Header Ads



உழ்ஹிய்யா கடமைக்கு, இடையூறு வேண்டாம் - பொலிஸார் சுற்றுநிருபம்

முஸ்­லிம்­களின் சமயக் கட­மை­யான உழ்­ஹிய்­யா­வுக்­கான மாடு­களை வாக­னங்­களில் கொண்டு செல்லும் போது தேவை­யான சட்­ட­ரீ­தி­யான ஆவ­ணங்கள் இருப்பின் பொலிஸார் வீண் கால தாம­தங்­களை  ஏற்­ப­டுத்­தாது அனு­மதி வழங்க வேண்டும் என சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் (நிர்­வாகம்) சி.டி. விக்­கி­ர­ம­ரத்ன சுற்று நிருபம் மூலம் உத்­த­ரவு பிறப்­பித்­துள்ளார்.

சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதி­பரின் 2016.09.06 ஆம் திக­தி­யிட்ட சுற்­று­நி­ருபம் அனைத்துப் பிர­தேச சிரேஷ்ட பொலிஸ்மா அதி­பர்கள், பிரதி பொலிஸ்மா அதி­பர்கள், பிர­தே­சங்­க­ளுக்குப் பொறுப்­பான பொலிஸ் அதி­கா­ரிகள் மற்றும் பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­கா­ரி­க­ளுக்கு அனுப்­பி­வைக்­கப்­பட்­டுள்­ளன.

குறிப்­பிட்ட சுற்று நிரு­பத்தில் '2016 ஆம் ஆண்டு செப்­டெம்பர் மாதம் 12 ஆம் திகதி கொண்­டா­டப்­ப­ட­வுள்ள ஹஜ்ஜுப் பெருநாள் காலத்தில்  மாடுகள் (ஆண்) வாக­னங்­களில் எடுத்துச் செல்லும் போது பொலிஸ் நிலை­யங்­களின் கவ­னத்­திற்கு கொண்டு வரப்­பட்டால் சம்­பந்­தப்­பட்­ட­வர்­க­ளிடம் அதற்­கான சட்­ட­ரீ­தி­யான ஆவ­ணங்கள் இருந்தால் வீண் கால தாம­தங்­களை ஏற்­ப­டுத்­தாது மாடுகள் விடு­விக்­கப்­பட வேண்டும். அனைத்து வீதி தடை­க­ளிலும் இந்த நட­வ­டிக்கை பின்­பற்­றப்­பட வேண்டும்' என சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் (நிர்­வாகம்) சி.டி. விக்­கி­ர­ம­ரத்ன குறிப்­பிட்­டுள்ளார்.

அத்­தோடு மிரு­க­வதை தொடர்­பான நட­வ­டிக்­கைகள் ஏற்­க­னவே நடை­மு­றையில் இருப்­பது பின்­பற்­றப்­ப­ட­வேண்­டு­மெ­னவும் அவர் வேண்­டுகோள் விடுத்­துள்ளார்.

மாகாண சபைகள் மற்றும் உள்­ளூ­ராட்சி அமைச்சர் பைசர் முஸ்­தபா பொலிஸ்மா அதி­பரைச் சந்­தித்து முஸ்­லிம்­களின் உழ்­ஹிய்யா கட­மையை எவ்­வித இடை­யூ­று­க­ளு­மின்றி மேற்­கொள்­வ­தற்கு பொலிஸின் ஒத்­து­ழைப்பு கோரி­யி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.

உழ்­ஹிய்­யா­வுக்­கான மாடு­களை ஓரி­டத்­தி­லி­ருந்து மற்றோர் இடத்­திற்கு எடுத்துச் செல்­லப்­படும் போது பொலிஸார் வீண் கால தாம­தங்­களை ஏற்­ப­டுத்­து­வதை தவிர்க்­கு­மாறும் கோரி­யி­ருந்தார்.

மாகாண சபைகள் மற்றும் உள்­ளூ­ராட்சி அமைச்சர் பைசர் முஸ்­த­பாவைத் தொடர்பு கொண்டு இது தொடர்பில் வின­விய போது அவர் இவ்­வாறு விளக்­க­ம­ளித்தார். 

உழ்­ஹிய்­யா­வுக்­கான மாடுகள் தேவை­யான அனைத்து ஆவ­ணங்­க­ளுடன் ஓரி­டத்­தி­லி­ருந்து வேறோர் இடத்­துக்கு கொண்டு செல்­வதில் எவ்­வித தடை­களும் ஏற்­ப­டுத்­தப்­ப­ட­மாட்­டாது. அத்­தோடு மிரு­க­வதை சட்­டங்­க­ளையும் பின்­பற்ற வேண்டும். அது மீறப்­ப­டக்­கூ­டாது என்றார்.

உழ்­ஹிய்­யா­வுக்கு பிரா­ணி­களை வண்­டி­களில் அனு­ம­தி­யின்றி ஏற்றி வரு­வ­தற்கு தடை­வி­திக்­கப்­பட்­டுள்­ளது. அத்­தோடு அனு­மதி பெற்றதையும் விட கூடுதலான எண்ணிக்கையான பிராணிகளை எடுத்துச் செல்லக்கூடாது. 

மிருகத்தின் உரிமைக்கான சான்றிதழ், மாட்டு விபரச்சீட்டு, மிருக சுகாதார அத்தாட்சிப் பத்திரம், மிருகங்களை எடுத்துச் செல்வதற்கான அனுமதிப்பத்திரம் போன்ற ஆவணங்கள் அவசியமாகும்.

ARA.Fareel

2 comments:

  1. We Muslims are thankful to the IGP and the DIG(Admin) for having issued a Circular with regard to Transport of cattle and facilitating our brothers to perform their ULHIYA for this Hadj. Lets be cooperative with the Govt.

    ReplyDelete
  2. Thank you to the IGP and the DIG for issuid a circular with regard to transport .our muslims very important fallow this rules .

    ReplyDelete

Powered by Blogger.