Header Ads



முஸ்லிம்களுக்கு துரோகம் செய்யமாட்டேன் என, ரணில் கூறுவாரா..? அதாவுல்லா சவால்

-றிசாத் ஏ காதர் –

கிழக்கு மாகாணத்தை வடக்கிலிருந்து பிரிக்க வேண்டுமென்று, ஜே.வி.பி.யினர் வழக்குத்தாக்கல் செய்தார்கள் என்ற போதும், வடக்கிலிருந்து கிழக்கு மாகாணம் பிரிய வேண்டும் என்கிற உணர்வினை கிழக்கு முஸ்லிம்களிடம் ஏற்படுத்தியவர் – தான் என்று முன்னாள் அமைச்சரும், தேசிய காங்கிரசின் தலைவருமான ஏ.எல்.எம். அதாஉல்லா தெரிவித்தார்.

ஏறாவூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ‘சுதந்திர கிழக்கு’ விழிப்பூட்டும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ் விடயத்தைக் கூறினார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்;

“கிழக்கு மாகாணம் தொடர்பில், தமிழ் தலைமைகள் பேசுவதாக இருந்தால், கிழக்கிலுள்ள முஸ்லிம் தலைமைகளுடன்தான் பேச வேண்டும் என்று, தமிழ் தலைமைகளுக்கு நாங்கள் கோரிக்கை விடுகிறோம்.

அரசியல் ரீதியாக நாங்கள் தற்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீது மட்டுமே நம்பிக்கை வைத்துள்ளோம். இது, தலைவர் அஷ்ரப் எம்மைக் கொண்டு வந்து விட்ட இடமாகும். அவர் சந்திரிக்காவிடம் அரசியல் ரீதியாக சேர்ந்து கொண்டார்.

கிழக்கு மாகாண முஸ்லிம்களின் வாக்குகளை வைத்து, 300 மில்லியன் ரூபாய் தர முடியுமா? 500 மில்லியன் ரூபாய் தர முடியுமா என்று பேரம் பேசப்படுகிறது.

முஸ்லிம் காங்கிரசின் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த மூத்த போராளிகளான ஹசனலி மற்றும் பசீர் சேகுதாவூத் ஆகியோரை, முஸ்லிம் காங்கிரசுக்குள் இன்று சில்லாங்கொட்டைகள் கேள்வி கேட்கின்றார்கள்.

தாருஸ்ஸலாம் நமக்குத் தேவையில்லை. கட்சியிலிருந்து வெளியேறி வா என்று, நான் பசீருக்குக் கோரிக்கை விடுக்கின்றேன்.

கிழக்கு மாகாணத்தை பாதுகாப்பதென்றால் ஹசனலி மற்றும் பசீர் ஆகியோரைக் காப்பாற்றியாக வேண்டும். மு.கா. தலைவர் ஹக்கீம் மரணித்தால், மு.காங்கிரசின் தலைமையகமான தாருஸ்ஸலாம் – ஹக்கீமுடைய மனைவிக்கு சொந்தமாகி விடும் என்று கூறப்படுகிறது.

ரணில் விக்கிரமசிங்கவின் தலைமை, முஸ்லிம்களுக்கு இரண்டு தடவை துரோகம் செய்திருக்கிறது. இம்முறை அவ்வாறானதொரு துரோகம் நடக்காது என்று, ரணில் கூறுவாராயின் – இந்தக் கூட்டத்தை நாங்கள் நடத்த வேண்டிய தேவையிருக்காது.

கிழக்கினுடைய தலைவர்கள் கிழக்கிலிருந்து வரவேண்டும் என்று கூறித்தான், மு.காங்கிரசை அஸ்ரப் ஆரம்பித்தார். ஆனால், அவரின் மரணத்தின் பிறகு, மீண்டும் அந்தத் தலைமைத்துவம் பறிபோயிருக்கிறது” என்றார்.

9 comments:

  1. We Want SLMC but Not With Hakeem We realized Why The Seniors Members Came Out from SLMC
    If i compare With Hakeem Athaullah More better He Was Done Many Service For us But Athaullah Was Support Mahinda Last Election????

    ReplyDelete
  2. சகோதரர் அதாவுல்லா அவர்களே, முஸ்லிம்களின் அரசியல் உரிமை, அரசியல் பயணம் போன்றவை உங்களுக்கு ( ஹக்கீம், றிசாத், அதாவுல்லா, ஹிஸ்புல்லாஹ், பஷீர் சேகுதாவுத், போன்றவர்களும் அவர்களது அடிவருடிகளும் ) புலப்பாக இருக்கலாம். முஸ்லிம்களின் அரசியல் பயணம் இந்த அரசியல் வியாபாரிகளை நம்பி நகர்ந்தாள் நிட்சயமாக கைசேதமாகவே முடிவுறும். மிகப் பெரும் புளுகையும், அரசியல் வரலாறு தெரியாத, அரசியல் முதிர்ச்சி அற்ற சிறுபிள்ளை தனமான, கோமாளித்தனமான பேச்சாகவே கருதுகிறோம்.

    * ஜே வி பி வென்றும் கட்டினார்கள்.
    * கிழக்கு மாகாண மக்களுக்கு உணவினை ஏட்படுத்தினோம்... மிகப் பெரும் ஜோக். கோழி கூவியதால் தான் சூரியன் உதித்தது.... ஹி ஹி...
    * கிழக்கில் உள்ள முஸ்லீம் தலைமை..??? சிறுபிள்ளை தனமான பேச்சு....!!!!!
    * 300 மில்லியன் 500 மில்லியன்... புலப்பு..... பாம்பின் காலை பாம்பு அறியும்.

    இந்த அரசியல் வியாபாரிகளையும், கோமாளிகளையும் நம்பாமல்.....
    சமூக ஆர்வலர்களையும், புத்தி ஜீவிகளையும் பொதுவாக அமைத்து, முஸ்லிமகளின் பிரச்சனைகளை கையாள்வேதே சிறந்தது











    ReplyDelete
  3. மஹிந்த ராஜபக்ச மீது நீங்கள் வைத்து இருந்த நம்பிக்கைக்கு என்னவாகியது?? மகிந்த ராஜபக்ச முஸ்லிம்களுக்கு துரோகம் செய்ய மாட்டோம் என்று உத்தரவாதம் வழங்கி இருந்தாரா?

    ReplyDelete
  4. Very true Br. Athaullah. it seems you are now in right direction. I heard long time back, ownership of Darusssalam is belongs to Hafez Nazeer?

    ReplyDelete
  5. முதலில் றவூப் ஹக்கீமை முஸ்லிம் காங்கிரஸை விட்டு அவசரமாக வெளியே அகற்ற வேண்டும்

    ReplyDelete
  6. Solluwadu enna enru ataulla awarhalukke teruyadu.mahinda pinnal poi ippodu palan illai.sutti warar maitry pakkam.address illata arasiyal wadi.ponga ayya.

    ReplyDelete
  7. இவனுகளை விட்டும் எப்பதான் அல்லாஹ் முஸ்லிம் சமூகத்தை பாதுகாப்பானோ தெரியாது!! தொல்லயா தொல்லை!!!

    ReplyDelete
  8. நீங்கள் உங்கள் அரசியல் இலாபத்துக்காக மைத்திரியுடன் இனையுங்கள் நீங்கள் மகிந்த அரசியலில் பள்ளி உடைக்கும் போது அமைதியாக இருந்து விட்டு ரனிலிடம் உத்தரவாதம் கேட்கிரீர்களா?

    ReplyDelete

Powered by Blogger.