Header Ads



சவூதி அரேபியாவின் தேசிய தினம் செப்டம்பர் 23


உலகமே உற்று நோக்கி கொண்டிருக்கும் சர்வதேச சாம்ராஜ்ஜியமான சவூதி அரேபியாவின் தேசிய தினம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 23 ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு செப்டம்பர் 23 வெள்ளிக்கிழமை வருகிறது.

சவூதி அரேபியாவில் பொதுவாகவே வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை அரசு விடுமுறை தினம் என்பதால், தேசிய தினத்தை முன்னிட்டு செப்டம்பர் 22 வியாழன் கிழமையும் அரசு விடுமுறை தினம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் சவூதி அரேபியாவில் பணிப்புரிபவர்களுக்கு இந்த ஆண்டு செப்டம்பர் 22, 23, 24 வியாழன், வெள்ளி, சனி ஆகிய மூன்று தினங்கள் அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நாட்களில் பணிப்புரியும் தொழிலாளர்களுக்கு அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் மூன்று நாள் கூடுதல் சம்பளம் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேன்மைப்படுத்தும் சவூதி அரேபியாவுக்கு, அல்லாஹ் தனது அருள் மழையை வாரி வாரி வழங்குகிறான்.

3 comments:

  1. This is not Bida??
    In our country people are fighting to raise a flag ??
    But here is not a Bida
    Hope that kings statue will come out soon as well

    ReplyDelete
  2. சரிதான் ! சவூதிக்கு இறைவன் பணத்தையும் செல்வத்தையும் ஏராளமாக வழங்கி உள்ளான் . ஆனால் அது அருள்மழையா அல்லது அல்லாஹ்வுடைய சோதனையா என்று எங்களால் முடிவு எடுக்க முடியாது .ஏன் சில வேலை அதுவே தண்டனையாகவும் அமையலாம் . வரலாற்றிலும் அதைத்தான் பார்க்கிறோம் . பெரும் பெரும் பாவிகளுக்கு அல்லது அநியாயம் செய்த ஊரார்களுக்கு அல்லாஹ் மற்றவர்கள் பொறாமைப்டும் அளவிற்கு செல்வத்தை அளித்தான் . ஆனால் இறுதியில் அவர்களுக்கு அழிவும் கைசேதமுமே எஞ்சியது .

    ReplyDelete

Powered by Blogger.