September 01, 2016

நினைத்துப் பார்க்கமுடியாத அளவிற்கு, முற்போக்கானதாக இருக்கிறது இஸ்லாம் - ஜோதிமணி

பெண்களுக்கான முழு உரிமையை பல நூற்றாண்டுகளுக்கு முன்பே வழங்கியவர் முஹம்மது நபி - ஜோதிமணி....!!

முஹமது நபி பெண்களுக்கான சுதந்திரத்தை, கல்வியை, சொத்துரிமையை பல நூற்றாண்டுகளுக்கே முன்பே வலியுறுத்தியவர். எளிய வாழ்வையும், சமத்துவத்தையுமே இஸ்லாம் முன்னிருத்துகிறது. ஏழை, பணக்காரன் என்ற வேறுபாடுகளை ஏற்க மறுக்கிறது. பிற்போக்கான மதம் என்கிற கட்டமைக்கப்பட்ட பொதுபுத்திக்கு மாறாக நினைத்துப் பார்க்கமுடியாத அளவிற்கு முற்போக்கானதாக (Strikingly Progressive) இருக்கிறது .
மேற்குலக நாடுகளின் எண்ணெய் அரசியல் வேறு, இஸ்லாமை ஒரு மோசமான ஆயுதமாக பறைசாற்றி மத அடிப்படை வாதிகளை ஊட்டி வளர்க்கிறது.

இந்தச் சூழலில் உண்மையான இஸ்லாமை வெளிச்சத்திற்கு கொண்டுவரவேண்டிய மாபெரும் பொறுப்பு இஸ்லாமிய சகோதர சகோதரிகளின் முன் உள்ளது. இன்றைய சூழலில் அந்தக் கடினமான பணியில் அவர்களுக்கு துணை நிற்க வேண்டிய மாபெரும் தார்மீகப் பொறுப்பு மற்றவர்களிடம் உள்ளது.

இஸ்லாம் மீது பயங்கரவாதம் திட்டமிட்டு திணிக்கப்பட்டிருக்கிறது. மேலும் அது உலக அளவில் நடந்துவரும் சதி. இதைப் பேசாமல், இதற்கு எதிராக போராடாமல் இருக்க முடியாது. பௌத்த பேரினவாதத்தின் பெயரால் பர்மாவிலும், இலங்கையிலும் அரசியல் அப்பாவி மக்களை கொன்று குவித்தது. இந்தியாவில் இந்து மதத்தின் பெயரால் இதற்கு எப்படி சாதாரண இந்துக்களும், பௌத்தர்களுக்கும் தொடர்பு இல்லையோ அதே போல அங்கு மத அடிப்படைவாதிகள செய்கிற படுகொலைகளுக்கு சாதாரண இஸ்லாமியர்கள் பொறுப்பாக மாட்டார்கள்.

எந்த மத அடிப்படைவாதம் கொடூரமானது தான். ஆனால் இஸ்லாம் மீது மட்டும் பயங்கரவாத பதம் திட்டமிட்டு கட்டமைக்கப்படுகிறது. அதை எதிர்கொள்ளாமல், பேசாமல் கடந்து போவது சாத்தியமில்லை .

-ஜோதிமணி-

32 கருத்துரைகள்:

ஜோதிமணி நீங்கள் ஏன் இன்னும் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளவில்லை??

உன்மை சொன்னீர்கள் சகோதரி,உள்ளம் சுத்தமாக இருந்தால் நீங்கள் சொல்வதுதான் உன்மை

பெண்களுக்கான சொத்துரிமை இருப்பது உண்மை, ஆனால் சமத்துவமும், சுதந்திரமும் இஸ்லாத்தில் இல்லை. ஒரு ஆணின் சாட்சியோ, சொத்துப் பங்கோ இரண்டு பெண்களுக்கு சமன் என்று இஸ்லாமிய மத்தில் சொல்லப்பட்டுள்ளது. அது இன்றைய உலகிற்கு பொருத்தமாக இல்லை.

