Header Ads



2017 இல் ஹஜ் செய்ய, நாடியுள்ளோர் பதிவு செய்க

அடுத்த வருடம் ஹஜ் கட­மையை மேற்­கொள்ளத் திட்­ட­மிட்­டி­ருப்­ப­வர்கள் அதற்­கென முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தில் தம்மைப் பதிவு செய்து பதி­வி­லக்­கத்தைப் பெற்­றுக்­கொள்­ளு­மாறு வேண்­டப்­பட்­டுள்­ளார்கள்.

ஹஜ் கட­மைக்­காக ஏற்­க­னவே திணைக்­க­ளத்தில் பதி­வு­செய்து கொண்­டுள்­ள­வர்­க­ளுக்கு அடுத்­த­வ­ருடம் ஹஜ்ஜில் முன்­னு­ரிமை வழங்­கப்­ப­ட­வுள்­ளது. 

அரச ஹஜ் குழுவின் உறுப்­பி­னரும் முஸ்லிம் சமய விவ­கார மற்றும் தபால், தபால்­துறை அமைச்­ச­ரு­மான எம்.எச்.ஏ.ஹலீமின் செய­லாளர் எம்.எச்.எம்.பாஹிம் இது தொடர்பில் தெரி­விக்­கையில்;

ஹஜ் கட­மைக்­காக ஏற்­க­னவே விண்­ணப்­பித்து கட­மையை நிறை­வேற்­றா­துள்ள விண்­ணப்­ப­தா­ரிகள் தமது கட­மையை உறு­திப்­ப­டுத்­து­மாறு கேட்­கப்­ப­ட­வுள்­ளார்கள். திணைக்­களம் அவ்­வா­றா­ன­வர்­க­ளுக்கு கடி­தங்­களை அனுப்­பி­வைக்­க­வுள்­ளது. 

ஹஜ் கடமை மேற்­கொள்­ள­வுள்­ள­வர்கள் தங்­களை ஹஜ் முக­வர்­க­ளிடம் பதிவு செய்து கொள்ளத் தேவை­யில்லை. திணைக்­க­ளத்தில் மாத்­தி­ரமே பதிவு செய்து கொள்ள வேண்டும்.

மேல­திக கோட்­டாவில் ஹஜ் கடமை மேற்­கொள்ளத் திட்­ட­மிட்­டி­ருந்து மேல­திக கோட்டா கிடைக்­காது பாதிக்­கப்­பட்­ட­வர்கள் திணைக்­க­ளத்தில் பதிவு செய்­தி­ருந்தால் அடுத்த வருட ஹஜ் ஏற்பாடுகளில் அவர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்படும். திணைக்களத்தில் பதிவு செய்து கொண்டிராது விட்டால் வாய்ப்பளிக்கப்பட மாட்டாது.

-விடிவெள்ளி  ARA.Fareel-

No comments

Powered by Blogger.