Header Ads



இனிமேல் நாங்கள் சும்மா விடமாட்டோம் - PJ சூளுரை


சட்டத்திற்கு எதிராக ஒட்டகம் அறுக்க தடை விதித்த நீதிபதியின் பதவி உயர்வை தடுத்து நிறுத்துவோம் : பி.ஜைனுல் ஆபிதீன் சூளுரை....!!

தொழுகை முடிந்த பின் குழுமியிருந்த மக்கள் மத்தியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் நிறுவனர் பி.ஜைனுல் ஆபிதீன் உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில்....

ஒட்டகம் அறுக்கக்கூடாது என்ற உயர்நீதிமன்ற தீர்ப்பு இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரான தீர்ப்பாகும்.

சட்டத்திற்கு புறம்பான தீர்ப்பை வெளியிட்ட இந்த நீதிபதி அறிவுகெட்ட முட்டாள், நீதிபதி பதவிக்கு சட்டம் படித்து வந்தாரா, லஞ்சம் கொடுத்து வந்தாரா என்று கேள்வி எழுப்பினார்.

முஸ்லிம்களுக்கு எதிராக தீர்ப்பு சொன்னால் உச்சநீதிமன்ற நீதிபதியாகலாம் என்று பதவி ஆசையில் சொன்னாரா என்றும் கேள்வி எழுப்பினார்.

தமிழக அரசின் அரசு தரப்பு வழக்கறிஞர் ஒட்டகம் அறுப்பதை தடுக்கக்கூடாது என்று பல்வேறு வாதங்களை ஆதாரத்துடன் வைத்தார்.

அதே வழக்கில் பிரதியாக உள்ள தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தும் தனது மனுவில் அனைத்து ஆதாரங்களையும் வைத்தது.

எதையும் கண்டுக்கொள்ளாமல் மனம் போனபோக்கில் சட்டத்திற்கு எதிரான தீர்ப்பை வெளியிட்டுள்ளார்.

இனிமேல் இதனை நாங்கள் சும்மா விடமாட்டோம்.

சட்டத்திற்கு புறம்பாக அவர் வெளியிட்ட அனைத்து தீர்ப்புகளையும் திரட்டி அதனை உலகளவில் பேச செய்வோம். அவருக்கு எதிரான மக்கள் கருத்தை உருவாக்குவோம்.
அவரது பதவி உயர்வை தடுத்து நிறுத்தி அவர் நீதிபதி பதவிக்கே தகுதி அற்றவர் என்ற நிலையை உருவாக்குவோம்.
மேற்கண்டவாறு பி.ஜைனுல் ஆபிதீன் பேசினார்.

20 comments:

  1. வெறும் தகர டப்பா போடும் சத்தம்.
    நபி இப்ராஹீம் அவர்களே ஆடுகளை குர்பானி கொடுத்ததாகவே மார்க்கம் சொல்ல்கின்றது. அடுத்தது, ஒட்டக இறைச்சி சுவையான, ருசித்து உண்ணக் கூடிய ஒன்றல்ல.

    ஒட்டகப் பிரச்சினை ஒருவித இயக்கத்தை வளர்க்கும் அரசியல் மட்டுமே.

    ReplyDelete
    Replies
    1. இனத்தை காட்டி கொடுக்கும் துரோகிகள் முனாபிக்குகள் இருக்கும் முஸ்லீம்ககு உனக்கு தீனு தெரியாது அடுத்து மாடு ஆடு தடை வரும் தஹ்ஹீத் காரன் தலை கொடுப்பான் ஆன்கள் யாஸ்மீன் பெண்கலுக்கு வைக்கும் பெயர் ஒரு பூவின் பெயர் நபி அவர்கள் சொன்னார்கள் பெயகள் வைக்கும் தேடி வைக்கனும் பெண் இதயம் பயந்தது பெயரை மாற்றி கொல் கொஞ்ம் ஆன்மை வரும்

      Delete
    2. .

      ஒட்டகத்தை தான் சாப்பிட வேண்டுமென்பது அவசியமில்லை. ஆனால் இன்று ஒட்டகத்திற்க்கு தடை, நாளை மாடு வெட்டத் தடை, ஆடு வெட்டத் தடை என்று இவர்கள் தொடரக் கூடாது என்பதற்காகவே "ஒட்டக அறுப்புத் தடையை எதிர்க்கிறோம்"

      ஆழம் பார்ப்பதற்காகவே இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. - இதனை கண்டு கொள்ளாமல் இருந்தால், எதிர் காலங்களில் மாடு, ஆடு அறுப்பதற்க்கான தடையையும் தொடருவார்கள்.

      இவர்களின் நீதி மன்ற தீர்ப்பை மதிக்கத் தேவையில்லை. இது சட்டத்திற்க்கு புறம்பான தீர்ப்பு.

