Header Ads



ஆடுகளை வேலைக்கு அமர்த்தும் "கூகுள்"


கூகுள் நிறுவனம், தனது ஸ்ட்ரீட் வியூ திட்டத்துக்காக ஆட்டு மந்தையை வேலைக்கு அமர்த்த முடிவு செய்துள்ளது.

ஸ்ட்ரீட் வியூ திட்டத்தின் முக்கிய நோக்கம் உலகின் மூலை முடுக்குகளை 360 டிகிரி கோணத்தில் காட்டுவதே. மேப்ஸ் வசதியின் அடுத்த பரிணாம வளர்ச்சியாக வெளிவரவுள்ள இந்த திட்டத்துக்காக ஆடுகளின் மூலம் இடங்கள் குறித்த தகவல்களைப் பதிவு செய்ய கூகுள் திட்டமிட்டுள்ளது.

இங்கிலாந்தில் உள்ள ஆள்நடமாட்டம் இல்லா தீவுகள் குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ பதிவுகளை எடுக்க ஆடுகளின் மீது சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிக்கும் சோலார் பேனல்களுடன் இணைக்கப்பட்ட கேமிராக்களைப் பொருத்தி அதன் மூலம் வீடியோ பதிவுகளை கூகுள் எடுக்க இருக்கிறது.

மேலும், இந்த திட்டத்தினை அண்டார்டிகா, அயர்லாந்து உள்ளிட்ட பகுதிகளிலும் செயல்படுத்த கூகுள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

1 comment:

  1. Is it not a VIOLATION toward ANIMALS FREE life ?

    Where are the ANIMAL RIGHTS group ? who only worries certain issue related to animals.

    GOOGLE .. it is big... so no problem.

    ReplyDelete

Powered by Blogger.