Header Ads



ஜெனீவாவில் யாழ்ப்பாண முஸ்லிம்களினால், சர்வதேச பிரதிநிதிகளிடம் மகஜர் கையளிப்பு


-AAM.Anzir-

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 33 ஆவது கூட்டத்தொடர் தற்போது   ஜெனீவா நகரில் நடைபெற்று வருகிறது.

இதன் ஒரு அமர்வாக 27 செவ்வாய்கிழமை அன்று யாழப்பாண முஸ்லிம்களின் இனச்சுத்திகரிப்பு. அவர்களின் தற்போதைய வாழ்வாதார நெருக்கடிகள் பெண்கள் சிறுவர் உரிமைகள் தொடர்பில் ஆராயும் சிறப்பு அமர்வு நடைபெற்றது.

சர்வதேசப் பிரதிநிதிகளின் பங்குபற்றுதலுடன் நடைபெற்ற இந்நிகழ்வில் நோர்வேயில் இருந்து வருகை தந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சகோதரர் அனீஸ் ரவூப் யாழ்ப்பாண முஸ்லிம்கள் குறித்து உரையாற்றினார். இவர்களுடன் லண்டன், பிரான்ஸ் தேசங்களில் இருந்து வருகைதந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 2 மாணவிகளும் ஆங்கிலம் மற்றும் பிரான்ஸ் மொழிகளில் உரையாற்றினார்கள்.

திட்டமிட்டபடி இந்த அமர்வு குறித்த நேரத்திற்கு ஆரம்பிக்கப்படாமையாலும், ஏற்கனவே ஒதுக்கப்பட்ட அறை மாற்றபட்டதாலும், அமர்வு ஒரு மணி நேரமாக மட்டுப்படுத்தப்பட்டதாலும் இந்த அமர்வுக்கு வருகை தருவதாக வாக்குறுதி வழங்கியிருந்த கட்டார், சவூதி மற்றும் அபுதாபி உள்ளிட்ட நாடுகளின் தூதுவர்கள் பங்கேற்பதிலும் சிக்கல் நிலை தோன்றியது.

இருந்தபோதும் சர்வதேச யாழ்ப்பாண முஸ்லிம் அமைப்பினரால் உரிய பல தரப்பினருக்கு மகஜர்கள் கையளிக்கப்பட்டது. அந்த மகஜரில் இனச்சுத்திகரிப்பு செய்யப்பட்ட யாழ்ப்பாண முஸ்லிம்களுக்கு நீதி பெற்றுக்கொடுக்கப்பட வேண்டுமென பிரதானமாக வலியுறுத்தப்பட்டிருந்தது.





11 comments:

  1. Whether it is success or not ...you have done your bit ...Allah will protect us but we need to whatever we can ..look how difficult is our affairs when we live as minorities in the world ...how it is difficult to meet our basic needs and how difficult is to get justice..
    How difficult is to reach out with our demands ???
    Even today Muslim majority countries are living as minority in the world without any power or influence..

    ReplyDelete
  2. நல்ல விடயம்செய்தீா்கள் அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக

    ReplyDelete
  3. மகஜர் கொடுக்க ஏன் இத்தனை பேர் போனார்கள்?

    ஒரு கேள்வி:
    வடக்கில் இருந்து எத்தனை பேர் 1990யில் வெளியேற்றப்பட்டார்கள்?,
    எத்தனை பேர் மீழ வடக்குக்கு திருப்பிவந்துவிட்டார்கள்?

    ReplyDelete
    Replies
    1. இவர் யார் அரசாங்க அதிபரா இவருக்கு கணக்கு காட்ட போய் உண்ட வேலையைப்பார்

      Delete
    2. Pirabakaran has full details about how many people displace by force, how many of them been killed and mainly how much they did rob from J/ Muslim people. If you request them some one will give you brief details.

      Delete
  4. மாஷா அல்லாஹ் அல்ஹம்து லில்லாஹ் இது ஆரம்பம் என்றாலும் பாரிய வெற்றிதான் நம் சகோதரர்களுக்கு அல்லாஹ் அருள் புரிவானாக ஆமீன்

    ReplyDelete
  5. Dear brothrs and sisters we share one blood of laailaaha Illalla.March forward Alla is with you all.Please submit the memorandum to the missing represe tatives too.

    ReplyDelete
  6. I do appreciate your efforts brothers and sisters. Where ever we are we should be a role model for others. We should try to do some thing for others irrespective casts or religion. In this case Jaffna Muslims are without question should get there rights, and you are fighting for that. May Allah Bless you all.

    ReplyDelete
  7. Copies of the report should also be sent to Vigneswaran and Aanandasangari. They are the guys refusing to accept that it was an "Ethnic Cleansing", instead they are still maintaining that it was a precautionary act by LTTE terrorists. Even the American Envoy had mentioned without any doubt that it was an Ethnic Cleansing in the presence of Vigneswaran.

    ReplyDelete
  8. What is the out come of it ...please share it with public ...

    ReplyDelete

Powered by Blogger.