September 06, 2016

முஸ்லிம் என்பதினால் இலங்கை அரசாங்கத்தினால், கைவிடப்பட்ட இப்றாஹீம் அன்சார்

மலேசியாவில் புலிக் குண்டர்களின் அகோர தாக்குதலுக்கு உள்ளான இலங்தை தூதுவர் இப்றாஹீம் அன்சாரை நல்லாட்சி அரசாங்கம் முற்றாக கைவிட்டுவிட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

தற்போது சிகிச்சை பெற்றுவரும் இப்றாஹீம் அன்சாரின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கோ, இலங்கைக்கான தூதரகத்திற்கோ, அங்குள்ள பௌத்த விகாரைகளுக்கோ இதுவரை மலேசிய அரசு எத்தகைய பாதுகாப்பையும் வழங்காத நிலையில், தூதுவரின் குடும்ப உறவினர்களும், இலங்கையைச் சேர்ந்தவர்களும் அச்சத்துடன் இருப்பதாக கவலை வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கைத் தூதுவர் தாக்கப்பட்டு 3 நாட்கள் கடந்துவிட்ட போதிலும், இதுதொடர்பில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவோ அல்லது பிரதியமைச்சர் ஹர்ஷா டீ.சில்வாவோ தூதுவர் இப்றாஹீம் அன்சாருடன் தொடர்புகொண்டு ஒரு ஆறுதல் வார்த்தைதானும் கூறவில்லை என ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு அறியவருகிறது.

இப்றாஹீம் அன்சார் மீதான தாக்குதலுடன் பங்கரவாத புலிகளும், நாம் நமிழர் கட்சியின் 2 முக்கிய பிரமுகர்களும் தொடர்புபட்டுள்ளனர்.

இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ள போதிலும், இலங்கை அரசு உரிய அழுத்தங்களை பிரயோகிக்காமை காரணமாக அவர்கள் மிகவிரைவில் விடுதலை செய்யப்படலாமென எதிர்பார்க்கப்படுகிறது.

அமைச்சர் தயாகமேக்கேயை வழியனுப்ப வந்த நேரத்திலேயே காடையர்கூட்டம் இப்றாஹீம் அன்சார் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளது. இதன்மூலம் பங்கரவாவ புலி ஆதரவு கூட்டத்தின் தெளிவான இலக்கு மஹிந்த ராஜபக்ஸவோ அல்லது சிங்கள அரசியல்வாதிகளோ இல்லை.

மாறாக இலங்கைத் தூதுவர் இப்றாஹீம் அன்சாரே புலி பயங்கரவாத காடையர் கூட்டத்தின் இலக்காக இருந்துள்ளார். அவர் முஸ்லிம் என்பதும் இதற்கு மேலதிக காரணம்.

எத்தனையோ நாடுகளில் சிங்களத் தூதுவர்கள் பணியாற்றுகிற போதிலும், அங்கு புலிப் பயங்கரவாதிகளின் செல்வாக்கு நீடிக்கிற போதிலும் இவ்வாறு இலங்கைத் தூதுவர்கள் தாக்கப்படவில்லை.

இவ்வாறான நிலையில் இப்றாஹீம் அன்சார் தாக்கப்பட்டமையும், தாக்குதலுக்கு எதிராக இலங்கை இலங்கை அரசாங்கமோ அல்லது வெளிவவகார அமைச்சோ கடும் கண்டனங்களை பதிவு செய்யவோ அல்லது மலேசிய அரசுக்கு அழுத்தம்கொடுக்காமல் தவறியுள்ளமையையும் நோக்குகையில் இது தூதுவர் முஸ்லிம் என்பதால் காண்பிக்கப்படும் இனவாதப் போக்கு என்பது தெளிவாகிறது.

சர்வதேச உறவுகள் சட்டத்தின் கீழ் இலங்கையும் மலேசியாவும் கைச்சாத்திட்டுள்ளன. மலேசியாவிலும், இலங்கையிலும் புலிகள் பயங்கரவாத இயக்கமாக பிரகடனப்படுத்தபட்டு தடைசெய்யப்பட்டுள்ளனர். இந்தநிலையில் இலங்கைத் தூதுவர் மீது புலிபயங்கரவாதிகள் மேற்கொண்ட தாக்குதல் (தூதுவர் கொரூரமாக தாக்கப்படும் வீடியோ காட்சிகளும் வெளிவந்துவிட்டது) விடயத்தில் மலேசியாவுக்கு அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டியது இலங்கை அரசாங்கமாகும்.

எனினும் நல்லாட்சி என கூறிக்கொள்ளும் இந்த அரசாங்கத்தின் ஜனாதிபதியோ அல்லது பிரதமரோ இதுதொடர்பில் இதுவரை ஒற்றை வார்த்தைதானும் கூறவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது.

