Header Ads



இரவு நேரத்தில் ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் Call எடுக்கும் கூட்டு எதிர்க்கட்சி

கூட்டு எதிர்க்கட்சியினர் நாடாளுமன்றில் நாடகமொன்றை அரங்கேற்ற முயற்சித்தனர் என பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஊடகமொன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.அவர் மேலும் கூறுகையில்,

காணாமல் போனோர் அலுவலகம் குறித்த சட்டம் உரிய முறையில் நாடாளுமன்றில் நிறைவேற்றிக்கொள்ளப்பட்டது.

கூட்டு எதிர்க்கட்சியின் சிலர் போலியான நடிக்கை வெளிப்படுத்தி, அவை நடவடிக்கைகளை குழப்ப முயற்சித்தனர்.

கூட்டு எதிர்க்கட்சியின் இந்த முயற்சி வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியதாகும்.

கூட்டு எதிர்க்கட்சியினருக்கு வாக்களிக்கக்கூடிய அளவிற்கு பெரிய எண்ணிக்கையில் உறுப்பினர்கள் கிடையாது.

ஒர் காலத்தில் எமக்கும் அந்த நிலைமை காணப்பட்டது.எனினும் நாம் இவ்வாறான வெட்கம் கெட்ட செயல்களில் ஈடுபட்டதில்லை.

முக்கியமான சட்டங்கள் நாடாளுமன்றில் அமுல்படுத்தப்படும் போது இவ்வாறு போலியான நாடகங்களை அரங்கேற்றி குழப்ப முயற்சிக்கின்றார்கள்.

இவ்வாறு செய்வதன் மூலம் நாம் அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணை செய்ய மாட்டோம் என கருதுகின்றார்கள்.

எனினும் அவ்வாறு நடக்காது. சட்ட மூலம் சமர்ப்பிக்கப்பட்ட போது கூட்டு எதிர்க்கட்சியின் சிலர் குடிபோதையில் நடந்துகொள்வதனைப்போன்று நடந்துகொண்டார்கள்.

நாடாளுமன்றில் உரக்கக் குரல் கொடுக்கும் தரப்பினர் இரவில் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் n;தாலைபேசி அழைப்பு எடுத்து ஆளும்கட்சியில் இணைந்து கொள்ள முயற்சிக்கின்றனர்.

எனினும் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்கள் ஆளும் கட்சியில் இணைந்து கொண்டாலும் ஊழல் மோசடிகள் குறித்த விசாரணைகளில் மாற்றமில்லை என ஜனாதிபதி திட்டவட்டமாக கூறியுள்ளார் என ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.