இஸ்லாம் பெண்களுக்கு மஹர் கொடுத்து மணமுடிக்கச்சொல்கிறது. அந்த மகரை கணவன் தன்னிச்சையாக உபயோகிக்க முடியாது, மேலும் ஆண்களின் கடமை பெண்கள் கடைசிவரை உணவளிப்பதும் அடைக்கலம் கொடுப்பதும்.
சம உரிமை என்று சொல்லிக்கொண்டு இருக்கும் மேற்கு நாடுகளில் பலர் தான் வாழ் பூராக சம்பாதித்தை பணத்தை விவாகரத்து என்ற பெயரில் சூரையாடுவது பலரின் கண்களுக்கு விளங்குவதுல்லை.

அப்ப உங்களது மதத்திலுல்ல பெண்களுக்கான சமத்துவம், சுதந்திரம் என்ன என்பதனை விளக்க முடியுமா?

வந்தூட்டானுகள் எட்டப்ப தூரோகிகளின் பாசக்(பாசிசா) தம்பிகள் உண்மையைச் சொன்னால் இவனுகளுக்கு அங்க அரிக்கத்தொடங்கிவிடும் தாங்க முடியாது அதான் புலம்புகிறானுகள்

Mohamad MRF, எனது மதம்? எனது மதமா? நான் என்ன கடவுளா?
இல்லை பக்தனா?

Voice, நான் சொன்னதற்கு, நீங்கள் சொல்வது பதில் அல்லவே? வேறு பக்கம் பேச்சை நகர்த்தும் யுத்தி அல்லவா?

இஸ்லாமிய மதத்தில் பெண் விவாகரத்து (தலாக்) செய்யப்பட்டால், அந்தப் பெண் சுமார் மூன்று மாதங்கள் இத்தா என்னும் பெயரில் வீட்டுக்குள் முடங்கி இருக்க வேண்டும். விவாகரத்து செய்யப்பட பெண்ணுக்கு பிள்ளைகள் இருந்தாலும் கணவன் ஜீவனாம்சம் கொடுக்கத் தேவையில்லை. இது எவ்வளவு பெரிய அநியாயம்? இதுதானா இஸ்லாம் கொடுக்கும் பெண்ணுரிமை?

அரிபபு அதிகமாகுது,இனி தொடரும்

நல்ல மலுப்பல்

மிக நீண்ட காலத்தின் பின் வந்திருக்கும் இந்த நிலவனூக்கு யாரும் பதீலளிக்க வேண்டிய அவசியம் இல்லை வீணாக வம்புபண்ணுபவனுடன் தர்க்கம் புரிவது,விவாதித்ப்பது,இஸ்லாம் அனுமதீத்தது இல்லை,நம்மூலம் சில தவறுகளை வரவழைப்பதற்காக வம்பு பண்ணுபவனை அலட்சியம் செய்வதே சிறந்த முன்மாதிரி அதனால் இவ்வாறானவர்களை கண்டுகொள்ள வேண்டிய அவசியம் இல்லை

அப்படியெனில் கனவனை இழந்த அல்லது விவாகரத்தான பெண் இன்னெ ாரு ஆணுடன் உடலியல் ரீதியான தெ ாடர்பின் மூலம் கருத்தரித்தால் அதற்கு தந்தை யார் என்று எவ்வாறு அறிவீர்?

இஸ்லாம் எதை செ ான்னாலும் அதில் விஞ்ஞான ரீதியான காரணி கட்டாயம் இருக்கும்.

So உங்களது குருட்டுத்தனமான மத துவேசத்தை காட்ட வேண்டாம்

Brother nilavan markes,
May peace be upon you.

No need to fight each other's .
Pls come in to common term.

Hope you will have better understanding in English language.
Listen this speech carefully and patiently .
In-sha Allah definitely your doubt will be cleared.
1.36 hours would be his speech later part question and Answer session.


