Header Ads



கோடீஸ்வரனே கல்முனையை துண்டாட முயற்சிக்காதே - முஸ்லிம் சம்மேளனம் ஹரீஸுக்கு பாராட்டு

கல்முனை மாநகரை பாதுகாப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் முகா அதன் அதன் தலைமைத்துவம் மற்றும் கல்முனைத் தொகுதி எம்பியான பிரதியமைச்சர் ஹரீஸ் ஆகியோரால் மிக காத்திரமான முறையில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கல்முனை முஸ்லிம் இளைஞர் சம்மேளனம் விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்பியான கோடீஸ்வரன் அண்மையில் பாராளுமன்றத்தில் தெரிவித்த கருத்துக்கு பதிலளிக்கும் வகையிலேயே மேற்படி சம்மேளனம் இந்த அறிக்கையை விடுத்துள்ளது. சம்மேளனம் விடுத்துள்ள இந்த அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளவை வருமாறு,

கல்முனை வாழ் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு நியாயமான தீர்வை பெற்றுக் கொடுக்கும் அதே வேளை முஸ்லிம் சமுகத்தின் உரிமையும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் கல்முனை வாழ் முஸ்லிம்கள் உறுதியான நிலைப்பாட்டில் உள்ளனர்.

கல்முனை வாழ் முஸ்லிம்களை விட்டுக்கொடுக்காமல் தொகுதி எம்பியான ஹரீஸூம் முகாவும் செயற்படும் போது இதனை கோடீஸ்வரன் எம்பி இனவாத சாயத்தை பூசி மக்களை வீதிக்கு இறக்கி தமிழ் - முஸ்லிம் ஒற்றுமையை சீர்குலைக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார்.

கல்முனை மாநகரை கடந்த கால யுத்த தீவிரங்களின்  போது தீக்கிரையாக்க முயற்சிக்கப்பட்ட பல சந்தர்ப்பங்கள் நடைபெற்றுள்ளன.. அந்த அத்தனை முயற்சிகளும் இந்த நிமிடங்கள் வரை முகா என்ற கட்சியினால் தவிடு பொடியாக்கப்பட்டமை வரலாற்றுச் சாண்றாக உள்ளது.

முஸ்லிம்களின் காணிகள் சொத்துக்கள் தமிழ் மக்களின் பகுதிகளுக்குள் தாரை வார்க்க முற்பட்ட போது அது தடுத்து நிறுத்தப்பட்டது. மநாகரத்தை பிரித்து தனியான தமிழ் மக்களுக்கான உள்ளுராட்சி மன்றம் ஏற்படுத்த எடுக்கப்பட்ட முயற்சியும் தடுக்கப்பட்டது.

இவ்வாறு கல்முனை மாநகரையும் முஸ்லிம் தமிழ் உறவுக்குள் முஸ்லிம்களின் உரிமையையும் பாதுகாப்பதற்கும் பல்வேறு முயற்சிகளை முகாவும் தொகுதி எம்பியான ஹரீஸூம் கடந்த காலங்களில் எடுத்திருந்ததை முஸ்லிம் சமுகம் ஒருபோதும் மறப்பதற்கு இல்லை. இதனை கோடீஸ்ரன் எம்பியும் நன்கு அறிவார்.

கல்முனை வாழ் தமிழ் - முஸ்லிம் உறவை சீர்குலைக்க இனவாதம் என்னும் தீயை கோடீஸ்வரன் எம்பி கக்கியுள்ளார். இந்த வலையில் சிக்கிவிடாமல் தமிழ் - முஸ்லிம் சமுகம் மிகவும் கவனமாக செயற்பட வேண்டும்.

முஸ்லிம் மக்கள் மத்தியில் பிரபல்யம் அடைவதற்காக முகா பிரதியமைச்சர் ஹரீஸ் போன்றோர் கோடீஸ்வரனின் இந்த கருத்தை கண்டித்து அவருக்கு எதிராக செயற்பட்டிருக்க முடியும். இவருக்கு எதிரான கருத்தின் மூலமாக கல்முனை பிரதேச முஸ்லிம்கள் மத்தியில் தமக்கான அரசியல் இருப்பையும் அதிகரித்திருக்க முடியும். ஆனால் முகாவோ பிரதியமைச்சர் ஹரீஸோ அவ்வாறு செயற்படாமல் கோடீஸ்வரனின் கருத்தால் உக்கிரமடையவிருந்த தமிழ் - முஸ்லிம் உறவை தணித்து சுமுகமான சூழ்நிலையை ஏற்படுத்திருக்கின்றனர்.

