September 20, 2016

"எந்த எழுச்சியினாலும், ஹக்கீமை அசைக்க முடியாது"

-அஹமட் இர்ஷாட்-

உண்மையில் கிழக்கு மாகாணதில் அதிலும் முக்கியமாக அம்பாறை மாவட்டத்தில் உருவெடுத்துள்ள கிழக்கின் எழுச்சி எனும் பெயரிலே முன்னெடுக்கப்படுகின்ற எழுச்சியினை பொருத்தமட்டில் முஸ்லிம் காங்கிரசின் தலைமைக்கு எதிராக அரசியல் ஈடுபட்டு அதில் தோல்வியுற்ற நிலையில் இருக்கின்ற எல்லோரையும் ஒன்று சேர்த்து எழுச்சி பெறும் நோக்கத்தில் அல்லது தங்களுடைய அரசியல் இருப்புக்களை எதிர் காலத்தில் தக்க வைத்துக்கொள்ளும் முயற்சியாகவே இந்த எழுச்சியானது முற்றிலும் பார்க்கப்படுகின்றது. 

அதே நேரத்தில் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசினை பிரதி நிதித்துவப்படுத்துகின்ற அரசியல் உச்ச பீட உறுப்பினர்கள், போராளிகள் எல்லாம் தடுமாறால் நிலையான வைப்பிலே நிறுத்தப்பட்டிருக்கின்றார்கள். ஆகவே முஸ்லிம் காங்கிரசின் நிலையான வைப்பென்பது ஒரு பொழுதும் சரிந்து விழுவதற்கு வாய்ப்பே இல்லை. குறிப்பாக முன்னாள் அமைச்சர் அதாவுல்லாஹ் மீண்டும் தனது அரசியல் எனும் கதிரையினை சூடாக்கி கொள்வதற்கான சவாரி செய்யும் வாகனம்தான் கிழக்கின் எழுச்சியாகும். மக்களால் கடந்த காலங்களில் அரசியல் முகவரி இழக்கச்செய்யப்பட்ட இவ்வாறான சந்தர்ப்ப அரசியல்வாதிகளினால் முன்னெடுக்கப்படுகின்ற  எந்த எழுச்சியினாலும் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைமையினை அசைக்க முடியாது என ஆணித்தரமாக மேற்கண்டவாறு கூறினார் கிழக்கு மாகாண சபை உறுப்பினரான புல்மோட்டை அன்வர்.

கேள்வி:- தற்பொழுது திருகோணமலை மாவட்டத்தில் கிழக்கின் எழுச்சியானது எந்த நிலையில் இருகின்றது?

புல்மோட்டை அன்வர்:- எழுச்சி எனும் தொணிப்பொருளிலே முஸ்லிம்களை தவறான வழியில் கொண்டு செல்லபடுகின்ற பாங்காகத்தான் என்னால் பார்க்கப்படுகின்றது. குறிப்பாக இந்த எழுச்சியினை கொண்டு செல்கின்றவர்கள் தனித்தனியாகவோ அல்லது தாங்கள் அரசியலில் எதிர்பார்த்த திட்டங்களை நிறை வேற்றிக்கொள்ள முடியாத நிலைக்கே தள்ளப்பட்டுள்ளதன் விளைவாகவே எழுச்சி என்ற போர்வைக்குள் நின்று கொண்டு அரசியல் செய்ய முற்பட்டுள்ளார்கள். முஸ்லிம் காங்கிரசின் மீதும் அதன் தலைமைத்துவத்தின் மீதும் மக்கள் நம்பிக்கை கொண்டவர்களாகவே இருக்கின்றார்கள். ஆகவே இந்த எழுச்சியினால் கட்சியையோ அல்லது தலைமையையோ ஒன்றும் செய்து விட முடியாது.

குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் உருவெடுத்துள்ள இந்த எழுச்சியின் ஒரு அங்காமாக அங்கமாக கடந்த கிழமை மூதூரில் எழுச்சி மாநாடு எனும் தொணிப்பொருளில் நடாத்தப்பட்ட கூட்டதில் கதிரைகள் எல்லாம் வெறுச்சோடிக் காணப்பட்டதனை பார்க்கின்ற பொழுது எழுச்சியை மாற்றியமைக்கப்பட்ட வேண்டும் அல்லது வெற்றி பெற வேண்டும் என்பதற்காக உள்ளார்ந்தமாக திருகோணமலை மக்கள் இந்த எழுச்சிக்கு பின்னால் செல்வதற்கு ஒரு பொழுதும் தயார் இல்லை என்பதை உணர்த்தியது. ஆகவே அரசியலில் விழுந்திருப்பவர்கள் மீண்டும் எழுந்து நிற்பதற்கு ஒரு தளமாக எழுச்சியினை பயண்படுத்துகின்றார்கள் திருகோணமலை மக்கள் நன்கறிந்தவர்களாக இருக்கின்ற படியினால் இந்த கிழக்கின் எழுச்சியானது திகோணமலையில் எந்த நிலையிலும் வாலாட்ட முடியாது என்பதே எனது கருத்தாகும்.

கேள்வி:- கடந்த பாராளுமன்ற தேர்தலில் திருகோணமலையில் சரிவினை சந்தித்த சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் நிலைமை அல்லது அதற்கு இருக்கும் ஆதரவு தற்பொழுது எவ்வாறு இருக்கின்றது?

புல்மோட்டை அன்வர்:- உண்மையிலே கடந்த பொது தேர்தலின் பொழுது பாராளுமன்ற பிரதி நிதித்துவத்தினை இழந்தமை உண்மையான விடயமாகும். ஆனால் அதற்கு முந்திய பாராளுமன்ற தேர்தலில் கிடைத்த வாக்குகளை விடவும் மூவாயிரத்திற்கும் அதிகமான வாக்குகளை சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் திருகோணமலை மாவட்டத்தில் பெற்றிருந்தது. அரசாங்கம் மாற்றப்பட்ட கையோடு நால்லட்சி உறுவாக்கப்பட்டு பிரதமர் ரணில் விகரமசிங்கவின் வழிகாட்டலில்  எதிர் கொண்ட முதலாவது பொதுத்தேர்தல் என்ற படியினாலும், யானைச்சின்னத்திலே எல்லோரும் போட்டியிட்டார்கள் என்ற காரணதினாலும், கடந்த காலங்களில் மனச்சோர்விலே இருந்த ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்கள் ஐக்கியதேசியக் கட்சிக்கு ஒருமித்து வாக்களித்தினாலும் அப்துல்லா மஃரூஃப் மற்றும் இன்றான் மஃரூஃப் போன்றவர்களுக்கு அந்த தேர்தலின் கதிர் வீச்சானது பக்கபலாமாக அமையப்பெற்றிருந்தது.

முஸ்லிம் காங்கிரசினுடைய வாக்கு வங்கியினை வைத்து நாங்கள் பெற்ற வாக்குகளில் ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிட்டவர்களுக்கும் பெருமளவிலான விருப்பு வாக்குகள் அளிக்கப்பட்டிருந்தன. அத்தோடு தற்பொழுது மாகாண சபையில் இருக்கின்ற அருன் போன்றவர்கள் தாங்கள் மாகாண சபையில் அங்கம் வகிக்க வேண்டும் என்பதற்கான மகாண சபையில் அங்கத்தவர்களாக இருந்து போட்டியிட்ட இம்ரான் மஃரூஃப் போன்றவர்களுக்கு வாக்களித்திருந்தார்கள். இதனால்தான் திருகோணமலையில் எமது ஆசனமான எம்.எஸ்.தெளபீக்கினுடைய ஆசனத்தினை சென்ற முறை இழப்பதற்கு பிரதான காரணமாக அமைந்தது. ஆனால் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசிற்கு திருகோணமலையில் இருந்த ஆதரவு ஒரு பொழுதும் குறையவில்லை என்பது நிதர்சனமான விடயமாகும். அத்தோடு திருகோணமலைக்கு தேசியப்பட்டியல் எம்.எஸ்.தெளபீக்கிற்கு வழங்கப்பட்டதற்கு பிற்பாடு கட்சிக்கு இருந்த ஆதரவு மேலும் அதிகரித்துள்ளது என்பது இங்கு சுட்டிக்காட்டப்பட வேண்டிய விடயமாகும்.