Hope you will understand .

சிலருக்கு இஸ்லாத்தை பற்றி தெரியாமல் பேசுவார்கள் ஆனால் இஸ்லாமிய விரோதிகள் முஸ்லிம்களைவிடவும் இஸ்லாம் தெரியாத்து போல் நடந்து கொள்வார்கள்.
ஆண்களுக்கு பெண்களைவிட இரு மடங்கு கிடைக்க காரணம், ஆண் தன்து மனைவி பிள்ளைகளை பாராமரிக்க வேண்டும் என்பதற்காக. பெண்களுக்கு ஆணகளுக்கு வேளை செய்து பணம் கொடுக்கவோ, குடும்ப சுமையோ இஸ்லாத்தில். மற்ற மதங்களில் பெண்களுக்கு சொத்தில் சம உரிமை இருந்தாலும்கூட வாழ்கையில் கிடைப்பதில்லை. சீதணம் அது இது என அவர்களை துண்புருந்துகிறார்கள், அது கிடைக்காவிட்டால் மாமியாரும் சேர்ந்து மருமகளை எரித்து கொள்கிறார்கள். அல்லது பண ஆசை காரணமாக கொன்றுவிட்டு இன்னொரு மருமகளை தேடுவார்கள்.

எல்லோருக்கும் தெரிந்த விடயம் உலகத்தில் முஸ்லிம் பெண்கள்தான் சொகுசாக வாழ்கிறார்கள்.
சும்மா இஸ்லாத்தில் பெண்ணுரிமை இல்லை கூக்குரலிடுபவர்கள் வசிக்கும் நாடுகள் பெண்களுக்கு நடக்கும் அநியாயங்கள் ஒன்றும் தெரியாதா?
பெண் குழந்தைகளை பிறக்கு முன்னே கொன்றுவிடுகிறார்கள்.
அதனால் தான் இந்தியாவில் பெண்களின் எண்ணிக்கையை விட ஆண்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கின்றது.
பெண்ணுரிமையைப்பற்றி பேச தகுதியே இல்லாத நாடுதான் இந்தியா. போய் உங்கள் இந்தியர்களுக்கு பெண்ணுரிமை பற்றி அறிவூட்டினால் நல்லம்.
ஒரு வேளை அங்கு தங்களின் பருப்பு வேகாது என்பதால் தானோ என்னவோ இங்கு வந்து காமடி பன்னிக்கொண்டிருக்கிறீர்கள்.

என் பாசமிகு மாற்று மத சகோதரர் நிலவன் மார்க்ஸ் அவர்களின் ஒரு கேள்விக்கு நான் விடை தர கடமைப்பட்டுள்ளேன் (அவர் உண்மையிலேயே இதை அறிய வேண்டும் என்ற நோக்கில் சொன்னார் என்றால்), அதாவது ஒரு பெண் சும்மாவே வீட்டை விட்டு வெளியே செல்ல அனுமதிக்காத இஸ்லாம் இத்தா காலத்தில் எவ்வளவு நிதானமாக நடக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுருக்கும் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஒகே இப்போ விடயத்திற்கு வருகிறேன், ஒரு பெண் தன் கணவனைப் பிரிந்தால் 4 மாதங்கள் இத்தா இருக்க வேண்டும் அது ஏன். இஸ்லாம் 1400 வருடங்களுக்கு முன்பே சொல்லிவிட்டது ஒரு குழந்தையின் முளு வளர்ச்சியையும் அறிய 4 மாதங்கள் தேவைப்படும் என்பதை, இப்போ ஒரு பெண் விவாகரத்து பெறும் நேரத்தில் கர்ப்பத்துடன் இருந்து அவள் மறு தினமே இன்னொரு திருமணம் முடித்து புதிய கணவனுடன் தாம்பத்திய வாழ்வில் ஈடுபட்டு அந்தக் குழந்தையை பெற்றெடுத்தாள் அந்தக் குழந்தைக்கு எந்த தகப்பனின் பெயரை இனிஷலாக வைப்பது, ஆகவே இவ்வாறு பிறக்கும் குழந்தைக்கும் கூட தன் உண்மையான தந்தையின் பெயரைத்தான் இனிஷலாக வைக்க வேண்டும் என்று சமவுரிமையுடன் நீதியை வழங்கிய மார்க்கம்தான் இஸ்லாம். ஆகவே இத்தாவுடைய காலத்தில் பெண்கள் ஏன் வீட்டுக்குள் முடங்கி கிடக்க வேண்டும் என்ற உங்களின் கேள்விக்கு இன்னும் இதை விட நல்ல விளக்கம் தேவை என்று நல்ல நோக்கத்துடன் ஆவள் கொண்டீர்களேயாயின் ஒரு நல்ல இஸ்லாமிய மத பூதகரை நாடி தெளிவு பெற்றுக்கொள்ளுங்கள். என் பதிவில் ஏதாவது தவறு இருப்பின் என்னை தெளிபடுத்த என் இஸ்லாமிய நெஞ்சங்களை விநயமாக வேண்டிக்கொள்கிறேன்.

