Header Ads



சுவிஸ் நாட்டில் இலங்கையின் கலாசார உணவுவிழா, புலி ஆதரவாளர்கள் மிரட்டல் - பொலிஸார் களத்தில் குதிப்பு

-JN-

சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில் உள்ள இலங்கை துணைத் தூதரகம் இலங்கையின் கலாசார, வர்த்தக மற்றும் உணவு பெருவிழாவை நடத்த உள்ளது.

இந்த விழா எதிர்வரும் 09, 10, 11 திகதிகளில் நடைபெறவுள்ளதாக துணைத்தூதரகம் அறிவித்துள்ளது.

மேற்படி பெருவிழாவிற்கான அனுமதி இலவசம், விழாவில் 60 வீத இலங்கையர்களும், 40 வீதமான சுவிஸ் பிரஜைகளும் என 6 ஆயிரம் முதல் 12 ஆயிரம் வரையானவர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்ப்பதாகவும் துணைத் தூதுவர் விதர்சன முனசிங்க வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

இவ்வாறான நிலையில் சுவிட்சலாந்தில் உள்ள பல வர்த்தக நிலயங்கள் தமது ஆதரவினையும் நிகழ்வு நாட்களில் கடைகளை் நடாத்துவதற்கும் தயாராகி இருந்தன.

இவ்வாறான நிகழ்வுகளுக்கு வர்தக நிலயங்கள் வழங்கிய ஆதரவினை மீளப் பெறுவதுடன் அன்றைய நிகழ்வை பகிஸ்கிக்கும் படி சுவிட்சலாந்திலுள்ள தமிழர் ஒருங்கினைப்புக் குழு புலிசார்பு அமைப்பு அத்தனை வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்களையும் மிரட்டியுள்ளதுடன் பல எச்சரிக்கை வார்த்தைகளையும் விடுத்தள்ளனர்.

நிலமைகள் தொடர்பாக ஜெனிவாவில் உள்ள இலங்கைத் துாதரகத்திற்கு இவ் விடயம் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

நிலமைகளை உண்ணிப்பாக அவதானித்த சுவிட்சலாந்தில் உள்ள இலங்கைத்துாதவர் இவ் விடயங்களை இலங்கை வெளிவிவகார அமைச்சிற்கு தெரியப்படுத்தியுள்ளார்.

மேற்படி விடயத்தை உடனடியாக விசாரனைக்கு உட்படுத்தும் படியாக சுவிட்சலாந்து அரசை இலங்கை அரசு கோரியுள்ளதுடன் இவ் விசானைகளின் தன்மைகளை அவதானிப்பவராக ஜெனிவாவில் உள்ள இலங்கைத் துாதர் செயற்படுவார் எனக் கூறப்பட்டுள்ளது.

இதனடிப்பரடையில் விசாரனையை ஆரம்பித்த சுவிட்சாந்து விசேட பொலிசாரிற்கு ஆதாரமாக சூரிச், வாசல், வேர்ன், லுாட்சன் ஆகிய மாநிலங்களில் உள்ள வர்த்தக நிலயங்களிற்கு சென்று மிரட்டல் விட்டவர்களது பெயர்கள் அவர்களது மாநிலங்களின், பெயர்கள், புகைப்படங்கள் மற்றும் கைத் தொலைபேசிகளை பயன்படுத்தி Viber, WhatsApp மூலம் குறுந்தகவல் அனுப்பியவர்களின் பெயர் விபரங்கள் என்பன ஜெனிவாவில் உள்ள இலங்கைத் துாதரகம் ஊடாக சுவிஸ் அரசிற்கு வழங்கப் பட்டுள்ளது.

சுவிட்சலாந்து இலங்கை அரசுகள் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் பிரகாரம் அரசின் மக்கள் மேம்பாட்டு நிகழ்வுகளைக் குழப்ப எத்தனிப்பவர்களை கைது செய்து இலங்கைக்கு அனுப்ப வாய்ப்புள்ளதாக சுவிஸ் செய்திகள் தெரிவிக்கின்றன்.

விசாரனைகளை விரைவு படுத்துவதற்காக மாநிலங்கள் அளவில் பொலிஸ் குழு அமைத்து விசானைகள் துரிதப்படுத்தப் பட்டுள்ளதாக சுவிஸ் வெளியுறவுத் துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதில் தொடர்புடைய பலர் சுவிட்சலாந்து நாட்டின் சிவப்பு எச்சரிக்கை பட்டியலுக்குள் இருப்பவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது.


3 comments:

  1. இந்த தீவிரவாதிகளை பிடித்து இலங்கைக்கு நாடு கடத்தி பயங்கவாத சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க வேண்டும்.

    ReplyDelete
  2. இவனுகல்ட கொலுப்பு இன்னுமா குறயவில்லை

    ReplyDelete
  3. These terrorist basterds..should be deport to srilanka..and will get nice treatment from our jailers..

    ReplyDelete

Powered by Blogger.