4 கருத்துரைகள்:

Ahamed Izard.
Are a sucker of Rauf. We want to get rid of this Rauf and take back Muslim Congress to East.

அன்வர் அவர்களே, கிழக்கின் எழுச்சி என்பது பெரும்பான்மை முஸ்லீம் மக்களால் நிராகரிக்கப்பட்டவர்களின் எழுச்சி என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம், தனக்கென்று ஒரு கட்சியை வைத்துக் கொண்டு அதன் மூலம் மக்களை சந்திக்க வக்கில்லாத அதாவுல்லாவும் அவரது அடிவருடிகளும் கிழக்கின் எழுச்சி என்ற தளுக்கு தொளுக்கான பிரதேச வாத சொற்றொடரை வைத்துக்கொண்டு, அதாவுல்லாவின் பணக் கொழுப்பு வத்துமட்டும் எழுந்தாடுவார்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம். ஆனால் இதை கூடுதலான மக்கள் ரசிக்கிறார்கள் கொஞ்சம் கவரப்படுகிறார்கள் என்பதை சற்று கவனித்தால் புரியும். இதட்கான முழுக்காரணமும் நீங்கள் கூறிய அசைக்க முடியாத ஹக்கீம் தான் என்பதை மறந்து விடாதீர்கள். உங்களாலேயே "தலைவர் ஹக்கீம்" என்று சொல்ல முடியாத அளவுக்கு அவரது ஆளுமையும் வழிநடத்தலும் உள்ளது என்பது யதார்த்தமாக எல்லோருக்கும் புரிகிறது.

அசைக்க முடியாத, ஆட்ட முடியாத சகோதரர் ஹக்கீமின் கையாலாகாத்தனத்தை பதிவிடுகிறோம் முடிந்தால் நீங்கள் கூறிய உச்ச பீட உறுப்பினர்கள், போராளிகள், ஹக்கீம் அன் கோ கலந்துரையாடி பதில் கூறுங்கள்.

** தேர்தல் காலங்களில் கூட்டு அமைத்த கட்சிகளிடம் இருந்து பெற்ற பணமும் அது செலவழிக்கப்பட்ட விதமும்.

** தேசிய பட்டியல் எம்பி பதவியை ஏன் இன்னும் வாக்குறுதி அளித்தபடி நியமிக்க முடியாமல் உள்ளது. மாபெரும் கபடத்தனமும், ஏமாற்று தனமும், கையாலாகாத்தனமும், முடிவெடுக்கும் ஆற்றலற்ற தன்மையை எடுத்துக் காட்டுகிறது.

** 18, தெவிநுகம, கசினோ, போன்ற சட்டமூலங்களை ஆதரித்தமை.

** BBS, அழுத்தகம, பள்ளிவாசல் உடைப்பு போன்ற இன்னோரன்ன பிரச்சினைக்கு தீர்வு இல்லாமல் அமைச்சு பதவி வகித்தமை.

மாற்றம் தேவை; புத்தி ஜீவிகளும், சமூக ஆர்வலர்களும், ஊடகவியலாளர்களும், இளைஞர்களும் சிந்திப்பார்களா?? சமூகத்தை வழிநடத்துவார்களா??

பைத்தியகாற கூட்டமே உங்களை அசைக்கிற இல்லையடா உங்களை அத்தனை பேரையும் கட்சியை விட்டு இல்லாமல் ஆக்கவேனும் அல்லது முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை இல்லாமல் ஆக்கவேனும்.அப்போதுதான் முஸ்லிம்களுக்கு ஏதாவது செய்ய முடியும்,முஸ்லிம்ககளுக்கு அரசியல் ரீதியாக ஏதாவது பெற்றுக்கொடுக்க முடியும்,நயவஞ்க கூட்டமே தொலைந்து போங்கடா

Please don't justify Hakeem's betrayal. What did he do for muslims over span of 16 years? He is totally committed to retain his leadership for his personal purposes but not the responsibility that he is entrusted with. Can you point out a single responsibility that fulfilled for the interests of Muslims by Hakeem? Please look at Sampanthan, what he does for his people and did hakeem do anything for muslims like Sampanthan? Please rhink justly.You are also affected by his bettrayal.

Post a Comment