Dear Mr Nilavan.
I challenge you tell me if Islam is a religion that oppress women why a lot of women from non- Muslim accept Islam
You may say that Muslim men are attracted to them for marry because of cleanliness..
But most important fact is Islam gives peace of mind
Women have all rights to live as queensoon at home
She is not supposed to go to works
All economic burdens are on the hand of husband
All expenses should be given by hustand
Like in some.western countries that if divorce takes place half of all assets are divided or sometime husband should give the house to divorce lady
Islam too such a right for ladies to have Martianance after marriage
Do not compare Islamic teaching by the practice of muslim today

Bro this is waste advice for like this cruel mind people. they know truth but they can't accept or agree that because of egoism and racism

மிஸ்டர் நிலவன் இஸ்லாமிய சட்டங்கலை மேலோட்டமாக பார்க்காமல் கொஞ்சம் உல் நுலைந்து பாருங்கல்

நிலவன் மார்க்ஸ்
இஸ்லாத்தைப் பற்றி விமர்சித்தமைக்கு நன்றி. நீங்கள் இரண்டு குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தீர்கள். எம்மால் முடிந்தளவு விளக்கம் தர முயற்சிக்கிறோம். சொத்துப் பங்கீடு குடும்பத்திலும் சமூகத்திலும் மிகப்பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் முக்கியமானதொரு
பிரச்சனையாகும். சொத்துப் பங்கீடு நீதியோடும் நேர்மையோடும் நடக்காவிட்டால் தலைமுறை தலைமுறைக்கு அது மோசமான விளைவுகளை ஏற்படுத்திவிடும். இந்த நேர்மையான விரிவான பங்கீட்டுமுறை குர்ஆனில் தவிர வேறு வேதங்களிலோ மனிதர்கள் இயற்றிய சட்டங்களிலோ முழுமையாகக் கிடையாது. குர்ஆன் கூறும் இந்தப் பங்கீட்டு முறை உங்களையும் என்னையும் மற்றும் எல்லா மனிதர்களையும் படைத்த ஏக இறைவனாகிய அல்லாஹ் வகுத்த விதியாகும். இதில் எந்த மனிதர்களின் தலையீடும் இல்லை. உங்களுக்காகவும் எனக்காகவும் மற்றும் எல்லா மனிதர்களுக்காகவும் இறுதி நபியாக அனுப்பப்பட்ட முஹம்மது நபி(ஸல்) அவர்கள் பிறப்பதற்கு முன் வாழ்ந்த அறியாமைக் கால மக்கள் பெண்களுக்குச் சொத்தில் பங்களிக்காமல் சொத்துரிமை முழுவதையும் ஆண்களுக்கே வழங்கி வந்தார்கள். எனவே அல்லாஹ் அடிப்படைச் சொத்துரிமையில் ஆணையும் பெண்ணையும் சமமாக்கி இருவருக்குமே சொத்தில் பங்கு உண்டு எனும் சட்டத்தை கொண்டுவந்தான். பின்னர் இருபாலாருக்குமிடையே பங்கில் வித்தியாசம் செய்து ஓர் ஆணுக்கு இரு பெண்களின் பாகத்திற்கு சமமாக வழங்கப்பட