Header Ads



இப்றாஹீம் அன்சார் மீதான, தாக்குதல் முட்டாள்தனமானது - பாராளுமன்றத்தில் சம்பந்தன் சீற்றம்


மலேசியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மீது தாக்குதல் நடத்தியவர்களில் இலங்கையர்கள் இருந்தால், அவர்களை நாட்டுக்கு வரவழைத்து தண்டனை வழங்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் பாராளுமன்றத்தில் வலியுறுத்தினார்.

நாட்டில் குழப்பநிலைமையை ஏற்படுத்தவேண்டும் என்ற அரசியல் நோக்கம் கொண்டவர்களே இவ்வாறான முட்டாள்தனமான செயற்பாடுகளில் ஈடுபடுவதாகவும் அவர் கூறினார்.

மலேசிய உயர்ஸ்தானிகர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் ஐ.ம.சு.மு எம்.பி தினேஷ் குணவர்த்தன நேற்று பாராளுமன்றத்தில் 23/2 நிலையியற் கட்டளையின் கீழ் கேள்வியெழுப்பியிருந்தார். இதன்போது கருத்துத் தெரிவிக்கும்போதே எதிர்க்கட்சித் தலைவர் இதனைக் குறிப்பிட்டார்.

மலேசியாவில் இடம்பெற்ற இத்தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கின்றோம். தாக்குதல் நடத்தியவர்கள் மத்தியில் இலங்கையர்கள் எவரும் இல்லையென பிரதமர் கூறியிருந்தார். இருந்தாலும் இலங்கையர்கள் எவரும் சம்பந்தப்பட்டிருந்தால் அவர்களை நாட்டுக்கு வரவழைத்து சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

நாடு ஸ்திரத்தன்மை மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கும் சூழ்நிலையிலேயே இவ்வாறான தேவையற்ற முட்டாள்தனமான தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளது. இவ்வாறான சம்பவங்கள் ஊக்குவிக்கப்படக்கூடாது.

ஸ்திரத்தன்மை மற்றும் நல்லிணக்கம் ஏற்பட்டுவிடக்கூடாது. நாடு எப்பொழுதும் குழப்பநிலையில் இருக்க வேண்டும் என விரும்பும் அரசியல் நோக்கம் கொண்ட முட்டாள்தனமானவர்களின் செயற்பாடே இந்தத் தாக்குதல்.

இவ்வாறான சம்பவங்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். இதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் மேலும் கூறினார்.

4 comments:

  1. Rather just saying it is foolish, you should say it is terrible, a worst heinous , unforgivable act.

    ReplyDelete
  2. விசாரணைகள், தண்டனைகள், தீர்ப்பளித்தல்
    இவைகளைக் கேட்டுக் கேட்டு சலித்துப் போயுள்ளோம்! எல்லாமே ஒரு வகை நாடகந்தான். எதிலும் realityஐக் காணோம்!

    ReplyDelete
  3. இலங்கையில் நடந்து முடிந்த பிரச்சினைகள் தொடர்பாக , இலங்கை தமிழ் மக்கள் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டிருக்கின்றார்கள் . எனவே வேறொரு நாட்டை சேர்ந்த தமிழர்கள் தலைபோடக்கூடாது என்று இலங்கை "தமிழர் விடுதலைக் கூட்டணி" யின் மூலம் எல்லா பிறநாட்டு தமிழர்களுக்கும் முறையான அறிவித்தல்கள் வழங்கப்படல் வேண்டும் . இல்லையென்றால் இலங்கையின் இனப் பிரச்சினைக்கான தீர்வு என்பது எட்டாக்கனிக்கு கொட்டாவி விட்ட கதையாக மாறி மீண்டும் தொடர்ந்து கொண்டே போகும் .

    ReplyDelete

Powered by Blogger.