      யார் என்ன செய்தாலும் சரி ஒட்டகம் அறுப்பவர்கள் அறுக்கத்தான் போகிறார்கள். நீ என்ன செய்தாலும் சந்திக்க தயாராக இருக்கிறோம். நாங்கள் கட்டுப்பட மாட்டோம். சட்டத்தின் அடிப்படையில் தீர்ப்பு சொன்னால் அதற்க்கு கட்டுப்படுவோம்.

      மதச் சார்பற்ற நாடு என்று சொல்லிக் கொண்டு இஸ்லாமிய மார்க்க விஷயத்தில் தலையிடுவதை ஏற்க முடியாது.

      சட்டத்தை விட அரசியல் சாசனம் முக்கியமானது. அரசியல் சாசனத்தில் எழுதப்பட்ட விஷயத்தை மீறும் வகையில் சட்டம் இருந்தால், சட்டத்தை கிழித்தெரிய வேண்டும். அரசியல் சாசனத்தை நீக்க முடியாது.

      ஒவ்வொருவரும் தனது மதப் பிரகாரம் நடப்பதற்கு உரிமை உண்டு என இந்திய அரசியல் சாசனம் சொல்கிறது. அரசியல் சாசனம் தந்திருக்கிற உரிமைகளை எந்த சட்டம் போட்டும் தடுக்க முடியாது.

      ஆகவே, இந்தத் தீர்ப்பு கொடூரமானது, தவரானது, இஸ்லாமிய மார்க்கத்துடன் விளையாடும் தீர்ப்பு. இந்திய அரசியல் சாசனத்திற்க்கு எதிரான தீர்ப்பு. இதனை நிராகரிக்க வேண்டும். எது வந்தாலும் துணிந்து எதிர்த்து நிற்க வேண்டும் என்ற அடிப்படையில் தடையை மீறி இன்று மக்கள் ஒட்டகத்தை அறுக்கத்தான் போகிறார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். என்று தனதுரையில் குறிப்பிட்டார் சகோ. பி. ஜெய்னுலாப்தீன்.

      Delete
  2. வாய் சவடால்களில் அரசியல் வாதிகள்தான் என்றால் மார்க்க அறிஞர்களும் இன்று முன்னணி வகிக்கின்றனர்..

    ReplyDelete
  3. Yadmin ஒட்டக இறைச்சி உங்களுக்கு ருசியாக இல்லை என்று இஸ்லாமிய உருமைக்கு எதிராக பேச வேண்டாம் விரும்பும் மக்கள் ஒட்டகத்தை அறுக்கும் உரிமை இருக்கும் போது சட்டத்தை வளைந்து கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை இனத்துவேசத்தோடு நீதிபதி தீர்ப்பு சொல்லி இருக்கிறான் அவனுக்குநீங்கள் வக்காலத்து வாங்க வேண்டாம் ஒரு முஸ்லிமாக வாழ தெரிந்துகொள்ள வேண்டும்

    ReplyDelete
  4. Thaweedh headace group.PJ want to become hero

    ReplyDelete
  5. Yasmin அவர்களே ஒட்டக இறைச்சியின் ருசித்தன்மை பற்றியதல்ல இங்குள்ள முக்கிய பிரச்சினை. நீதிபதியின் தவறான அடிப்படையிலான தீர்ப்பே பிச்சினையாகும் என்பதை உணருங்கள்.

    ReplyDelete
  6. யஸ்மின் லாபிரின் பேச்சு முட்டால்தனம் காழ்ப்பணர்ச்சி

    ReplyDelete
  7. எனக்கு PJயின் சில கொள்கைகள் பிடிக்காவிட்டாலும் PJ தொடர்பான Yasmin Lafirன் கருத்துக்களை ஏற்றுக் கொள்ள முடியாது. ஆடு, மாடு, ஒட்டகம் என்பனவையே குர்பானிக்குறிய பிராணிகளாகும். PJயின் போராட்டம் அல்லாஹ்வுக்காக இஹ்லாசுடன் இருந்தால் Yasmin Lafir குற்றவாளியாகிவிடுவீர்கள். இயக்கத்தை வளர்க்க என்பதை நீங்கள் அவரின் உள்ளத்தை பிளந்தா பார்த்தீகள்?

    ReplyDelete
    Replies
    1. My views too fall in with you. Yes, We can't adjudge a person at first sight.

      Delete
  8. சவூதி அரேபியாவில் ஒட்டகம் இருக்கிறது, அப்படி இருந்தும் அவர்கள் ஒட்டகத்தை அறுப்பதில்லை, ஆடு, கோழிதான் அங்கே பிரதான உணவு. ஏன்? ஒட்டகம் சுவையில்லை. அந்தக் காலத்தில் ஆடு, மாடு கிடைக்காமல் விட்டால் உண்பதற்காகவே ஒட்டகம் அனுமதிக்கப் பட்டது.

