Header Ads



இலங்கைக்கு ஸிகா + சிக்குன்குன்யா எச்சரிக்கை

ஆசிய நாடு­களில் தற்­ச­மயம் ஸிகா மற்றும் சிக்குன் குன்யா வைரஸ்கள் பரவி வரு­வ­தை­ய­டுத்து இலங்­கைக்கும் குறித்த வைரஸ்கள் தொடர்­பான எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது.

இதன் கார­ண­மாக பண்­டா­ர­நா­யக்க சர்­வ­தேச விமான நிலையம் மற்றும் கொழும்பு துறை­முகம் ஆகி­ய­வற்றின் உள்­நு­ழையும் மற்றும் வெளிச் செல்லும் வாயில்­களில் இது தொடர்­பான அறி­வித்­தல்கள் தொங்­க­வி­டப்­பட்­டுள்­ளன.

இந்­தி­யாவின் நியூ டில்லி நகரில் சிக்குன் குன்யா வைரஸ் வேக­மாக பரவி வரு­கின்ற அதே நேரம் சிங்­கப்பூர் மற்றும் தாய்­லாந்து ஆகிய நாடு­களில் ஸிகா வைரஸ் பரவி வரு­கின்­றது.

இவை இரண்டு நுளம்­பு­களால் பரவும் நோய்­க­ளே­யாகும்.

இதற்­க­மைய விமான நிலை­யத்தில் அமைக்­கப்­பட்­டுள்ள விசேட சுகா­தார கரும பீடத்தில் வெளி­நாட்டுப் பய­ணிகள் பரி­சோ­த­னைக்­குட்­ப­டுத்­தப்­ப­டு­வ­தாக சுகா­தார அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

இதே­வேளை அண்­மையில் இந்­தி­யா­வுக்கு யாத்­தி­ரைக்­காக சென்று திரும்­பிய சிலாபம் பகு­தியைச் சேர்ந்த இருவர் கடும் காய்ச்சல் கார­ண­மாக உயி­ரி­ழந்­த­தை­ய­டுத்து அது தொடர்பில் விசேட ஆய்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.