Header Ads



அன்று 20 ரூபா சம்பளம் பெற்றவர், இன்று முக்கிய பணக்கார VIP

எதிர்வரும் இரண்டரை வருடங்களுக்குள் 10 கப்பல்களை கொள்வனவு செய்யவுள்ளதாக லாப் கூட்டு வர்த்தக நிறுவனத்தின் தலைவர் W.A.H. வேகபிட்டிய தெரிவித்துள்ளார்.

இந்தியப் பெருங்கடலில் எரிவாயு போக்குவரத்து நடவடிக்கைக்காக இந்த கப்பல்களை கொள்வனவு செய்யவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தெற்கு ஆசியாவில் உள்ள மிகப்பெரிய மின்சக்தி விநியோக மையம் தற்போது நிர்மாணிக்கப்பட்டு வருவதாகவும், அது 2018ஆம் ஆண்டு பூர்த்தியடையும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதன் பின்னர் இந்தியப் பெருங்கடலுக்கு எரிவாயு போக்குவரத்து மேற்கொள்வதே தனது நோக்கம் என அவர் குறிப்பிட்டுள்ளார். அதற்காக 10 அல்லது 15 கப்பல்கள் அவசியம் என அவர் தெரிவித்துள்ளார்.

கப்பல் கூட்டுத்தாபனத்தின் கப்பல்களில் உள்ள இரும்பு துருக்களை உடைக்கும் நடவடிக்கையில் வேகப்பிட்டிய ஆரம்ப காலங்களில் ஈடுபட்டிருந்தார்.

1986ஆம் ஆண்டில் மிகவும் ஏழ்மை நிலையிலிருந்து வேகப்பிட்டிய, அப்போது 20 ரூபாவை சம்பளமாக பெற்றுள்ளனார். எனினும் இன்று பெரும் கப்பல்களை கொள்வனவு செய்யும் அளவுக்கு வளர்ந்துள்ளதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.


2 comments:

  1. There is nothing to surprise. He is a right hand of Mahinda. Those days, wherever Mahainda went, he was used to accompany this Wegapiriya. May these money belongs to Mahinda or trying to do business in Wega's name.

    ReplyDelete

Powered by Blogger.