Header Ads



சிங்கம் ஆட்டோவில் செல்லும் காலம் - ரணிலின் அதிரடி பதிலும்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பெகேஜ் போய் என அழைக்கப்படும் ராஜபக்ச ரெஜிமென்டின் பலமான நபரான சஜின் வாஸ் குணவர்தன் அண்மையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்திப்பதற்கு அவரது கொள்ளுப்பிட்டி வீட்டிற்கு சென்றுள்ளார்.

பிரதமரை சந்திக்க அவர் ஒரு முச்சக்கர வண்டியிலேயே சென்றுள்ளார். அவரது வாகனத்தை ரோயல் கல்லூரிக்கு அருகில் நிறுத்தி வைத்து விட்டு பிரதமரின் வீட்டிற்கு யாருக்கும் தெரியாமல் இரகசியமாக சென்றுள்ளார்.

தன் அருகிலே இருக்கும் பலரின் கோரிக்கைகளுக்கமையவே பிரதமர் அவர்களிடம் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக சஜித்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இரண்டு வருடங்களுக்கு முன்னர் சிங்கத்தை போன்று செயற்பட்டவர் இன்று முச்சக்கர வண்டியில் வந்து இறங்குவதனை பார்த்ததும் பிரதமருக்கு அன்று பம்பலப்பிட்டியில் வைத்து ஊ சத்தமிட்டவரா இவரா என சிந்திக்க தோன்றியுள்ளது.

பிரதமர் அவ்வாறு சிந்தித்தவாறு பத்திரிகை ஒன்று படித்துக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் “மாலை வணக்கம் சர்” என சிரித்தவாறு பிரதமர் அருகில் சென்றுள்ளார்.

எனினும்பி ரதமர் அவரை கண்டுக்கொள்ளாமல் மறுபடியும் பத்திரிக்கையை படிப்பதற்கு ஆரம்பித்துள்ளார்.

பிரதமர் கதைப்பார் என சஜின் எதிர்பார்த்து இருந்த போதிலும் அவரிடம் இருந்து எவ்வித சத்தமும் வராத நிலையில், இறுதியில் சஜித் கதைப்பதற்கு ஆரம்பித்துள்ளார்.

“ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு தற்போது முடிவு வந்து விட்டது. இரண்டு தலைவர்களும் இணைந்து கட்சியை உடைத்து சாப்பிடுகின்றார். உள்ளூராட்சி தேர்தலின் போது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினால் ஒன்றும் செய்ய முடியாது. ஐக்கிய தேசிய கட்சியினால் தற்போது பலமான வெற்றியை பெற முடியும். ஐக்கிய தேசிய கட்சி வலுவாக உள்ளது.

அமைச்சர் வஜிர சிறப்பாக செயற்படுகின்றார். நாங்களும் முழுமையான ஆதரவை வழங்குவோம். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு கிடைக்கு பல வாக்குகளை என்னால் உடைக்க முடியும். ஐக்கிய தேசிய கட்சிக்கு கிடைக்காத வாக்குகளை சுதந்திர கட்சிக்கு கிடைக்கவிடாமல் செய்ய முடியும்.

நான் கூறினால் அவர்கள் வாக்கு சாவடிக்கு செல்ல மாட்டார்கள். மஹிந்த ராஜபக்ச வேலையில் இறங்கினால் அதனை நிறுத்த எனக்கு தெரியும். உங்களுக்காக நான் என்ன செய்ய வேண்டும் என்று சிறிய தகவல் ஒன்றை மாத்திரம் அனுப்பி வைத்தால் போதும் என சஜித் தெரிவித்துள்ளார்.

சஜித்தின் முழுமையான கதையை கேட்ட பிரதமர் ரணில், கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.

தனது பேச்சை இடைநிறுத்தியதும், பிரதமர் பத்திரிகைகை ஓரமாக வைத்து விட்டு சஜித்தை பாரத்து கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

ரணில் என்பவர் இவர்கள் அனைவரை விடவும் புத்திசாலியான ஒருவராகும். எனவே உங்கள் உதவி தேவையில்லை. நீங்கள் சொன்ன எதையும் செய்யாமல் இருந்தாலே போதும் என பிரதமர் தெரிவித்துள்ளார்.

பிரதமரின் பதிலினால் ஏமாற்றமடைந்த சஜித் வாஸ் குணவர்தன தனது முகத்தை பைக்குள் போட்டுக் கொண்டு, ரோயல் கல்லூரி பகுதிக்கு நடந்தே சென்றுள்ளார். “மஹிந்தவை போன்று இவரை ஒன்று செய்ய முடியாதென புலம்பியவாறு சென்றுள்ளார் என கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

2 comments:

  1. கதையா? நிஜமா?

    ReplyDelete
  2. நாய்க்கு ஒரு காலம் நரிக்கு ஒரு காலம்.

    ReplyDelete

Powered by Blogger.