வேண்டும் என்று அல்லாஹ் நிர்ணயித்தான். ஏன் இவ்வாறு வழங்கினான் என்பதுதானே உங்கள் குற்றச்சாட்டு. நண்பரே நீங்கள் கட்டாயம் சிந்தித்துப் பாருங்கள். உங்களையும் என்னையும் மற்றும் எல்லா மனிதர்களையும் படைத்த ஏக இறைவனாகிய அல்லாஹ் வகுத்த விதியில் எந்த குறைபாடும் இருக்குமா? ஏன் இந்தப் பாகுபாடு எனில் இஸ்லாமிய குடும்ப வாழ்க்கை அமைப்பில் பெண்ணைவிட ஆணுக்கே பொருளாதாரச் சுமை அதிகம். ஒரு பெண் பிறந்த வீட்டில் இருக்கும்வரை அவளுடைய பெற்றோரின் பொறுப்பிலும் பாதுகாப்பிலும் இருக்கிறாள். தந்தை அல்லது சகோதரர்களின் பராமரிப்பில் அவள் வளர்கிறாள். எனவே பொருளாதாரத்தைத் தேடும் சுமை அப்போது பெண்ணுக்கு இல்லை. திருமணமாகி புகுந்த வீட்டிற்கு ஒரு பெண் சென்றால் அங்கே கணவனின் முழுப்பொறுப்பிலும் பராமரிப்பிலும் வந்துவிடுவாள். அங்கும் அவளுக்கு பொருளாதாரத்தை தேடும் சுமை இருக்காது. அதே நேரத்தில் ஓர் ஆண் தந்தையாக, சகோதரனாக, கணவனாக இருந்து தனது பொருப்பில் உள்ள அனைவரையும் கவனித்தாக வேண்டும். அனைவரின் பொருளாதாரத் தேவைகளையும் பூர்த்தி செய்தாக வேண்டும். ஆகவே ஆண்தான் பொருளாதாரத் தேவை அதிகமுள்ளவனாக இருக்கிறான். அவனுக்கு இரு பாகங்கள் அளிப்பது பொருத்தமானதுடன் அவசியமும்கூட. மனிதர்களைப் படைத்த இறைவனாகிய அல்லாஹ்வுக்கே மனிதர்களின் குறை நிறை தெரியும். உங்களுக்குத் தெரியாது.

நண்பர் mustafa jawfer சொன்னது போல் நீண்ட காலத்தின் பின் தலை நீட்டியுள்ள நிலவனுக்கு பதில் கொடுக்க வேண்டிய கட்டாயம் இல்லை. காரணம் நிலவன் உறங்குபவன் போல் பாசாங்கு செய்பவன். உறக்கத்தில் இருப்பவனை எழுப்பலாம், உறங்குபவன் போல் நடிப்பவனை ... என்ன செய்வது? என்ற கேள்வியை வாசகர்களுக்கே விட்டு விடுவோம். அடுத்தவர் சமயத்தில் குறை காண்பதற்கு முன் இதே கேள்வியை அவர்சார்ந்த சமயம் "வேண்டாம் அதை விட்டுவிடுவோம்" அவர் சார்ந்த சமுகத்தில் கேட்டுப்பார்த்துக் கொள்ளட்டும்.

Mr Nilavan..
Please keep asking all questions.you are more closer to Islam than many people do not ask questions. End of the day your consciousness in your heart will tell you Islam is only true religions
Unlike your confusion about trinity
One jn three or three in one gods
Islam has so clear theology
If you have not been paid by missionary to spy on Jaffna Muslim you will come out of the confusion of your theology
Do you knew why most of West people come to Islam. It is simplicity of theology in Islam

Mr.Nalavan.r u.muslim woman? If they feel they should tell. V ll take care.

