September 18, 2016

நோன்பு திறந்தபின், பாத்­தும்மா படுகொலை - 7 நாட்கள் சென்றும் கொலையாளி கண்டுபிடிக்கப்படவில்லை

(விடிவெள்ளி - ஏ.எல்.எம். ஷினாஸ்)

கல்­முனை பொலிஸ் பிரி­வுக்­குட்­பட்ட மரு­த­முனை - பெரி­ய­நீ­லா­வணை, ஸ்டார் வீதி, இல: 54 எனும் முக­வ­ரியில் வசித்­து­வந்த 73 வயது மூதாட்டி இனந்­தெ­ரி­யா­தோரால் கடந்த சனிக்­கி­ழமை கடத்­தப்­பட்டு -நள்­ளி­ரவு படு­கொலை செய்­யப்­பட்ட சம்­பவம் பிர­தேசம் எங்கும் அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்­தி­யது.

சம்­பவம் நடை­பெற்று இன்று  இர­வுடன் ஆறு நாட்கள் கடந்­துள்ள நிலையில் இது­வரை எவரும் சந்­தே­கத்தின் பேரில் கைது செய்­யப்­ப­ட­வில்லை. கொலை செய்­யப்­பட்­டவர் மரு­த­முனை - பெரி­ய­நீ­லா­வ­ணையை சேர்ந்த 73 வய­தான சீனித்­தம்பி பாத்­தும்மா என்­ப­வ­ராவார்.  இவ­ரது ஜனாஸா பெரி­ய­நீ­லா­வணை - விஷ்ணு கோவில் வீதியின் மூன்­றா­வது குறுக்கு வீதியில் முட்­கம்பி வேலிக்குள் தொங்கிக் கிடந்த நிலையில் மறுநாள் ஞாயிற்றுக் கிழமை அதி­காலை 12.30 மணிக்கு உற­வி­னர்­களால் அடை­யாளம் காணப்­பட்­டது.

குறித்த கொலைச் சம்­பவம் தொடர்­பாக தெரி­ய­வ­ரு­வ­தா­வது கொலை செய்­யப்­பட்ட மூதாட்டி கடத்­தப்­பட்ட தினத்­தன்று (10) நோன்பு நோற்­றுள்ளார்.  

நோன்பு திறந்த நிலையில் மஃரிப் தொழு­கைக்கு அதான் சொன்­னதன் பின்னர் வீட்டின் பிர­தான கேற்­ற­டியில் நின்­றதை சிலர் கண்­டுள்­ளனர்.

இதன் பின்னர் மாலை 6.30 மணி­ய­ளவில் மூதாட்டி காணாமல் போயுள்ளார். காணாமல் போகும் போது மூதாட்­டியின் கழுத்தில் 4 பவுண் தங்க சங்­கி­லியும், கை விரலில் மோதி­ரமும், காதில்  தோடும் அணிந்­தி­ருந்­த­தாக உற­வி­னர்கள் தெரி­விக்­கின்­றனர்.

காலில் பாதணி கூட போட்­டிருக்வில்லை என்­பதும் தெரி­ய­வந்­துள்­ளது. இதே வேளை கொலை செய்­யப்­பட்ட மூதாட்­டியின் பேரப் பிள்ளை ஒருவர் முச்­சக்­கர வண்­டி­யொன்றில் மூத்­தம்மா சென்­றதை தான் காண்­ட­தாக தெரி­வித்­துள்ளார். இந்தத் தக­வ­லுக்­க­மைய சீ.சீ.ரீ.வீ கமறா பதி­வுகள் பெறப்­பட்­டுள்­ளன. கொலை­யா­ளியை கண்­டு­பி­டிக்க பொலிஸார் தீவிர முயற்சி­களில் ஈடு­பட்­டுள்­ளனர்.

