Header Ads



சமூகத்தின் உரிமைக் குரலாக, நவமணி அகவை 21 இல்

-என்.எம். அமீன்-

நவமணி வார இதழ் இன்று அகவை 21 இல் காலடி வைக்கிறது. இற்றைக்கு 20 வருடங்களுக்கு முன் அதாவது 1996 ஆம் ஆண்டு அக்டோபர் 19 ஆம் திகதி நவமணி வார இதழ் ஆரம்பிக்கப்பட்டது.  இலங்கை முஸ்லிம்களால் நடத்தப்படும் தேசிய பத்திரிகை ஒன்று இல்லாத நீண்டக்காலக் குறையை நிவர்த்தி செயும் நோக்கிலே நவமணி ஆரம்பிக்கப்பட்டது. 

இலங்கை முஸ்லிம்களின் பத்திரிகை வரலாற்று தோற்றுவா 1869 ஆம் ஆண்டாகும். அலாமத் லங்காபுரி என்ற கல்லச்சு பத்திரிகையே முஸ்லிம்களால் வெளியிடப்பட்ட முதற் பத்திரிகையாகும். அதன் பின்பு முஸ்லிம் நேசன் என்ற வாரப் பத்திரிகை மற்றும் தினத்தபால் என்ற தினசரி முஸ்லிம்களால் வெளியிடப்பட்ட போதும் பிற்காலத்தில் இத்துறையில் முஸ்லிம்கள் அக்கறையற்றவர்களாகவே  இருந்தார்கள். 

முஸ்லிம்களால் நடத்தப்படும் தேசிய பத்திரிகைகள் இல்லாமையை இனப்பிரச்சினை மும்முரமடைந்த போதும் சமூகம் உணரத் தொடங்கியது. இதன் ஒரு முயற்சியாகவே நவமணி வார இதழ் ஆரம்பிக்கப்பட்டது. 

நவமணி வார இதழ் கடந்த 20 வருட காலத்தில் முஸ்லிம் சமூகத்தின் குரலாக மட்டுமன்றி அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாகவும் வெளிவந்து கொண்டிருக்கிறது. 

நவமணி அதன் இரு தசாப்தத்தை நோக்கிய பயணத்தில் முஸ்லிம் சமூகம் நாடளாவிய ரீதியில் எதிர்நோக்கும் பிரச்சினைகளை வெளிக்கொணர்வதற்கு களமமைத்துக் கொடுப்பதில் முக்கிய பங்காற்றியது. அப்பணியின் போது நவமணி இயன்றளவில் எப்பக்கமும் சாராது தன் பணியை முன்னெடுத்ததன் காரணமாகவே இரு தசாப்தங்கள் வரை இப்பத்திரிகையால் நீடித்து நிலைத்து நிற்க முடிந்துள்ளது. 

நவமணி அதன் பணியைத் தொடரும் போது பல சவால்களையும் அச்சுறுத்தல்களையும் எதிர்நோக்கியது. நவமணி அலுவலகம் ஒரு கட்டத்தில் தீவைக்கப்பட்டது. அப்படியிருந்தும் எமது பணியை நிறுத்தாது நாம் முன் தொடர்ந்து வந்துள்ளோம். எவ்வித அச்றுத்தல்கள் வந்தாலும் ஊடக ்தந்திரத்தை பேணி, எம் பணி தொடரும். 

எந்தவொரு விடயத்திலும் முஸ்லிம் சமூகத்தின் நிலைப்பாடு என்ன என எவரும் அறிய விரும்பினால் அவர்கள் நவமணியையே நாடுகிறார்கள். தனக்கென சோந்த அச்சகமோ, அலுவலகமோ இல்லாமல் நவமணி கடந்து வந்த பாதை கல்லும் முள்ளும் நிறைந்தது. 

இந்தப் பணியின் ஒரு கட்டமாகவே 2015 மே மாதம் 19 ஆம் திகதி நவமணி அதன் நாளிதழ் பயணத்தை ஆரம்பித்தது. வார இதழும், நாளிதழும் பல்வேறு சவால்களுக்கு மத்தியில் அதன் பயணத்தை முன்னெடுத்துச் செல்கின்றது. 

எமது இந்த பயணத்தைத் தொடர்வதற்கு எமக்கு ஆதரவு வழங்கிய சகலருக்கும் எமது நன்றியைப் பதிவு செவதில் மகிழ்ச்சியடைகின்றோம். எமது அன்புக்குரிய வாசகர்கள், விளம்பரதாரர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் எமது பணிப்பாளர்களின் ஒத்துழைப்பும், ஆதரவும் கிடைத்திருக்காவிடின் எமக்கு, 2 வருடங்களை கடந்திருக்க முடியாது. 

அச்சு ஊடகங்களையெல்லாம் ஒதுக்கித் தள்ளி சமூக ஊடகங்களும், இலத்திரனியல் ஊடகங்களும் அரசோச்சுகின்ற இந்த யுகத்தில் நவமணிக்கு இருபதாவது வருடத்தில் காலடி வைக்க முடிந்தது நாமடைந்த வெற்றியே. 

அகவை 21 இல் காலடி வைத்துள்ள நவமணி நாட்டில் இனங்களுக்கிடையே நல்லிணக்கத்துக்காக, மனித சமூகத்தின் உரிமைகளை வென்றெடுக்கும் குரலாக, குறிப்பாக அதனை ஸ்தாபித்த ஸ்தாபகர்களது இலக்கான முஸ்லிம் சமூகத்தின் குரலாகவும் தொடர்ந்து செயற்படும் என்றும் இச்சந்தர்ப்பத்தில் உறுதி தெரிவிக்கின்றோம். 

எமது நேர்மையான இப்பயணத்தைத் தொடர்வதற்கு வாசகர்களின் ஆதரவையம், ஆலோசனைகளையும் வேண்டி நிற்கின்றோம். 

No comments

Powered by Blogger.