* மாமியார் கொடுமை, சீதனம் எல்லாம் இந்தியா, இலங்கை போன்ற தென்னாசிய நாடுகளில், அதுவும் அந்த நாடுகளின் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே, முழு உலகிலும் அப்படி அல்ல, ஆகவே அதனை காரணமாக காட்டி வழங்கப்பட்ட விளக்கம் வலுவற்றது.

* சாதாரண காலங்களில் பெண்களை வெளியில் அனுப்பாமல், வீட்டிற்குள் அடைத்து வைப்பது பெரிய கொடுமை, இதில் சமத்துவமே இல்லை. அதையொட்டிய விளக்கம், இன்றைய மனித இயல்பிற்கே பொருத்தமற்றது.

* கருவை அறிந்துக்கொள்ளத்தான் இத்தா என்னும் வீட்டுச் சிறை என்றால், அது ஒருவகையில் அந்தக் காலத்திற்கு தேவையாக இருந்து இருக்கலாம், ஆனால் DNA பரிசோதனை முறை வளர்ச்சியடைந்துவிட்ட இந்தக் காலத்தில் இத்தா வை எதற்கு கடைப்பிடிக்க வேண்டும்? இத்தா கடமையல்லாத ஏனைய மத, மதமற்ற மக்களிடம் இத்தகைய கருப் பிரச்சினைகள் எத்தனை வருகின்றன?

* அறியாமைக் கால மக்கள் (140௦ வருடங்களுக்கு முன்னர்) செய்த செயல்களுக்கு, அன்று முகமது நபிகளார் செய்த மாற்றிடூகள், பெண்களுக்கு பாதிச் சொத்துரிமை வழங்கியமை போன்றவை பெரும் புரட்சியாகவும், நல்ல ஆரம்பமாகவும் இருந்திருக்கும், அதில் ஐயமில்லை. ஆனால் முன்னேறிய இன்றைய உலகில், பாலியல் சமத்துவம் வலியுறுத்தப்படும் உலகில் எதற்காக 1400 வருடங்களுக்கு முந்தைய பழைய முறையையே கட்டிப்பிடித்துக்கொண்டு இருக்க வேண்டும்? ஆணுக்கும் பெண்ணும் சமன் என்பதில் சொத்து மட்டுமல்ல, சாட்சி விடயத்திலும் மாற்றம் வர வேண்டுமே?

சகோதரர்களே இவர் என்ன சொன்னாலும் அடங்க மாட்டார் ! இவர் ஒரு குதர்க்கவாதி ...எவ்வாறான பாலியல் சமத்துவம் உமக்கு அவசியம்? திரு நிலவன் அவர்களே ! சுத்தி வளைச்சி அங்கதான் வருவீங்க ! அல்லாஹ் உமக்கு இதாயத்தை வழங்க வேண்டும்.

Hahaha ஆமாம் நான் குறிப்பிட்ட ஒரு விடயத்தை பற்றி மாத்திரம் கூறிவிட்டு மற்றதை அப்படியே அமுக்கிவிட்டார் இந்த அந்தர்பல்டி ஆசாமி.
இஸ்லாத்தில் எந்த நிர்பபந்தமும் இல்லை. அவள் இத்தா இருக்கவில்லையென்று இஸ்லாம் அவளை கொள்ளச்சொல்லி இல்லை.
சரி இதற்கு மீண்டும் ஒரு கேள்வி கேட்காமல் முதிலில் இந்தியாவில் பெண்சிசுக்கொலைகளை நிப்பாட்ட என்ன செய்யப்கொகறீர்கள் என்று சொல்லுங்கள்.

@AAA அவர் கூறும் பாலியல் சமத்துவம் வெறும் வெகுலித்தனமே.

