் அழத் தொடங்­கி­ய­தை­யடுத்து கடந்த 8 ஆம் திகதி இச்­சி­று­மியை பெற்றோர் வைத்­தி­ய­சா­லைக்கு அழைத்துச் சென்­றனர்.
அங்கு இச்­சி­று­மியை பரி­சோ­தித்த மருத்­து­வர்கள், சிறு­மியின் இடது காது மிக அழுக்­க­டைந்­தி­ருப்­பதை கண்­ட­றிந்­தனர். காதில் இருந்து துர்­நாற்­றமும் வீசி­யது. 
இச்­சி­று­மியின் காதில் Genus Chrysomya எனும் பூச்சி கிடப்­ப­தையும் அது 80 இற்கு மேற்­பட்ட முட்­டை­க­ளை­யிட்­டி­ருப்­ப­தையும் அறிந்து தான் பெரும் அதிர்ச்­சி­ய­டைந்­த­தாக, இவ்­வைத்­தி­ய­சா­லையில் காது, மூக்கு, தொண்டை சிகிச்சைப் பிரி­வுக்குப் பொறுப்­பான டாக்டர் ராஜ்­குமார் முந்த்ரா தெரி­வித்தார். 
“இது­போன்ற 2,3 பூச்சி முட்­டை­களைக் கொண்­டி­ருந்த நோயா­ளி­களை நாம் கண்­டுள்ளோம். ஆனால், இவ்­வ­ளவு பெருந்­தொ­கை­யான முட்­டைகள் காதுக்குள் இருந்­ததை நாம் கண்­டமை இதுவே முதல் தடவை என அவர் கூறினார்.
நக­ராமல் இருப்­ப­தற்­காக அவற்றை முதலில் கொன்றோம். அதன்பின் 70 புழுக்­களை அகற்றினோம்.
இரண்டாவது தடவையில் எஞ்சியிருந்த 10 புழுக்களையும் அகற்றினோம்” எனவும்   டாக்டர் ராஜ்குமார் முந்த்ரா தெரிவித்தார்.


No comments

Powered by Blogger.