Header Ads



"ஜனாதிபதியிடம் முஸ்லிம்கள் வைத்த கோரிக்கை, இன்னும் நிறைவேற்றப்படவில்லை'

இலங்கையில் இன்று எமது முஸ்லிம் சமுதாயம் விடிவு பெற்று தலை நிமிர்ந்து வாழ வேண்டுமானால் எமது அரசியல் தலைமைகள் சகோதர தமிழ் தலைமைகளை முன்னுதாரணமாக கொண்டு ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்று அகில இலங்கை முஸ்லிம் லிக் வாலிப முன்னணிகள் சம்மேளனத்தின் தேசிய தலைவர் தேசபந்து கலாநிதி அல்ஹாஜ் பீ.எம் பாரூக் கூறினார்.

ஆகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகள் சம்மேளனத்தின் புதுளை  மாவட்ட சம்மேளன புனரமைப்புக் கூட்டம் அண்மையில் பதுளை அல் அதன் மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது. அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகள் சம்மேளனத்தின் பதுளை மாவட்ட அமைப்பாளர் எம்.டி.எம் பாயிஸ் ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வுக்குத் தலைமை தாங்கி உரை நிகழ்த்துகையிலேயே அவர் இவ்வாரு குறிப்பிட்டார். அவர் மேலும் பேசுகையில் கூறியதாவது,

முஸ்லிம் சமூகத்துக்கு எதிராக பௌத்த கடும் போக்காளர்களால் கட்டவிழ்த்து விடப்பட்ட பொய்ப்பிரசாரங்களும,; விசமத்தனமான பேச்சுக்களும,; எதிர்ப்பு நடவடிக்கைகளும் இன்னும் குறைந்த பாடில்லை. அலுத்கம சம்பவத்துக்கு ஜானாதிபதி கொமிஷன் ஒன்று நியமித்து விசாரிக்கப்பட வேண்டும் என்று விடுக்கபட்ட  கோரிக்கையும் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. அது தவிர இக்கடும் போக்காளர்கள் அல்லாஹ்வையும், முஸ்லிம்களின் உயிர்க்கும் மேலான திருகுர்ஆனையும் நிந்திக்கும் செயற்பாடுகளிலும் ஈடுபட்டுள்ளார்கள். முஸ்லிம் வர்த்தக நிலையங்களை இல்லாதொழிக்கும் கைகாரியங்களில் கைவைத்த அவர்கள் தற்பொழுது முஸ்லிம்; கடைகளில் பொருட்களை வாங்க வேண்டாம் என்று பெரும்பாண்மை இனத்தவரைத் தூண்டி வருகிறார்கள். இலங்கையில் முஸ்லிம்களைப் பூண்டோடு ஒழித்து விட வேண்டும்  என்பதே அவர்களின் திட்டமாக அமைந்துள்ளது.

இவற்றுக்கு எதிராக குரல் கொடுத்து சம்பந்தப்பட்டவர்களை சட்டதின் முன் நிறுத்தி சமூகத்துக்கு நியாயம் பெற்றுக் கொடுக்க வேண்டிய எமது முஸ்லிம் தலைமைகள் ஒரு சில சந்தர்ப்பங்களில் மாத்திரம் ஏதோ கூறிவி;டுவர்களாக இருக்கிறார்கள். சமூக விடயங்களில் அவர்களிடையே ஒற்றுமையில்லை. தமது பதவிகளை தக்க வைத்துக் கொள்வதில் தான் அவர்கள் அக்கறை காட்டுகிறார்கள் போல் தோன்றுகின்றது.