மூதாட்டியை காண­வில்­லை­யென்ற செய்தி மரு­த­முனை மற்றும் அயல் கிரா­ம­மான பெரி­ய­நீ­லா­வணை பிர­தே­ச­மெங்கும் பரவத் தொடங்­கின சம்­பவ தினத்­தன்று பெரி­ய­நீ­லா­வணை விஷ்னு கோவிலில்  உற்­சவ நிகழ்வு நடை­பெற்­றதால் நள்­ளி­ரவு நேரத்­தில் குறித்த பெண்ணை காண­வில்லை என்ற செய்தி அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இதன் பின்­னரே காணாமல் போன தாய் ஜனா­ஸா­வாக மீட்­கப்­பட்­டுள்ளார். ஜனா­ஸா­வாக மீட்­கப்­பட்ட போது மூதாட்டி அணிந்­தி­ருந்த  தங்க நகைகள் சூறை­யா­டப்­பட்­டுள்­ளன.

சம்­பவ இடத்­துக்கு விஜயம் செய்த கல்­முனை நீதிவான் நீதி­மன்ற பதில் நீதி­பதி கே.பேரின்­ப­ராஜா ஜனா­ஸாவை பார்வை­யிட்­டதன் பின்னர் பிரேத பரி­சோ­த­னைக்­காக கல்­முனை ஆதார வைத்­தி­ய­சா­லைக்கு எடுத்துச் செல்­ல­அ­னு­மதி வழங்­கினார்.

பின்னர் ஜனாஸா அம்­பாறை மாவட்ட வைத்­தி­ய­சா­லைக்கு பிரேத பரி­சோ­த­னைக்­காக எடுத்துச் செல்­லப்­பட்­டது.

பிரேத பரி­சோ­த­னையின் பின்னர் (13) மாலை 5.30 மணிக்கு ஜனாஸா பெரி­ய­நீ­லா­வணை அக்பர் மைய­வா­டியில் கண்­ணீர்­மல்க அடக்கம் செய்­யப்­பட்­டது. பிரேத பரி­சோ­தனை அறிக்­கையின் படி வாய் மற்றும் மூக்கை இறுக்கிப் பிடித்­ததால் மூச்சுத் திணறி உயி­ரி­ழந்­துள்­ள­தா­கவும் இது ஒரு கொலை எனவும் பொலிஸார் தெரி­வித்­துள்­ளனர்.

கல்­முனை பொலிஸ் நிலையப் பொறுப்­ப­தி­காரி ஜெயநாத் சிறி தலை­மையில் விசா­ரணை துரிதப் படுத்­தப்­பட்­டுள்ள அதே வேளை அம்­பாறை விசேட தட ஆய்வு  பொலிஸார் விசா­ர­ணை­களை தொடர்ந்­துள்­ளனர்.

கொலை செய்­யப்­பட்ட சீனித்­தம்பி பாத்­தும்­மா­வுக்கு ஐந்து பெண் மக்­களும் மூன்று ஆண்­பிள்­ளை­களும் உண்டு இவர்கள் எல்­லோரும் திரு­மணம் செய்­த­வர்கள். திரு­மணம் செய்து பிரிந்து இரண்டு பிள்­ளை­க­ளோடு வாழும் ஏ.எம். ஜன்­னத்­தும்மா(மகள்) வீட்­டி­லேயே பாத்­தும்மா(தாய்)வசித்து வந்­துள்ளார். கொலை செய்­யப்­பட்ட சீனித்­தம்பி பாத்­தும்­மாவின் கணவர் சுக­யீ­ன­முற்ற நிலையில் இன்­னமும் வாழ்ந்து வரு­கிறார்.

மர்­ம­மான முறையில் கொலை செய்­யப்­பட்ட இந்த சம்­பவம் பிர­தேசம் முழு­வதும் அச்­சத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. வயது முதிர்ந்த தாய்க்கு இந்த நிலை என்றால் எங்கள் நிலை என்னவாகும் என யுவதிகள் கேள்வி எழுப்புகின்றனர். வீடுகளிலும், வீதிகளிலும் தனிமையில் நடமாட பலரும் அஞ்சுகின்றனர்.

கொலையாளியை இனம்காண பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்கவேண்டுமென்பதுடன் கொலை செய்யப்பட்ட சீனித்தம்பி பாத்தும்மாவுக்கு ஜன்னதுல் பிர்தெளஸ் கிடைக்க பிரார்த்திப்போம்.

0 கருத்துரைகள்:

Post a Comment