Header Ads



உயரிய குணாம்சங்களினால், அழகுபெறும் ஹஜ் பெருநாள் - ஜனாதிபதி மைத்திரி பெருமிதம்

வாழ்த்துச் செய்தி

மனித நேயம், தியாகம் ஆகிய உயரிய குணாம்சங்களினால் அழகுபெறும் புனித தினமாகிய ஈதுல் - அல்ஹா எனும் ஹஜ் திருநாள் இஸ்லாமியர்களின் வரலாற்றில் தனது முத்திரையினை ஆழமாக பதித்துள்ளது. 

சமாதானத்தினதும் சகோதரத்துவத்தினதும் எல்லைகளை விரிவுபடுத்தி, முஸ்லிம் மக்கள் புனித குரானில் வரும் முஹமது நபி நாயகத்தின் வழிகாட்டலை ஏற்று பின்பற்றும் தத்தமது மத பக்திமீதான பரிய அர்ப்பணிப்பின் உச்சக்கட்டமே ஹஜ் வழிபாடு மூலம் வெளிப்படுகின்றது. 

இப்பூவுலகில் வேறுபட்ட புவியியலின் தன்மைகள், பல்வேறு கலாசாரங்கள், பல்வேறு மொழிகள் உட்பட்ட அனைத்து எல்லைகளையும் கடந்து ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தினையும் ஒற்றுமை எனும் பிணைப்பால் இணைக்கும் இறை வழிபாடாகவே ஹஜ் பண்டிகை உலக மத வழிபாடுகள் மத்தியில் முதன்மைப்படுத்தப்படுகின்றது. 

தனித்துவத்திற்கு மதிப்பளிப்பதன்மூலம் மானிட பிணைப்பின் உன்னத தன்மையினை அடிமனதில்தாங்கி அதன்மூலம் மானிட சமூகத்தில் ஏற்படுத்தும் சகவாழ்வினை முழு உலகமும் வேண்டிநிற்கும் இத்தருணத்தில், ஹஜ் திருநாள் மூலம் உலகிற்கு பெற்றுக்கொடுக்கும் இதமான சமிக்ஞை சமூகத்தினை ஆனந்தத்தில் ஆழ்த்ததக்கதாகும்.

புதியதோர் சமூகத்தினைநோக்கி அடியெடுத்து வைத்துக்கொண்டிருக்கும் இலங்கைக்கு,      ஹஜ் பண்டிகை பெற்றுக்கொடுக்கும் அவகாசமானது மிகுந்த முக்கியத்துவத்தினைப் பெறுகின்றது. 

அவ்வாறானதோர் சுபமான எதிர்பார்ப்புக்களை முன்நிலைப்படுத்தி இன்று அனுஷ்டிக்க்படும் புனித ஹஜ் பண்டிகையானது, இலங்கைவாழ் சகல இஸ்லாமியர்களுக்கும் நல்லாசிகள் கிட்டும் ஹஜ் பண்டிகையாக அமைய எனது நல்லாசிகள் கலந்த வாழ்த்தினை தெரிவித்துக் கொள்கின்றேன். 

மைத்ரிபால சிறிசேன
2016 செப்டெம்பர் 12ஆம் திகதி

No comments

Powered by Blogger.