Header Ads



பெண்கள் முகத்திரை அணிவது தொடர்பாக, ஜம்இய்யத்துல் உலமாவின் நிலைப்பாடு


அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹி வபறகாத்துஹு

பெண்கள் முகத்திரை அணிவது தொடர்பாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிலைப்பாடு பற்றிய தெளிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் உப குழுக்களில் பத்வாக் குழு மிக முக்கியமானதாகும். இக்குழுவில் அஹ்லுஸ் ஸுன்னா வல்-ஜமாஅதிற்கு உட்பட்ட சகல அமைப்புக்களையும் பிரதிநிதிப்படுத்தும் வகையில், நாடளாவிய ரீதியில் உள்ள இஸ்லாமிய மார்க்க சட்டத்துறையில் அனுபவம் மிக்க மூத்த அறிஞர்கள், ஷரீஆத்துறைப் பட்டதாரிகள், அறபுக் கல்லூரி அதிபர்கள் மற்றும் சிரேஷ்ட ஷரீஆ கல்வி விரிவுரையாளர்கள் உட்பட 35 இற்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இடம் பெறுகின்றனர்.

இவர்கள் மாதந்தம் அல்லது தேவைக்கேற்ப ஒன்று கூடி பத்வா விடயங்களை ஆய்வு செய்து பத்வாவாக வெளியிடுகின்றனர். இவ்வடிப்படையிலேயே 2009 ஆம் ஆண்டு பெண்கள் முகத்திரை அணிவது சம்பந்தமான பத்வாவை வெளியிட்டது.

குறித்த பத்வாவில் கூறப்பட்டுள்ள கருத்தே அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தெளிவான நிலைப்பாடாகும். என்றாலும்,  கருத்து முரண்பாடான விடயங்களில் தனக்குச் சரியானதெனத் தோன்றுகின்ற கருத்துக் கேற்ப காரியமாற்ற தனக்கு உரிமையும் சுதந்திரமும் இருப்பதுபோலவே, மாற்றுக் கருத்துக் கொண்டவருக்கும் அவரது கருத்துக் கேற்ப காரியமாற்ற உரிமையும் சுதந்திரமும் உண்டு என்பதுடன், அவரின் அந்த உரிமைக்கும் சுதந்திரத்துக்கும் குறுக்கே நிற்கவோ அவற்றை மறுக்கவோ கட்டுப்படுத்தவோ தடுக்கவோ முனையக் கூடாது என்பது அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா 18.08.2009ஆந்திகதி வெளியிட்ட ஒற்றுமைப் பிரகடனத்தின் நிலைப்பாடாகும்.

மேலும், பெண்கள் முகத்திரை அணிவது விடயமாகத் தற்போது எழுந்துள்ள சர்ச்சையானது கடந்த 19.07.2016ஆம் திகதி நடைபெற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் ஜம்இய்யாவினால் வெளியிடப்பட்ட 'சமூகங்களுக்கிடையிலான கலந்துரையாடல்' தொடரில் ஹிஜாப் பற்றி பேசக்கூடிய சிறு நூலை மேற்கோள்காட்டி பெண்கள் முகத்திரையிடுவது இஸ்லாமிய வரையறை இல்லை, அது தவறான கருத்து என்று கூறியதாகும்.

குறித்;த நூல் பொதுவாக முஸ்லிம்களின் ஆடைகள் பற்றி தெளிவுபடுத்தும் அதேவேளை, குறிப்பாக நிகாப் இஸ்லாத்தில் இல்லாத ஒன்று, அரபிகளின் கலாச்சாரம், பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானது போன்ற பிழையான கோஷங்கள் வந்த பொழுது, நிகாப் என்பது இஸ்லாத்தில் உள்ள ஒரு விடயம், இதில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை, இது முகத்திரை அணிவது வாஜிப் என்று கருதக்கூடிய பெண்களின் உரிமையாகும் என்பன பற்றி விளக்கும் வகையிலேயே எழுதப்பட்டது என்பதையும், குறித்த தொலைக்காட்சி நிகழ்ச்சியின் பல விடயங்கள் மெச்சத்தக்கதாகவும், காலத்தின் தேவையாகவும் இருந்தாலும், அந்நிகழ்சியில் ஹிஜாப் விடயமாகக்  கூறப்பட்ட மேற்படி கருத்து பற்றி எதுவும், குறித்த நூலில் குறிப்பிடப்படவில்லை என்பதை ஜம்இய்யா பொறுப்புடன் கூறிக்கொள்ள விரும்புகின்றது.