ஆனால் நாம் எமது சகோதர இனமான தமிழ்த் தலைமைகள் பற்றி பெருமைப்பட வேண்டும். அவர்கள் தமக்குள் எத்துணை பிரச்சினைகள் இருந்தாலும் இனம் சம்பந்தப்பட்ட பொதுப் பிரச்சினைகளில் ஒற்றுமையுடன் செயல்படுகிறார்கள். அரசாங்கத்துக்கு அவர்கள் விடும் அலுத்தம் காரணமாக வட மாகாண ஆளுனரை மாற்றுவதில் வெற்றி கண்டுள்ளார்கள். படைகள் வசமிருந்த தமிழ் இனத்தவரின் காணிகளை மீட்டு மீள் குடியேற்றம் தொடர்பான விடயங்களில் வெற்றியீட்டி வருகிறார்கள். வட பகுதி அபிவிருத்தி வேலைகள் துரித கதியில் நடைபெற்று வருகின்றன.

அதே போன்று மலை நாட்டு சகோதர தமிழ்த் தலைமைகளும் தமது சமூகத்தின் மறுமலர்ச்சிகாக ஒற்றுமையுடன் செயல்பட்டு வருகின்றார்கள். லைன் அறைகளில் வாழ்ந்த மக்களுக்கு அரசாங்க காணிகளை பெற்றுக் கொடுத்து வீட்டுத்திட்டங்களை நிர்மாணிப்பதில் அரசாங்கம் அக்கறையுடன் செயல்பட்டு வருகிறது. மாகாண சபையிலும், பாராளுமன்றத்திலும் அங்கம் வகிக்கும் அமைச்சர்களும், உறுப்பினர்களும்  கல்வி மறுமலர்ச்சிகாக ஆக்கபூர்வமான  வேலைத் திட்டங்களை முன்னெடுத்து வருகிறார்கள். ஆனால் எமது 
தலைமைகள் வடபகுதி முஸ்லிம்களின் மீள் குடியேற்றத்தைப் பெற்றுக் கொடுப்பதற்கோ, மௌலவி, ஆசிரியர் நியமனங்கள் மற்றும் சுனாமி வீடமைப்புத் திட்டத்தால் நிர்மானிக்கப்பட்ட வீடுகளை உரியவர்களுக்குப் பெற்றுக் கொடுப்பதற்குக் கூட தராணியற்றவர்களாக உள்ளார்கள். ஆதலால் இலங்கையில் எமது முஸ்லிம் சமுதாயம் சகல உரிமைகளையும் பெற்று விடிவு பெற்ற சமுதாயமாக தலை நிமிர்ந்து வாழ வேண்டுமானால் எமது அரசியல் தலைமைகள் சகோதர தமிழ்த் தலைமைகளை முன்னுதாரணமாகக் கொண்டு ஒற்றுமையுடன் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும்.

இதே நேரம் அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளனம் ஏனைய முஸ்லிம் சிவில் அமைப்புக்களுடன் இணைந்து இவற்றுக்கு எதிராக குரல் கொடுத்து வருவதுடன் அரசங்கத்துடன் விசேஷமாக பாதுகாப்புத் தரப்புடனும் பேச்சுவார்தைகளில் ஈடுபட்டு வருகிறது. இம் முயற்சியில் முஸ்லிம் அரசியல் தலைமைகளுடன் இணைந்து செயற்படுவதற்கும் பல திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன' என்றார்.

ஆகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் பதுளை மாவட்ட அமைப்பாளர் எம்.டி.எம் பாயிஸ், உட்பட மற்றும் பலர் உரை நிகழ்த்தினார்கள்.

ஏ.ஜீ யசிர் மொகம்மட்(பீ.ஏ)
நிர்வாகச் செயலாளர் 


2 comments:

  1. Yahapalanya-1 is a failure. We should work towards Yahapalanaya-2.....

    ReplyDelete
  2. This is what "The Muslim Voice" has been saying. Further more, "The Muslim Voice" has been saying that - the Muslim politicians and Civil Society leaders/Community leaders have betrayed the Muslim community by selling our vote banks to the National political parties when they come to power to gain personal favours. How many times have complaints been made about this unruly valiant of a Buddhist monk to the police, political VVIP’s, spoken in cabinet meetings and denounced in the media (print) by peace loving Muslims and non-Muslims. NOTHING has happened. NO laws can make this communal Buddhist Monk to STOP his hatred to the Muslim Community and ISLAM and to disrespect other religions and Citizens Rights. The question is WHY? The Sri Lanka Muslim Community and its POLITICIANS should stand before a “MIRROR” and ask the question WHY? Let us face REALITY and the TRUTH (YATHAARTHAM).
    1. We Muslims are known for NOT leading the Muslim (Islamic Way of Life) bestowed by our belief and FAITH.
    2. We are (especially) the POLITICIANS) are NOT UNITED.
    3. We (especially the POLITICIANS) are DISHONEST, DECEPTIVE, SELFISH and CROOKED.
    4. Our dealings are NOT CLEAN with other Communities.
    5. We have BETRAYED the political leaders of the country who are so much loved by the MAJORITY SINHALA PEOPLE.
    6. We are ARROGANT and EXTRAVAGANT in our day to day life.
    7. We are SELF CENTERED and NOT COMMUNITY MIMDED.
    8. WE are OPPRTUNISTIC, especially in POLITICS. Our Muslim Politicians have back-stabbed the most loved Sinhala leaders like the former President after STOOGING to him and his siblings and politically destroyed them which the Buddhist, especially the Monks despite.
    9. We will “buy” anyone by our ill earned money power to get our things done, even against our community and its members.
    10. We practice the CULTURE of SMUGGLING and dealing in DRUGS as normal business though it is banned in ISLAM, and we think going to Mecca (making UMMRAH) purifies us from those SINS.
    The Bodu Bala Sena and the Anti-Muslim, Ant-Islam Buddhist Monk was made use by our Muslim unscrupulous POLITICIANS and Muslim businessmen to defraud the Haj Quota allocations few months ago. One of the Muslims is the brother of the “LOUD MOUTHED UNETHICAL POLITICIAN” who conspired with other groups to bring about a “change” to the Mahinda government and is now holding the post of Managing Director of the Sri Lanka Cement Corporation (SLCC) which is under the Ministry of Industries and Commerce. There are rumours that officials of the Sri Lanka Cement Corporation are been suspected of being involved in trying to release hundreds of acres of lands belonging to the corporation to the private sector under nefarious activities. So, GANESARA THERA KNOWS MORE ABOUT THE BAD THINGS ABOUT OUR COMMUNITY THAN OUR OWN COMMUNITY BECAUSE ALL FINANCIAL AND BUSINESS INFORMATION OF OUR MUSLIM BRETHREN ENGAGED IN BUSINESS HAS BEEN REVEALED TO HIM AND THE BBS BY MUSLIMS OF THE ABOVE CALIBRE.
    The Resolution to the Bathiya Mawatha Mosque SHOULD HAVE been approached honestly without “STAGING POLITICAL DRAMAS” just to HOODWINK the Muslim voters/vote bank, Insha Allah.
    ((Please browse: http://www.jaffnamuslim.com/2016/06/blog-post_744.html to learn the real TRUTH, Insha Allah.) THIS IS WHY "THE MUSLIM VOICE" IS PRAYING IT IS TIME UP THAT A NEW POLITICAL FORCE THAT WILL BE HONEST AND SINCERE THAT WILL PRODUCE 'CLEAN' AND DILIGENT MUSLIM POLITICIANS TO STAND UP AND DEFEND THE MUSLIM COMMUNITY POLITICALLY AND OTHERWISE, ESPECIALLY FROM AMONG THE YOUTH/YOUNGER GENERATION HAS TO EMERGE FROM WITHIN THE SRI LANKA MUSLIM COMMUNITY TO FACE ANY NEW ELECTIONS IN THE COMING FUTURE, INSHA ALLAH.
    Noor Nizam. Peace and Political Activist, Political Communication Researcher, SLFP Stalwart and Convener - The Muslim Voice.
    (Note: These comments are NOT made as MALICE against any politician or political party. It is written to kindle the aspirations and inspiration of the Muslims of Sri Lanka, Insha Allah).

    ReplyDelete

Powered by Blogger.