Header Ads



லசந்தவை கொலை செய்தது பொன்சேகாவே என, ரணில் கூறினார் - கோத்தபாய


ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவை கொலை செய்தது சரத் பொன்சேகாவே என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க முன்னொரு தடவை கூறியிருந்தார்.

அந்த கருத்தை தற்போது நான் 100க்கு 5000 வீதம் ஒப்புக்கொள்கின்றேன் என முன்னாள் பாதுகாப்பு செயளாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நேற்று சிங்கள ஊடகம் ஒன்றிக்கு வழங்கிய செவ்வியின் மூலமாகவே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும் 2000 வாக்குகள் பெற்றுக் கொண்ட ஒருவர் பிரதேசசபை உறுப்பினர் ஆகக் கூட பதவி வகிக்க முடியாது ஆனால் அதற்கும் குறைவான வாக்குகளைப் பெற்றுக்கொண்ட பொன்சேகா எவ்வாறு பாராளுமன்ற உறுப்பினர் பதவியைப் பெற்றுக்கொண்டார் என்ற கேள்வினையும் அவர் முன்வைத்தார்.

இதேவேளை லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பில் தீவிர விசாரணைகள் தற்போது இடம் பெற்றுக் கொண்டு வரும் இந்த சமயத்தில் கோத்தபாய பொன்சேகாவை அந்த கொலையுடன் இணைக்கும் விதமாக தற்போது கருத்து வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பில் பிரதமரின் பதில் என்னவாயிருக்கும்? அல்லது பொன்சேகா விசாரணை செய்யப்படுவாரா? அவர் சிக்கலில் சிக்கிக் கொள்வாரா? அல்லது அவரை காப்பாற்றி வரும் ரணில் சிக்கலில் சிக்குவாரா? என்ற எதிர்பார்ப்பே தற்போது அதிகமாக காணப்படுவதாக அரசியல் அவதானிகள் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பொன்சேகா அண்மையில் பாராளுமன்றத்தில் கோத்தபாயவிற்கு எதிராக குற்றச்சாட்டுகளை பகிரங்கமாக முன்வைத்தார். அதனைத் தொடர்ந்து பொன்சேகாவின் குற்றங்களை வெளிப்படுத்த கோத்தபாய முயன்று வருவதாகவும் கூறப்படுகின்றது.

No comments

Powered by Blogger.