    ஒட்டகமே இல்லாத தமிழ்நாட்டில் பிடிவாதமாக எங்கிருந்தோ ஒட்டகத்தை கொண்டுவந்து அறுப்பது எதற்காக?

    PJ, அவரது இயக்கம், அல்தாபியின் உரை எல்லாம் வைத்து பார்க்கும் பொழுது தெளிவாக தெரியும், இது இஸ்லாம் அல்ல, மாறாக இயக்கத்தை வளர்க்கும் வேலைதான் என்பது. இதை தெரிந்துகொள்ள இதயத்தையெல்லாம் வெட்டி, இறைச்சிக்கடை வேலை பார்க்க தேவையில்லை. இதயத்தை (உள்ளத்தை) வெட்டினாலும் அங்கே இரத்தமும் சதையும்தான் இருக்குமே தவிர, நோக்கத்தை காண முடியாது.

    ReplyDelete
    Replies
    1. சகோ. ஆஸாத்,
      ஒட்டகம் அறுப்பதில்லை என்று உங்களுக்கு தெரியுமா?
      எத்தனை நாட்கள் சௌதியில் இருந்தீர்கள்.
      நான் குடும்பத்துடன் சௌதியில் வாழ்கிறவன். என் வீட்டில் ஒட்டக கறி சமைத்துள்ளோம். விவரம் இல்லாம் பதிவிடாதீர்கள்.

      Delete
    2. சகோ. ஆஸாத்,
      ஒட்டகம் அறுப்பதில்லை என்று உங்களுக்கு தெரியுமா?
      எத்தனை நாட்கள் சௌதியில் இருந்தீர்கள்.
      நான் குடும்பத்துடன் சௌதியில் வாழ்கிறவன். என் வீட்டில் ஒட்டக கறி சமைத்துள்ளோம். விவரம் இல்லாம் பதிவிடாதீர்கள்.

      Delete
  9. இதற்கெல்லாம் காரணம் உங்களையெல்லாம் பிளவுபடுத்தி ஆதாயம் அடையும் உங்கள் தலைவர்கள்தான் உங்கள் மனக்கொதிப்பில் குளிர்காய்கிறார்கள் உண்மை உங்கள் கண்களை மறைத்ததற்கு காரணமென்ன சிந்தித்து பாருங்கள்

    ReplyDelete
  10. இலகங்கை யிலும் சட்டப்படி எறுமை மாடு அறுப்பது தண்டனைக்குறிய குற்றம், எறுமை இனம் அழிந்து செல்லாமல் இருக்க அரசு எடுத்திருக்கும் சட்டம்.இதற்கெல்லாம் எதிராக பேசினால் முஸ்லீீம்களைப்பற்றிய தப்பென்னமே உறுவாகும். இதெல்லாம் எங்க பீ.ஜே க்கும் அவர்களது சகாக்களுக்கும் விளங்கப்போகுது.

    ReplyDelete
  11. இந்த TJ காரர்களுக்கு இயக்கம் வளர்க்க ஏதாவது சண்டை, சச்சரவு, விவாதம், போராட்டம், ஒழிப்பு மாநாடு என்று ஏதாவது கட்டாயம் தேவை, இல்லாவிட்டால் இவர்களால் பிழைக்க முடியாது.