பாலியல் சமத்துவம் ஓங்கி நிற்கும் மேற்குலகத்தில் ஏன் குத்துச்சண்டைகள் ஆண்கள் வேறாகவும் பெண்கள் வேறாகவும் செய்கிறார்கள் என்று கேழுங்கள் ?
இந்தியாவில் ஏன் மகளிருக்கு மட்டும் என்று பஸ் Service உள்ளது என்று கேளுங்கள்.

Voice இன் அறிவியல் :

ஆண்களுக்கும், பெண்களுக்கும் வெவ்வேறாக குத்துச் சண்டை வைக்கின்றார்கலாம். ஆண்கள் எல்லோருக்கும் இரண்டு பங்கு என்று சொன்ன இஸ்லாமிய நாடுகளில், 5 வயது முதல் 50 வயதான ஆண்கள் வரை எல்லா எடை கொண்டவர்களுக்கும் ஒரே பிரிவில்தான் குத்துச்சண்டை வைக்கின்றார்களா? என்ன ஒரு அறிவு, புல்லரிக்கின்றது.

இஸ்லாத்தில் எந்த நிர்ப்பந்தமும் இல்லை என்றால், இஸ்லாத்தை விட்டு வெளியேறுகின்றவர்களை கொலை செய்வது ஏன்? (ஹதீஸ் : புஹாரி. சம்பவம், இப்னு அப்பாஸ், அலி தொடர்பானது.)

சப்பா முடியல.... அதுதானே சொல்வது நீங்கள் தானே சமத்துவம் வேண்டும் என்கின்றீர்கள் நாங்களா?
மெண்களுக்கு சமத்துவம் வேண்டும் என்பவர்கள் ஏன் பெண்கள் வேறு ஆண்கள் வேறாக போட்டிகளை வைக்கிறார்கள் என்பதுதான் கேள்வி.

யூத விஞ்ஞானி ராபர்ட் கில்ஹாம் இஸ்லாத்தை ஏற்றார்

கருவியல் ஆராய்ச்சியாளரான ராபர்ட் கில்ஹாம் ஒரு யூதர்.

இவர் இஸ்லாத்தைத் தழுவிய விதம். இவரது மனமாற்றத்திற்கு வழி செய்தது திருக்குர்ஆனின் ஒரு வசனம்.

‘மணவிலக்கு அளிக்கப்பட்ட பெண்கள் மூன்று மாதவிடாய் (முடியும்)வரை (மறுமணம் செய்யாமல்) காத்திருக்க வேண்டும்” (2:228) என்கிறது அத்திருவசனம்.

மணவிலக்கு செய்யப்பட்ட பெண்கள் மூன்று மாதம் காத்திருந்த பின்பே -அதாவது மூன்று மாதவிடாய் பருவங்களில் ‘இத்தா’ இருந்த பின்பே மறுமணம் செய்ய வேண்டும்
‘‘விவாகரத்துச் செய்யப்பட்ட பெண்கள் மூன்று மாதவிடாய் (முடியும்)வரை (மறுமணம் செய்யாமல்) தங்கள் விஷயத்தில் காத்திருக்க வேண்டும்’’ (2:228) என்கிறது ஒரு வசனம்.

இந்த வசனத்தைப் படித்தபோதுதான் ராபர்ட் மனம் மாறினார்.

ராபர்ட் நீண்ட காலமாக ஓர் ஆய்வை மேற்-கொண்டிருந்தார். கைவிரல் ரேகைப் பதிவு (Finger Printing) ஒரு மனிதனை அடையாளம் காட்டுவதைப் போன்றே, டி.என்.ஏ. ரேகைப் பதிவு தம்பதியரை அடையாளம் காட்டிவிடும்.

‘ஒரு பெண்ணில் பதிவாகியுள்ள ஆணின் டி.என்.ஏ. ரேகைப் பதிவு மூன்று மாதங்களுக்குப் பிறகே அழியும்” என்பது ராபர்ட்டின் ஆராய்ச்சி முடிவு.