புலி ஆதரவு சக்திகளுடன் தொடர்பில் இருக்கும் அமைச்சர் மங்கள சமரவீர, வெளிநாடுகளில் உள்ள புலி ஆதரவாளர்களுடன் இணக்கப்போக்கை கடைபிடிப்பதால் மலேசிய உள்ளிட்ட நாடுகளில் புலிகள் மேற்கொள்ளும் வன்முறைச்சம்பவங்கள் பற்றி அவர் கண்டுகொள்வதில்லை எனவும், மலேசிய போன்ற நாடுகளுக்கு புலி பயங்கரவாதிகளை கட்டுப்படுத்துமாறு அழுத்தம் பிரயோகிப்பததில்லை எனவும் மலேசியாவில் வாழும் இலங்கையர்கள் கவலை வெளியிடுகின்றனர்.

6 கருத்துரைகள்:

The writer of this article is trying to catch fish in trouble water.of course Sri Lankan government should take action and force malasian government to take action against all these attackers.yet to.say Sri Lankan foreign minister is LTTE agent or supporting them is too much to grasp..He is trying to get support of dispora Tamil community to build this nation..He is not supporting LTTE...
This is not Muslim issue but it is a national and international matter that Sri Lanka should address ..
Not in line with racial or communal line ...
SRI LANKAN HIGH COMMIOSNOR IS REPRESENTING THE COUNTRY NOT ANY PARTICULAR RELIGION OR GROUPS ..
LTTE SUPPORTERS DID.TRY FORMER PRESIDENTS ARRIVAL TO.MALAYSIA...IT IS NOTHING TO DO RELIGION BUT POLITICS..
THIS TOO POLITICS
DO NOT TRY TO TAKE POLITICAL GAIN OUT OF IT

மகிந்தவின் பாடு சிறப்பாக அமையுமென எதிர் பார்க்கலாம்

உடனடியாக இராஜினாமா செய்யவேண்டியதுதானே


அவர் வழியனுப்ப சென்றது தயா கமகே, அனோமா கமகே மாற்றும் தினேஷ் குணவர்த்தன ஆகியரை. அவர்கள் ஒரு மாநாட்டில் கலந்து கொள்ளவே மலேஷியா சென்றிருந்தனர். மஹிந்த ராஜபக்சவை வழியனுப்பி வைக்க அவர் விமான நிலையம் செல்லவே இல்லை. மாறாக, தமிழ் பயங்கரவாதிகள் மஹிந்த ராஜபக்சவை வழியனுப்ப வந்ததாக நினைத்து இவரை பின்தொடர்ந்து வந்து தாக்கியுள்ளனர்.

இவர் ஒரு இராஜதந்திரி என்ற அடிப்படையில் இவருக்கு VIP LAUNCH கொடுக்கப்பட வேண்டும். VIP LAUNCH வழங்கப்பட்டும் தாக்கியுள்ளனர் என்றால், மலேசிய பொலிஸ் அதிகாரிகளின் இயலாமையை வெளிப்படுத்த இதுவே சான்றாகும்.

இன வெறி பிடித்த இந்திய தமிழர்களும் அந்த 5 நபர்களில் அடிங்கியிருந்தனர். இவர்கள் விடுதலை புலிகளின் பெயரை வைத்து தமிழகத்தில் அரசியல் பிழைப்பு தேடும் ஒரு கட்சியின் ஆதரவை பெற்றவர்கள். இன்று பயங்கரவாதம் அழிக்கப்பட்டுள்ள நிலையில் நடுகடந்த தமிழீழ பயங்கரவாதம் இந்நாட்டுக்கு அச்சுறுத்தலாக அமைகிறது என்பதை மறுக்க முடியாது. ஜக்கிய நாடுகள் சபையினால் தடை செய்யப்பட்ட விடுதலை புலிகள் அமைப்பின் கொடிகளை ஏந்தி அதே ஐக்கிய நாடுகள் சபையின் அங்கத்துவ நாடொன்றில் போராட்டம் நடத்தும் போது வேடிக்கை பார்க்கும் மலேசிய அரசாங்கத்தை நினைக்கையில் வெட்கமாக உள்ளது.

The assault on a High Commissioner is like a war on
the country he represents . It is a vey serious
matter and requires maximum punishment against the
attackers . Mahinda is reported to have said that
he knew of a noise being organized against his
visit to Malaysia by some Tamils and if he is to
be taken serious , why didn't both Srilanka and
Malaysia take precautions against a possible
unexpected scenario ? How can Malaysia leave its
most used Kaulalampur airport so defenceless that
even privileged guests are vulnerable to dangers ?
Srilanka deserves an apology from Malaysia and
maximum punishment to the perpetrators without delay.


Post a Comment