Header Ads



இலங்கையிலிருந்து, கட்டாருக்கு செல்வோரின் கவனத்திற்கு..!

-Safwan Basheer-

கத்தாரின் மொத்த சனத்தொகையில் இலங்கை ஐந்தாவது இடத்தில் இருக்கின்றது. கத்தாரில் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான இலங்கையர்கள் தொழில் நோக்கமாக வாழ்கிறார்கள்.

ஆனால் கடந்த இரண்டு வருடங்களாக  கத்தாரின் தொழிற்சந்தை மிக மோசமாக வீழ்ச்சியடைந்துள்ளதை அவதானிக்க  முடிகின்றது. கத்தாரின் அதிகமான அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் அண்மைக்காலமாக தமது தொழிலாளர்களை திருப்பி அனுப்பிக் கொண்டு இருக்கின்றன.

கத்தாருக்கு வேலை தேடிச் செல்லும் இலங்கையர்கள் இரண்டுவிதமான  வீசா முறைகளையே பயன்படுத்துகிறார்கள்.

ஒன்று முகவர்கள் அல்லது உறவினர்கள்  அல்லது இணையம் மூலம் ஒரு நிறுவனத்தில் வேலைக்கான உத்தரவாதத்தோடு நேரடியாக அந்த நிறுவனத்துக்கே வேலைக்குச் செல்வது.

அடுத்தது ஃப்ரீ வீசா எனும் வீசா முறையினூடாக கத்தார் சென்று ஒரு நிறுவனத்தில் வேலை தேடிக்கொள்வது.

இலங்கையர்கள் கத்தார் செல்ல அதிகமாகப் பயன்படுத்துவது நான் இரண்டாவது சொன்ன ஃப்ரீ வீசா முறயையே. இந்த வீசா முறையில் வேலை தேடிச்  செல்வதில் சில சாதகமான காரணிகள் 
இருக்கின்றன.அதனால்தான் அதிகமான இலங்கையர்கள் இந்த வீசா முறையைப் பயன்படுத்துகிறார்கள்.

ஆனால் கத்தாரின் தற்போதைய நிலமையில் அரை குறை கல்வித் தகைமைகளோடு ஃப்ரீ வீசாவில்  வேலை தேடிச்செல்வதில் ஒரு பாரிய அவதானம் இருக்கின்றது. இலங்கையிலிருந்து கத்தாருக்கு வரும் அதிகமானவர்களில் மூன்று முக்கியமான தரப்பினர்கள் இருக்கின்றனர்,

ஒன்று,
உயர்தரம் வனிகப்பிரிவில் படித்துவிட்டு Accountant வேலைதேடி வருபவர்கள்.
இரண்டு,
சாதரணதரம் படித்துவிட்டு அல்லது உயர்தரம் கலைப்பிரிவில் படித்துவிட்டு Sales,Marketing வேலை தேடி வருபவர்கள்.
மூன்று 
சில தனியார் கல்வி நிறுவனங்களில்  Diploma in quantity surveying படித்துவிட்டு 
QS வேலை தேடி வருபவர்கள்.

இந்த மூன்று தரப்பினருக்கும் இன்றைய சூழலில் கத்தாரி்ல் வேலை கிடைப்பதில் பாரிய சவால்கள் இருக்கின்றன. இந்த மூன்று தரப்பினரும் தமது தகுதிகளை மீள் பரிசீலனை செய்ய வேண்டும், அப்போதுதான் போட்டியான 
கத்தார் தொழிற்சந்ததையில் ஒரு பதவியில் நின்று நிலைக்க முடியும்.

Accountant வேலை தேடி வரும் ஒருவர் கட்டாயம் அந்தத் துறைசார்ந்த ஒரு டிக்கிரியோடு வருவது முக்கியம். அல்லது குறித்த துறையில் சர்வதேச அங்கீகாரம்பெற்ற  ஒரு சான்றிதழேனும் பெற்றிருக்க வேண்டும்.

அடுத்து Sales & Marketing என்று சொல்லிக் கொண்டு சாதாரண சான்றிதழோடும், மீீலாத் விழாவிலும், பாடசாலை விளையாட்டுப்போட்டியிலும் பெற்றுக்கொண்ட சான்றிதள்கழோடும்  வருபவர்களுக்கு கத்தாரில் ஒரு சரியான  வேலை தேடிக்கொள்வது என்பது இன்றைய சூழலில் மிகக் கஷ்டமான காரியம்.

