August 17, 2016

கத்தார் வாழ் இலங்கை முஸ்லிம்களை, பொறியில் சிக்கவைக்க முயற்சியா..?

அண்மைகாலமாக கத்தாரில் தொழில்புறியும் இளைஞ்சர்களை இலக்குவைத்து கத்தாரில் தொழில்புறியும் இலங்கை முஸ்லிம் யுவதிகளால் தங்களது சோக வரலாறுகளை கூறி அவர்களை நல்லவர்களாக தங்களை இனம்காட்டி அனுதாபம் பெரும் நோக்கில் தங்களுடைய வளைக்குள் சிக்கவைக்கும் கைங்கரியங்களை மேற்கொண்டு வருகிறார்கள் .

அண்மைக்கால சில இளைஞ்சர்களின் தரவுகள் படி ஓரிரு குறிப்பிட்ட பெண்கள் முகபுத்தகம் ஊடாக உயர்ந்த சம்பளம் பெறக்கூடிய திருமணம் ஆகாத இளைஞ்சர்களுக்கு Friend Request  கொடுத்து நண்பர்களாக்கி அவர்களுடன் அழகிய முறையில் chat செய்து தங்களது குடும்ப கஷ்டங்களை கூறி இளைஞ்சர்களின் மனதை திசை திருப்பி தங்களுக்கு பெற்றோர்கள் இல்லையென்றும் தாங்கள் குடும்ப கஷ்டத்துக்காக வெளிநாடு வந்ததாகவும் தங்களுக்கு ஊரில் நிறைய சொத்து இருப்பதாகவும் அதெல்லாம் வங்கியில் அடகில் இருப்பதாகவும் தங்களுக்கு Eastern Boys ஐ கண்டாலே பிடிக்காது என்றும் தொடர்ந்து சில காலங்களுக்கு பிறகு அவர்களை Skype  இல் Audio call மாத்திரம் கதைக்க வருமாறும் அழைப்புவிடுத்து அவ்வப்போது நேரம் கிடக்கும் போது உரையாடி தங்களது நேரத்தை கடத்தி வருகிறார்கள் .

இதே நிகழ்வு தொடர்ந்து சில காலங்களுக்கு பிறகு தன்னுடைய உம்மா காலம்சென்றுவிட்டார் என்றும். சில காலம் கழித்து தன்னுடைய வாப்பா காலம்சென்றுவிட்டார் என்றும் எடுத்துறைத்து ஆண்களிடம் அனுதாப வார்த்தைகளை பெற்று அவர்களை மடையர்களாக  ஆக்குகிறார்கள். ஆனால் அதுவரைக்கும் அவர்களுடைய நிஜமான முகத்தை காட்டாது எங்கேயோ முகபுத்தகத்தில் உள்ள அழகான பெண்களின் photo வை அவர்களுக்கு அனுப்பி வைக்கிறார்கள்.அதையும் நம் சகோதரர்கள் உண்மை என்று நம்பிவிடுகிறார்கள்.

இவ்வாறு ஓரிரு கதைகளை கூறி ஒரு கணிசமான சகோதரர்களை ஏமாற்றியுள்ளர்கள்.இந்த தொடர்கதை தொடர்ந்து அவர்களை அனுதாப வலையில் சிக்க வைத்து அவர்களை திருமணம் செய்வதற்கு கூட மனதை இட்டுசெல்லவைக்கிரர்கள்.இதை ஏமாந்து இளைஞ்சர்கள் அவர்களுக்கு விருப்பதை தெரிவிக்க அதன் பின்னர் அவர்கள் இவர்களை விட்டும் சிறிது காலம் ஒதுங்கி இருக்கிறார்கள். நீண்ட இடைவெளிக்கு பின்னர் திரும்ப வந்து தங்களுக்கு திருமணம் நடந்ததாகவும்.முடித்து சில காலத்தில் கணவன் தங்களை விட்டு பிரிந்து விட்டார் என்றும் தனது வயிற்றில் அவருடைய சிசு இருப்பதாகவும் அதை தான் அழிக்கப்போவதாகவும் கூறி  பொய்யான வார்த்தைகளால் இளைஞ்சர்களின் மனதை நெகிழவைகிரார்கள்.

இந்த தொடர்கதை இன்னும் சில சகோதரர்களிடம் தொடர்ந்தவண்ணமே இருகின்றன...இந்த தொடர்கதையில் சம்பந்தப்பட்ட இரு சகோதர்களின் தொடர்பு அறிந்தவுடன் உடனே அவர்கள் இருவருடனும் தொடர்பை துண்டித்து விடுகிறார்கள். இதனுடன் சம்பந்தப்பட்ட சகோதர்கள் விடயம் அறிந்து இப்பொழுது அவர்களை துப்பறிந்து தகுந்த தண்டனை பெற்றுகொடுக்க முழு முயற்சியில் இறங்கியுள்ளார்கள். இதை அறியாத சில அப்பாவிகள் தொடர்ந்தும் தொடர்பிலுள்ளர்கள் .....இத்தொடர்கதை எங்கு போய் முடியும் என்று பொறுத்திருந்து பாப்போம்...

எச்சரிக்கையாக இருங்கள் சகோதர்களே இவ்வாறு நீங்களும் தொடர்பில் உள்ளீர்களா சாமார்த்தியமாக நடந்து தொடர்பை துண்டித்து விடுங்கள் 

(தொடரும் ....)

6 கருத்துரைகள்:

இன்ஷா அல்லாஹ் நானும் கட்டாரில் இருக்குறோம் சொல்லுகிறோம்

Naan solla maatten becs ennidam FB illai.Thank u.

சகோதரர் அப்துல் ரஹீம் நீங்க சொல்ல FB அவசியம் இல்லை சொல்லக்கூடிய வாய் இருந்தா போதும்

பொது வாழ்விலும் பேஸ்புக்கிலும் பெண்களை நண்பர்களாக இணைப்பதற்கு மார்க்கத்தில் அனுமதி இருக்க முடியாது.இதை அதிகமானவர்கள் அறிந்தோ அறியாமலோ பேஸ்புக்கில் பெண்களையும் நட்பு வட்டத்தில் வைத்துள்ளனர்.ஏமாற்றப்பட்ட சகோதரர்கள் இதை கவனத்தில் கொள்ளாமையும் அல்லது புறக்கணித்தமையும் ஏமாற்றத்திற்கான காரணம் எனலாம்.

அவனவனுக்கு குடும்பத்தினருடம் பேசுவதற்கே நேரம் போதாமல் தவித்துகொண்டு இருக்கின்றான் அதுக்குள்ள எதுக்கு இப்படி ஒரு பொழுது போக்கு ...?

Izu onrum puziya vidayamillai . Aangal pengalyum , pengal
aangalayum neenda kaalamaaga emaatrikkondeythaan
vaalgiraarkal. Thatperumaikkaaga poyyileye moolgippoithaan
ellaamey seigiraargal . Muslim samoogam payangaramaana
emaatrukkaarargalaagavum emaaligalaagavum irukkiraargal
enbazuthaan kasappaana unmai.Allah enra peyarilthaan ellam
seygiraargal .

Post a Comment