Header Ads



அமெரிக்கா, சவூதி, துருக்கி, உதவியை நிறுத்தினால் போர் முடிவுக்குவரும் - அஸாத்

சிரியாவில் அமைதி ஒப்பந்தம் தோல்வியடைய அமெரிக்காதான் காரணம் என்று சிரியா அதிபர் பஷார் அல்-அஸாத் கூறினார்.

ஏ.பி. செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் இதை அவர் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது: 

பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் ரஷியாவுடன் இணைந்து செயல்பட அமெரிக்காவுக்கு விருப்பம் இல்லை. அமைதி ஒப்பந்தம் தோல்வி அடைய அமெரிக்காதான் காரணம்.

சிரியாவின் கிளர்ச்சியாளர்களுக்கு வெளியிலிருந்து கிடைத்து வரும் உதவியால் உள்நாட்டுச் சண்டை முடியாமல் நீடிக்கிறது. சிரியாவின் தற்போதைய நிலைக்கு அதன் எதிரிகள்தான் காரணம். அமெரிக்கா, சவூதி, துருக்கி உள்ளிட்ட நாடுகள் கிளர்ச்சியாளர்களுக்கு அளித்து வரும் உதவியை நிறுத்தினால் போர் முடிவுக்கு வரும். சிரியாவைவிட்டு வெளியேறிய அனைவரும் அடுத்த சில மாதங்களிலேயே நாடு திரும்புவர்.

அலெப்போ நகரில் உதவிப் பொருள்கள் எடுத்துச் செல்வதற்கு சிரியா அரசு தடையாக நிற்கவில்லை. கடந்த வாரம் டெயீர் எஸ்úஸார் பகுதியில் உள்ள விமான தளம் அருகே சிரியா ராணுவ முகாம் மீது அமெரிக்கா வேண்டுமென்றே நிகழ்த்திய தாக்குதலால் 62 வீரர்கள் பலியாகினர். அந்த விவகாரத்திலிருந்து அனைவரின் கவனத்தையும் திசை திருப்புவதற்காகத்தான் ஐ.நா. உதவிப் பொருள் வாகனங்கள் தாக்கப்பட்டன என்றார் அவர்.

5 comments:

  1. ஒரு கட்டத்தில் இவனுடைய ஆட்சி கடைசி காலம் மிகவும் குறிகிய காலமாகிவிட்டன but திடிரென்று உருவாகின ISIS ஆயுதப்படையின் வருகையால் ஆட்சி மற்றம் ஏட்படாமல் சென்றன எது எப்படியோ சிரியா நாட்டு கிளர்ச்சியாளர்கள் அதிக பலமாக இருக்கிறார்கள்.

    ReplyDelete
    Replies
    1. இதில் நீங்கள் யாருக்கு ஆதரவு?

      Delete
  2. Hay stupid do you know who is Isis?

    ReplyDelete
  3. Isreal asad america all are good friends.but they are playing drama

    ReplyDelete
  4. Kilarchiyaalarhal palamaaha irunthu enna pirayosanam,syria naatyin 70% aana pahuthi mutraaha alivadainthu vittathu

    ReplyDelete

Powered by Blogger.