எனவே இப்படியானவர்களுக்கு வெளிநாட்டு மோகம் இருந்தால் கட்டாயம் மத்திய கிழக்கில் கிராக்கி உள்ள ஏதாவது  Professional course ஒன்றை ஒரு அங்கீகரிக்கப்பட்ட நிறுவனமொன்றில் படித்துச் சென்றால்  பிழைத்துக்கொள்ளலாம்.

அடுத்து QS. இது ஒரு காலம் இலங்கையர்கள் கத்தாரில் கொடிகட்டிப்பறந்த ஒரு தொழில்த்துறையாக இருந்தாலும்  இத்துறையில் இப்பேது போதுமான அளவு  ஆள் இருக்கிறார்கள்.

கத்தாரின் முக்கியமான நிர்மாணப்பணிகளும் முடியும் தருவாயில் இருப்பதனால் புதிதாக QS வேலை தேடி வருபவர்களுக்கு கத்தார் அவ்வளவு 
பொருத்தமான நாடாக இருக்காது என்பது எனது அபிப்ராயம். சில வருடங்களின்  பின்னர் இந்த நிலமை சீராகலாம்.

எனவே QS மாதிரியான துறைகளில் படித்துவிட்டு கத்தார் செல்ல இருப்பவர்கள் அவர்களது துறையைக் கொஞ்சம் மீள்பரீசிலனை செய்வது 
பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கினறேன்.

குறிப்பாக இப்போது மத்திய கிழக்கில் அதிகம் கிராக்கி உள்ள Interior Designing மாதிரியான துறைகளில் தமது கல்வி நடவடிக்கைகளைத் தெடர்ந்தால்  மத்திய கிழக்கு தொழிற்சந்தையில் இனிவரும் காலங்களில் நிச்சயம்
நல்ல மதிப்புக் கிடைக்கும்.

பொதுவாக இலங்கையர்கலாகிய நாம் இலங்கையில் செய்வதற்கு எதுவுமே இல்லாத பொழுதே வெளிநாடு செல்ல  தீர்மாணிக்கிறோம். 

வெளிநாடு சென்று என்ன செய்வதென்று எம்மிடம் எந்த ஐடியாவும் இருப்பதில்லை. அதனால்தான் நாம் இன்னும் வெளிநாட்டு வாழ்க்கை குறித்து சோகக் கவிதை எழுதிக் கொண்டு இருக்கின்றோம்.

2 comments:

  1. Home.land is better than abroad ..
    So get your qualifications and find a work home....ok. that is best option..
    Muslim community need to compete even in SL to get good jobs..
    Why not this type of guidance to help out in Sri Lanka..select a course that is good for SL.
    Hundreds of industrial works are out there in SL....
    Do some new business enterprise in SL?
    Establishing new small scale in industries ..
    Professional course such as hospitality and tourism, nursing and many more areas out there but our people do not know ...
    We live in service.sector job area so guide into white color jobs..
    Teaching
    Nursing
    Civil service jobs such as police, army and navy and other services sectors..
    I think we are less than one 1% in four forces of Sri Lanka..?
    How long it can be like that ?
    In terms of employment rate we do not exceede more 4% in government sectors in.employment in Sri Lanka..
    So instead of going abroad try to find jobs in SL

    ReplyDelete
  2. People must start to respect each other as equal human
    regardless of what one is doing for living . But today
    in countries like ours , people are living divided as
    castes , class , colour , religion , religious groups ,
    provinces and low and high skill bias and so on .
    They are so mad over who is superior to the other in
    terms of everything and they find some way or other to
    look down a fellow human .To escape this social epidemic
    nowadays all want to become doctors , engineers , lawyers
    accountants and whatever else that will put you in a
    revolving chair with a pen and paper in hand . Nothing
    wrong in it if the intention is good and the people get
    the best out of it. But that is not usually the case .
    Most of them look at others as small beings while heavily
    being dependent on their hard works .Why not carpentry ?
    Masonry ? Farming ? Fishing ? Tailoring ? Welding ?
    Driving ? Retailing and anything else you can ? The world
    economy is crashing and that is what we see in the Middle
    East , the consequence . The first casualty has been the
    white collar jobs . But we are blind to what is happening
    around us and wasting our parents' hard earned or borrowed
    money on unrealistic studies and wasting part of our life
    looking at the sky . Try to do something creative ! Be new ! Be courageous ! Change the way of thinking ! And be a new
    captain to the ship that is sailing in a wrong direction .

    ReplyDelete

Powered by Blogger.