இன்று முஸ்லிம்களுக்கு மத்தியில் நிகாப், ஹிஜாப் விவகாரம் ஒரு பேசுபொருளாக மாறியிருப்பதை அனைவரும் அறிவோம். கடுமையான வாதப் பிரதிவாதங்களும் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக நாளுக்கு நாள் மக்களுக்கு மத்தியில் இடைவெளியும் விரிசலும் ஏற்படுவதனை அவதானிக்க முடிகிறது.

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா பல்வேறு சவால்களுக்கு மத்தியில் நாட்டில் சமூக ஒற்றுமையையும் சகவாழ்வையும் கட்டியெழுப்பும் பணியில்  ஈடுபட்டு முஸ்லிம் சமூகத்தை நிதானமாக வழிநடத்தி வருகிறது. அல்ஹம்துலில்லாஹ்.

எனவே, நிகாப், ஹிஜாப் தொடர்பான மார்க்கத் தெளிவுக் கருத்தரங்கு ஒன்றை நடாத்தத் திட்டமிட்டுள்ளது.

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் ஒத்துழைப்புக்கும் ஒருங்கிணைப்புக்குமான கவுன்ஸிலும் பத்வா பிரிவும் இணைந்து நடத்தவுள்ள இக்கருத்தரங்கில்; அறிஞர்கள், ஆலிம்களிடமிருந்து தகமையானவர்கள் நிகாப், ஹிஜாப் தொடர்பான தெளிவுகளை முன்வைக்க அவகாசம் வழங்கப்படும். தெளிவுகளை முன்வைக்கும் இறுதித் திகதியும், இக்கருத்தரங்கு நடைபெறும் இடமும் திகதியும், மேலதிக விபரங்களும் மிக விரைவில் அறிவிக்கப்படும்.

வஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு

அஷ்-ஷைக் எம்.எல்.எம் இல்யாஸ்     
செயலாளர், பத்வாக் குழு              
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

20 comments:

  1. Please tell all your fatwa group to learn the arts of Maqasid..
    Go and read works iman Juwaini, Al Ghazali and shatibi on Maqasid...now if you want read on this subject from some modern Islamic schoars to make it easy for you...now we live in a minority country..how to apply Islamic laws into srilanka contexts on issues like this ..read it all before you go to give fatwa ..
    An alim should be learning until deaath..
    You knowledge should be updated each day to give fataw..

    All muftis in Sri Lanka need to update their knowledge..
    30 years who went to pakIstan without updating their context knowledge of Islamic issues they will find it hard to give fatwa..

    ReplyDelete
  2. எடுத்த எடுப்பில் ஹராம் ஹலால் என்று தீர்வு செய்யும் கீ போர்ட் ஆலிம்களால் வந்த குழப்பமே தவிர வேறொன்றுமில்லை....

    ReplyDelete
  3. குர்ஆன் ஹதீஸில் உள்ளதை உள்ளபடிசொல்வதற்கு இவ்வளவு காலம் கடந்த நிலையிலும்,இன்னும் முடிவெடுக்க முடியாமல் மனிதனால் முன் வைக்கப்பட வேண்டிய கருத்துக்களை எதிர் பார்த்து நிற்பது எந்தளவு சாத்தியமாகும் ,

    ReplyDelete
  4. ஷரியா சட்டத்தில் உள்ள பல சட்டங்களை எமது நாட்டில் அமுல் படுத்த முடியாது உ+ ம் கொலைக்கு மரணதண்டனை , களவுக்கு கை வெட்டுதல் .. காரணம் நாம் சிறுபான்மையினர் மற்றும் எமது நாடு ஒரு இஸ்லாமிய நாடல்ல. இதே காரணத்தைத்தான் எமது உலமாக்களும் கூறுவார்கள் . முகம் மூடுவது சம்பந்தப்பட்ட பிரச்சினையும் இதேமாதிறியே. அதனால் எமக்கு பிரச்சினை வரும்என்றால் அல்லது நாட்டின் பெரும்பான்மையினர் இதற்கு தடை விதித்தால் அதற்கு கட்டுப்பாட்டு நடக்கவேண்டியதுதான். இதையே இஸ்லாமும் கூறுகிறது . இது என்னுடைய கருத்து....