    ReplyDelete
  12. அசாத் கனேதன்னை, Yasmin Lafir
    எனக்கு பி. ஜே யுடனோ அவரது இயக்கத்துடனோ எந்த ஈடுபாடும் கிடையாது, ஆனால் குறிப்பிட்ட இந்த விடயத்தில் அவர்களது வாதம் தட்டிக்கழிக்கக் கூடிய ஒன்றல்ல.
    இது மதம் சார்ந்த விடயம் என்பதை விடவும் அவர்களது சுய உரிமை சார்ந்த விடயமாகவே பார்க்க வேண்டும்.
    அனால் Yasmin Lafir, அசாத் கனேதன்னை போன்ற குறுமதியாளர்கள் இஸ்லாம் பற்றிய அறிவோ, சவூதி பற்றிய வரலாறோ தெரியாமல் பின்னூட்டம் எழுதியுள்ளனர்.
    Yasmin Lafir என்று பெயர் வைப்பதால் மட்டும் ஒருவர் பூரண முஸ்லிமென்றாகிவிட முடியாது. இஸ்லாத்தை சரிவரத தெரிந்து கொள்ள வேண்டும், குறைந்த பட்சம் எதைப்பற்றி எழுதப் போகின்றோமோ அதைப்பற்றியாவது தெரிந்து கொள்ள வேண்டும், அதன் பின்னர் தான் இவ்வாறான விடயங்களில் கருத்தாட வேண்டும். [[ ஒட்டக சுவையாக ருசித்து உண்ணக் கூடிய ஒன்றல்ல]] என்று கூறி இஸ்லாமிய அறிவில் எத்தனை முட்டாளாக இருக்கின்றீர்கள் என்பதை தெளிவு படுத்திவிட்டீர்கள்.
    தயவு செய்து இவ்வாறு சிறு பிள்ளைத்தனமாக பின்னூட்டம் எழுதுவதை விட்டு விட்டு இஸ்லாத்தையும் அதன் விழுமியத்தையும் அறிந்து கொள்வதில் உங்கள் நேரத்தை கொஞ்சம் செலவிடுங்கள்.
    அசாத் கனேதன்னை:
    [[சவுதியில் ஒட்டகம் இருக்கின்றது அப்படியிருந்தும் அவர்கள் ஒட்டகத்தை அறுப்பதில்லை, ஆடு, கோழிதான் அவர்களின் பிரதான உணவு. ஏன்? ஒட்டகம் சுவையில்லை. அந்தக்காலத்தில் ஆடு, மாடு கிடைக்காவிட்டால் உண்பதற்காக ஒட்டகம் அனுமதிக்கப்பட்டது]] என்று கூறி அவரது முட்டாள்தனத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கின்றார். இஸ்லாம் பற்றிய அறிவில்லாமல் கருத்துக் கூறும் இவரைப் போன்ற குறுமதியாளர்களால்தான், அடுத்தவர்கள் இஸ்லாத்தை தவறான கோணத்தில் பார்க்கின்றனர். ஒட்டகம் சுவையில்லை என்ற காரணத்தால் தான் அதனை அறுப்பதில்லை என்று கூறும் இந்த “ஒட்டகம்” , இஸ்லாம் சாப்பாட்டுக்கும், சுவைக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் மார்க்கம் என்பது போல் கூறுகிறது. [[ அந்தக்காலத்தில் ஆடு, மாடு கிடைக்காவிட்டால் உண்பதற்காக ஒட்டகம் அனுமதிக்கப்பட்டது]] அது எந்தக்காலம் என்று தெரியவில்லை. இருந்தாலும் “இந்த ஒட்டகம்” சொல்லும் அந்தக்காலத்தில் மாட்டிறைச்சி சாப்பிட்டதை விட ஒட்டக இறைச்சி சாப்பிட்டதாக வருகின்ற ஹதீதுகளே ஏராளம்.
    இந்த விஷயத்தில் பி. ஜே கூறுவது என்ன? இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் அனுமதிக்கப்பட்ட விஷயத்தை, எவ்வாறு இந்த நீதிபதி தடை செய்து தீர்ப்புக் கூறலாம் என்பதாகும். முதலில் ஆக்கத்தின் கருப்பொருளை உள்வாங்கி பின்னூட்டம் எழுத கற்றுக்கொள்ளுங்கள்.
    “ஆத்திரத்தோடு பார்க்காதே நிரபராதியும் குற்றவாளியாகத் தெரிவான் , அனுதாபத்தோடு பார்க்காதே நிரபராதியும் குற்றவாளியாகத் தெரிவான்”

    ReplyDelete
  13. திருத்தம்:
    “ஆத்திரத்தோடு பார்க்காதே நிரபராதியும் குற்றவாளியாகத் தெரிவான் , அனுதாபத்தோடு பார்க்காதே குற்றவாளியும் நிரபராதியாகத் தெரிவான்” . என்று திருத்திக்கொள்ளவும்

    ReplyDelete
  14. அஸாத் கனேதன்னை
    ஒருவரது கொள்கை நமக்கு பிடிக்கலாம்/ பிடிக்காமல் போகலாம். அதற்காக அவர் சொல்பவை எல்லாவற்றையும் வெறுக்கக் கூடாது. ஒட்டகத்தை அறுக்க அல்லாஹ் தடை விதிக்கவில்லையே! ஒட்டகத்தை அறுத்தால் நீங்கள் ஏன் குழப்பம் அடைகிறீர்கள்? உள்ளத்தை திறந்து பார்த்தல் என்பது ஓர் உவமானம். இதன் கருத்து ஒருவர் எதற்காகச் செய்தாரோ அதை நாம் அறிந்து கொள்வது. உங்களது இறைச்சிக்கடை விளக்கத்தைப் பார்க்கும் போது எனக்கு உங்களது நிலையை, எல்லா முட்டைகளையும் ஒரே நாளில் எடுக்க பொன் முட்டையிட்ட வாத்தை வெட்டிய வடி கட்டிய முட்டாளின் ஞாபகம்தான் வருகிறது.

    ReplyDelete

Powered by Blogger.