நுரைச்சோலை அனல் மின்நிலையத்தில் மூன்று இயந்திரங்கள் வெடித்தமைக்கான காரணத்தினை கண்டுபிடிப்பதற்கு விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
இதன்படி மின்சார சபையின் விசேட நிபுணரான ஜனக ஏக்கநாயக்க தலைமையில் இக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.
மின்சக்தி மற்றும் மீள்புதுபிக்கதக்க சக்தி அமைச்சர் ரன்ஜித் சியம்பலாபிட்டியவினால் இக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. இதன்பிரகாரம் மேற்படி குழுவின் அறிக்கை இன்னும் இரு வாரத்தில் அமைச்சரிடம் சமர்பிக்கப்படவுள்ளது.
(எம்.எம்.மின்ஹாஜ்)
0 கருத்துரைகள்:
Post a Comment