கல்முனை மாநகரை பாதுகாக்கும் விடயத்தில் முகா, அதன் தலைமை ரவூப் ஹக்கீம் , தொகுதி எம்பியான பிரதியமைச்சர் ஹரீஸ் ஆகியோர் ஜனாதிபதி மற்றும் பிரதமர் மற்றும் ஏனைய அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்டோர்களுடன் பேசி அழுத்தம் கொடுத்து வருவதை இச்சந்தர்ப்பத்தில் கல்முனை வாழ் முஸ்லிம் சமுகம் வரவேற்கின்றது.

கோடீஸ்வரனின் கருத்துக்கு எதிராக தமது கருத்தையும் பேசித்தான் அரசியல் செய்ய வேண்டுமாக இருந்தால் அதற்கும் முகா என்ற கட்சியும் பிரதியமைச்சரான ஹரீஸூம் ஒருபோதும் தயங்கப் போவதில்லை என்ற உண்மையை கோடீஸ்வரன் எம்பிக்கு இந்த அறிக்கை மூலம் தெளிவுபடுத்த விரும்புகின்றோம்.

இறுதியாக கோடீஸ்வரன் எம்பிக்கு ஒருவிடயத்தை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம் அற்ப சொற்ப அரசியல் லாபத்திற்காக அடுத்த முறையும் தமிழ் மக்களின் வாக்குகளையும் பெற்று பாராளுமன்றம் நுழைவதற்காக கல்முனை வாழ் தமிழ் முஸ்லிம் மக்களின் சுமுக உறவில் இனவாதத் தீயை பரவவிட்டு அதில் குளிர்காய முயற்சிக்க வேண்டாம் என மிக வினயமாக கேட்டுக் கொள்வதோடு கல்முனை மாநகரின்  பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விடயத்தில் அன்றும் இன்றும் பிரதியமைச்சர் ஹரீஸ் எடுக்கும் முயற்சியை எமது சம்மேளனம் பாராட்டுவதோடு அவரின் இவ்வாறான முயற்சிகளுக்கும் எமது உதவியும் ஒத்தாசையும் என்றும் இருக்கும் என்பதையும் கூறிவைக்க விரும்புகின்றோம்.    

7 comments:

  1. மட்டகளப்பில் ஒரு முஸ்லீம்ம்கூட தமிழருடன் இருக்கமுடியாதாமென்று பிரித்து தனிபிரதேசசெயலகங்களை நிறுவமுடடியுமென்றால் கல்முனை.,மூதூர்.,தம்பலகாமம்.,குச்சவெளி தமிழர்ள் ஏமாளிகளா.?உச்சமாக மன்னாரில் வெறும் 8000 பேருக்கு முசலி பிரதேசசபை உருவாக்கபட்டது.
    இந்த பாசிச கும்பலுக்கு பயப்பிடாமல் செயற்படுங்கள் ஐயா!!

    ReplyDelete
  2. பாசிசத்தை இந்த நாட்டில் பறைசாட்டிய நீங்கள் கதைக்கின்றீர்கள்.

    ReplyDelete
  3. கொமாரு நாங்களும் அதை தான் சொல்றோம் முஸ்லிம்கள் என்ன இழிச்சவாயர்களா? வடக்கும் கிழக்கும் பிறிந்தே கிடக்கட்டுமே

    ReplyDelete
    Replies
    1. கொமாரு கஷ்ட பட்டு 60வருடம் போராடி உங்களுக்கு அதிகாரத்தை பெற்று தந்து கிழக்கு தமிழரை உங்களுக்கு அடிமை யாக்க நாங்க உங்ள மாதிரி வெங்கம்பயலுகளே!!
      எவனாவது போரடுவான் அதிகாரங்களை வங்கிதருவான் நொகாம நுங்கு தின்னலாம் எண்டு அலையாத

      Delete
  4. வட, கிழக்கு மாகாணங்கள் பிரிந்துதான் இருக்கின்றன.

    பிரிந்தே இருக்கும்.

    ReplyDelete
  5. முதலில் சாய்ந்தமருது கல்முனையிலிருந்துபிரிவதை தடுக்க பாருங்கள்.

    ReplyDelete
  6. All Tamils want division from Muslim. But, why are you going to merge North and East. So, our Muslim politicians should be vigilant on this and should not allow any merge.

    ReplyDelete

Powered by Blogger.