Header Ads



அன்ஸார் மீதான காடையர்களின் தாக்குதல் - கண்டிக்கப்பட வேண்டும்

-கலாநிதி மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்
முன்னாள் ஜித்தாவிற்கான  கொன்ஸல் ஜெனரல்-

மலேஷியாவிற்கான இலங்கைத் உயர் ஸ்தானிகர் இப்ராஹீம் ஸாஹிப் அன்ஸார் மீதான காடையர்களின் தாக்குதல் சகல தரப்புக்களாலும் வன்மையாக கண்டிக்கப்படுதல் வேண்டும்.

எந்தவொரு சூழ்நிலையிலும் ஒரு இராஜதந்திரியின் கௌரவம் மதிக்கப்படல் வேண்டும், எதிரியின் தேசத்திற்குள்ளும் ஒரு தூதுவருக்கு பாதுகாப்பு வழங்கப்படுவது சகல உலக நாகரீகங்களினதும் வழக்காறாகும்.

சர்வதேச சட்டங்களை மதிக்கும், வியன்னா தூதாண்மை நியமங்களை மதிக்கும் சகல உள்நாட்டு பிறநாட்டு தமிழ்த் தலைமைகளும் மேற்படி தாக்குதலை வன்மையாக கண்டிப்பதோடு உயர் ஸ்தானிகர் இப்ராஹீம் ஸாஹிப் அன்ஸார் அவர்களிடம் வருத்தங்களைத் தெரிவித்துக் கொள்ளவேண்டும்.

உயர் ஸ்தானிகர் இப்ராஹீம் ஸாஹிப் அன்ஸார் தமது பணி நிமித்தமே விமான நிலையம் சென்றிருந்தார், அவர் ஒரு துறைசார் இராஜதந்திரியாவார், அவரது நியமனம் அரசியல் நியமனம் அல்ல.

கடந்த காலங்களில் தமது விடுதலை போராட்டத்தை சர்வதேச பிராந்திய சக்திகளின் அரசியல் இராஜ தந்திர நலன்களிற்கு பலிக்கடாவாக்கிய சில சக்திகள் மீண்டும் ஒருமுறை இலங்கை வாழ் தமிழ் மக்களை அழிவின் விளிம்பிற்கு அழைத்துச் செல்வதனை அனுமதிக்க முடியாது.

போருக்குப் பின்னரான இலங்கையில் தற்பொழுது ஏற்பட்டு வரும் நம்பிக்கை தரும் மாற்றங்களுக்கு குந்தகங்களை ஏற்படுத்திவரும் தீய சக்திகளுக்கு சந்தர்பங்களை சாதகமாக்கிக் கொடுக்கும் முட்டாள்தனமான கைங்கரியமாகவே மேற்படி தாக்குதலை கருதமுடியும்.

2 comments:

  1. கண்டியுங்க ஆனால் பட்ட அடி மாறிப்போய் அந்த அசிங்கங்களை திருப்பி தாக்குமா? மலேசியாவின் பாதுகாப்பு தூங்கிவிட்டதா???

    ReplyDelete
  2. "The Muslim Voice" has already protested on this matter. Politicians always adopt a "wait-and-see" policy before making their comments. Please kindly read/browse: http://www.jaffnamuslim.com/2016/09/blog-post_764.html for more details, Insha Allah.
    Convener - "The Muslim Voice".

    ReplyDelete

Powered by Blogger.