Header Ads



"அலெப்போ, இன்னும் 2 மாதங்களில் அழிந்துவிடும்”


சிரியாவில் சுமார் 2 .5லட்சம் பொது மக்கள் சிக்கியுள்ள கிளர்ச்சியாளர்கள் பிடியில் இருக்கும் அலெப்போவின் கிழக்கு பகுதியில், குண்டு தாக்குதல்களை நிறுத்துமாறு உணர்ச்சிமிக்க வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார் ஐ.நாவின் சிரியாவிற்கான சிறப்பு தூதர் ஸ்டபன் டி மிஸ்டுரா.

அலெப்போ நகரையும் அதன் மக்களையும் அழிக்க, முன்னாள் நூஸ்ரா அமைப்பைச் சேர்ந்த 900 இஸ்லாமியவாத போராளிகளின் இருப்பை தொடர்ந்து காரணம் காட்டினால், சிரியாவிற்கும் ரஷியாவுக்கும் வரலாறு நீதி புகட்டும் என அவர் தெரிவித்துள்ளார்

அலெப்போவை விட்டு வெளியேறி அங்கு ஏற்பட்டு கொண்டிருக்கும் துயரங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு நூஸ்ரா போராளிகளிடம் நேரடியாக கோரிக்கைவிடுத்துள்ளார் மிஸ்டுரா.

அவர்கள் வெளியேறும் போது, அவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய, தானே அவர்களுடன் செல்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது நடந்துவரும் வன்முறைக்கு முடிவு கட்டவில்லையென்றால், அலெப்போ இன்னும் இரண்டு மாதங்களில் அழிந்துவிடும் என அவர் தெரிவித்துள்ளார்.

நூஸ்ரா அமைப்பினர் வெளியேற வேண்டும் என்ற கருத்தை ரஷிய வெளியுறவுத் துறை அமைச்சகம் வரவேற்றுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், அலெப்போவில் போர் நிறுத்தம் செய்வதற்கு ரஷியாவை ஒப்புக் கொள்ள வைப்பதை இலக்காக கொண்ட பேச்சுவார்த்தை ஒன்றிற்காக ரஷியத் தலைநகர் மாஸ்கோ வந்துள்ளார் ஃபிரான்ஸின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷான் மார்க் ஐரோ.

அலெப்போ நகரின் கிழக்கு பாதியில், நடக்கும் தாக்குதல்களை அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

சிரியா அரசு படைகள் அங்கு போர் குற்றம் புரிந்துவருவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் ஐ.நா.,வின் பாதுகாப்பு கவுன்சிலில் ஃபிரான்ஸ் முன்மொழியும் புதிய போர் நிறுத்த உடன்பாட்டு திட்டத்திற்கு அனைத்து தரப்பு ஆதரவையும் பெற வாஷிங்டன் செல்லவுள்ளார்.


1 comment:

  1. Notorious criminal Vladimir puttin must be beheaded at the ICC. He is a real menace to the public in Syria.

    ReplyDelete

Powered by Blogger.