    ReplyDelete
  5. யார் யாரின் தேவைகளுக்காகவோ பத்வாக்களும், குநூத்களும் அடிக்கடி மாறிக் கொள்கின்றன. கோத்தபாய பதவியில் இருந்த பொழுது ஒரு பத்வாவும், இப்பொழுது இன்னொரு பத்வாவும். நாக்கில் எலும்பு இல்லை என்பதால் எல்லாப் பக்கமும் வளைக்கக் கூடியாதாக இருக்கின்றது இவர்களைப் போன்றவர்களுக்கு வசதிதான்.

    ReplyDelete
  6. அரபு நாடுகளில் ஒரு முப்தி இலங்கையில். ??? யாரு தீர்ப்பு சொல்ரது

    ReplyDelete
  7. 33:59 முக்காடுகளை தங்கள் மீது தொங்கவிடுமாறு கூறுவீராக!
    அவர்கள் அறியப்படவும், தொல்லைப்படுத்தப்படாமல் இருக்கவும் இது ஏற்றது.


    அறியப்படவும் என்ற வாசகம் "பெண்கள் யாரென அறிவது " என்ற அர்த்தம் கொடுக்கின்றது.

    இதுதான் ACJU கு விளங்குதில்ல! மத்கப்களை கட்டிபிடித்து வாழ்தால் குர்ஆனில் உள்ளது எப்படி புரியும்.

    ReplyDelete
  8. Face covering is thaqwa.face open is fatwa.islam is flexible religion.each and every muslims will have follow the islam by our imaan status.who is the one having 70% imaan he will follow the islam by70%.who is the one having 20%imaan he will follow the quran hadees 20%

    ReplyDelete
  9. முகத்தை மறைக்கலாமா இல்லையா என்பதை விட்டு விட்டு இப்ப இருக்கும் கண்ணாடி போன்ற அமாயாக்களின் போடலாமா கூடாதா அதை எப்படி நிறுத்துவது அல்லது மாற்றுவது சம்பந்தமாக சண்டைபிடியுங்கள், அறிக்கை விடுங்கள்...
    முகத்தை மறைத்தால் என்ன மறைக்காவிட்டால் மற்ற இடமெல்லாம் கண்ணடாடி போல் பளிச்சென்று தெரிகறதே... அதுக்கு என்ன செய்யப்போறீங்க?

    ReplyDelete
  10. உலமாக்கள் ஒன்றுசேர்ந்து அல் குர்ஆன் சுன்னா அடிப்படையில் கஷ்டப்பட்டு ஒரு பத்வாவை வழங்கும் போது., தமக்கு ஏற்றாற்போல் பத்வா அமையவில்லை என்று சந்தி பொந்துகளில் நின்று கொண்டு அதை விமர்சிக்கும் அதிகமான முல்லாக்கல் எம் சமூகத்தில் அதிகம்...

    ReplyDelete
  11. Will wait and see the conclusion of discussion. And the will decide the practice. Very simple

    ReplyDelete
  12. Shafy moh நீங்கள் சொல்வதுதான் உண்மை voice srilanசொல்வது செரியான விடயம் முகத்தை மூடிக்கொண்டு மறைக்க வேண்டியது கண்ணாடிதான்

    ReplyDelete
  13. Covering face of women is not a compulsory in Islam. It is an optional.

    For safety purposes, places like banks may ask to open their faces.

    When an action is not a must and which is not a sin when we avoid it, then we have to corporate with the community we live with to erase their fears.

    Islam encourages to respect the feelings of others.

    ReplyDelete
  14. முகத்தை காட்டுவது பாவம், முகத்தை மூட வேண்டும் என்றால், ஹஜ்ஜில் சென்று முகத்தை திறந்து பாவம் செய்வதா?

    முகம் திறப்பது பாவம் என்றால், ஒரு ஆண் திறந்த முகத்தை பார்ப்பதும் பாவம் தானே? ஆகவே வீதியில் அந்நிய பெண்களின் முகம் தெரியாமல் இருக்க ஆண்களும் முகம், கண் எல்லாம் மூடி கீழே குனிந்துகொண்டுதான் செல்ல வேண்டும் என்று பத்வா வருமோ?