அதையே குர்ஆனின் இவ்வசனம் கூறுகிறது என்பதைக் கண்ட யூத விஞ்ஞானி ஆடிப்போனார்; குர்ஆனை ஏற்றார்.

இது தொடர்பாக, எகிப்தைச் சேர்ந்த டாக்டர் அப்துல் பாசித் முஹம்மது சையித் கூறுகிறார்:

அறிவியல் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டே ராபர்ட் கில்ஹாம் இஸ்லாத்தில் இணைந்துள்ளார். தம்பதியர் உடலுறவு கொண்டால், ஆண் தனது பாலின ரேகையைப் பெண்ணிடம் விட்டுச்செல்கிறான்.

அந்த ரேகை மூன்று மாதங்களுக்குப் பிறகே முற்றாக அழியும் என்று ராபர்ட் கண்டுபிடித்தார்.அதற்கேற்ப, அமெரிக்காவில் ஆப்பிரிக்க முஸ்லிம்கள் அதிகமாக வாழும் ஒரு பகுதியில் கள ஆய்வில் இறங்கினார் அவர் அப்பகுதியில் வாழும் முஸ்லிம் பெண்களிடம் அவர்களின் கணவர்களது ரேகை மட்டுமே பதிவாகியிருந்தது.

அதே நேரத்தில், அமெரிக்கப் பெண்கள் வாழும் ஒரு தெருவில் ஆய்வை மேற்கொண்டபோது, அப்பெண்களிடம் பல்வேறு ரேகைகள் காணப்பட்டன. மூன்று வெவ்வேறு ரேகைகள் அவர்களில் பதிவாகியிருந்தன.

ராபர்ட் கில்ஹாம் அதிரடியாக ஒரு காரியம் செய்தார். அவர் தம் மனைவியை மருத்துவப் பரிசோதனைக்கு ஈடுபடுத்தினார்.

அவளிடம் மூன்று ரேகைப் பதிவுகள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். அத்துடன் தம்முடைய மூன்று மகன்களில் ஒருவன் மட்டுமே தமக்குப் பிறந்தவன் என்பதையும் கண்டறிந்தார்.
இதிலிருந்து, மூன்று மாத ‘இத்தா’ ஏன் கடமையாக்கப்பட்டது என்பதற்கான காரண விளக்கமும் கிடைக்கிறது.

முந்தைய கணவனின் டி.என்.ஏ. ரேகைப் பதிவு முற்றாக அழிய மூன்று மாதங்கள் பிடிக்கும்.

அதன்பின் அவள் மறுமணம் செய்துகொண்டால், டி.என்.ஏ. பரிசோதனையில் குழப்பம் இராது. இல்லையேல், மறுமணம் செய்தபின் பிறக்கும் குழந்தையின் டி.என்.ஏ.வும் முந்தைய கணவனின் டி.என்.ஏ.வும் ஒத்துப்போக இடமுண்டு.

குழந்தை யாருடையது என்ற குழப்பம் வெடிக்கும்....

இந்த உண்மையை குர்ஆன் கூறியுள்ளதை ஒப்புகொண்டார் இஸ்லாத்தை ஏற்றார் .

நசீர் சிறப்பாக விடையளித்துள்ளார்.

nazeer h, மற்றவர்கள் சொல்வதை ஆராயாமல் அப்படியே நம்ப வேண்டாம். அப்படி ஒரு யூத வின்ஞானியே இல்லை என்றும், மேலும் யூத மதத்திலும் மூன்று மாதங்கள் இத்தா உள்ளது என்றும், இந்த செய்தியே ஒரு பொய் என்றும் ஒரு பதிவை பார்த்தேன்.

பின்னர் தேடி பார்த்ததில், ஆச்சரியம் என்னவென்றால், இது ஒரு பொய்யான செய்தி என்பதுதான்.

Post a Comment