    இந்த உலமாக்கள் உருப்படவே மாட்டார்கள், இந்த மாதிரி பிழைப்பிற்கு உதவாத பிரச்சினைகளில் நேர காலத்தை செலவிட்டு தங்கள் மேதாவித் தனங்களை காட்டிக் கொள்கின்றார்கள்.

    முஸ்லிம்களின் கல்வி, வறுமை பிரச்சினைகளுக்கு இவர்களால் தீர்வு தர முடியுமா?

    ReplyDelete
  15. Yasmin lafir dont be temper.quran rules not only for women for both.keep away our eyes from haram

    ReplyDelete
  16. இஸ்லாத்தின் ஈமானில் விசயத்தில் 2 விடயங்கள் உள்ளது ஒன்று தக்வா அடுத்த து பத்வா,தக்வா உள்ளவர்கள் அதன் மத்திக்கு அதாவது நடுவில் செல்லப்பார்ப்பார்கள் பத்வா உடையவர்கள் அதன் ஓரத்தில் செல்லப்பாரப்பார்கள் இது ஈமானுடன் சம்பந்தப்பட்ட விடயம் எனவே இது விடயத்தில் வீணான தர்க்கமும் வாய்க்குவந்தபடி பேசுவதும் எங்களை குப்ரில் தள்ளிவிடும் எனவே அல்லாஹ்வுடைய அவன் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவரகளுடைய விசயத்தில் தாறுமாறாக பேசாதீர்கள் ,அல்லாஹ் நம்மனைவர்களையும் குப்ரில் விழுவதை விட்டும் பாதுகாப்பானாக ஆமீன்.

    ReplyDelete
  17. இதுவரை ஒரு சில முஸ்லிம் அல்லாத நாடுகளே முகத்திரையை தடை செய்துள்ளன. முஸ்லிம் நாடுகளில் முகத்திரைக்கு எந்தத் தடையுமில்லை. வஹ்ஹாபிகளின் தாயகமான சஊதியில்கூட முகத்திரைக்கு தடை இல்லை. முக்கியமாக நபி (ஸல்) அவர்கள் பிறந்து வளர்ந்த புனித மக்கா, மதீனா நகரங்களில்கூட முகத்திரைக்கு தடை இல்லை. தடை செய்த நாடுகளில் உண்மையில் பெண்கள் முகத்தை மறைப்பதனால் அதன் பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை. முகத்தை மறைப்பதைப் பார்த்து பெண்கள் இஸ்லாத்திற்கு வந்த சம்பவங்களும் உண்டு. முற்றாக பெண்கள் மறைதத்துக் கொண்டு வீதியில் செல்லும் போது அவர்கள் இச்சையுடன் பார்க்கப்படுவதிலிருந்தும் தவிர்க்கப்படுகின்றார்கள். இதனால் முகத்தை மறைப்பதற்கே அதிகம் ஊக்குவிக்க வேண்டும்.

    ReplyDelete
  18. அரைகுறை ஆடையுடன் திரியும் முஸ்லிம் பெண்கள் பற்றி இந்த அளவுக்கு விமர்சனம் செய்யப்படுவதில்லை. அதனைத் தடுக்க இப்படியெல்லாம் முயற்சி செய்வதும் இல்லை. அதிகக் கேடும் பாவமும் இதனால்தான் ஏற்படுகின்றன. முகத்திரைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அளவைவிட அரைகுறை ஆடை தொடர்பான விடயத்திற்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும்.

    ReplyDelete
  19. fayees, மார்க்கம் என்ற பெயரில் எந்த பெண்ணும் அரைகுறை ஆடையில் திரிவதில்லை. ஆனால் மார்க்கம் என்ற பெயரில் அல்லவா முகத்தை மூடி பெண்களை சிரமப் படுத்துகிறார்கள்.

    ReplyDelete
  20. கனேதன்னை!
    நீங்கள் முஸ்லிமா? முஸ்லிம் அல்லாதவரா? இதற்கு பதிலை சொல்லாமல் வேறு விளக்கத்தை சொல்லாதீர்கள். உங்களது commentயைப் பார்த்தால், உங்களுக்கு முகத்தை மூடும் பெண்கள் முகத்தை மூடாமல் விடச் செய்வதை விரும்புகிறீர்கள். ஆனால் அரைகுறை ஆடையில் திரியும் பெண்கள் ஆடையை சீர் செய்வதில் உங்களுக்கு ஆர்வம் இல்லை போல் தெரிகிறதே?

    ReplyDelete

Powered by Blogger.