August 20, 2016

வடக்கில் முஸ்லிம்கள் மீள்குடியேறுவது, தமிழருக்கு பலமாக அமையும் - மாவை

வடக்கில் முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றம் தற்போதைய ஆட்சியில் துரிதப்படுத்தப்பட்டு வருகின்றமை தமிழருக்குப் பலம்மிக்க ஒன்றாக அமைந்துள்ளதாக தமிழரசுக் கட்சியின் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்டப் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் மக்களின் மீள்குடியேற்றத்தினை துரிதப்படுத்தும் வகையிலான நடமாடும் சேவைக்கான கலந்துரையாடல் ஒன்று இன்று நடைபெற்றது. இதன் போதே நாடாளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

எமது மக்களின் மீள்குடியேற்றம் என்பது பலராலும் நினைத்துக் கூடப் பார்க்க முடியாத ஒன்றாக இருந்து வந்துள்ள நிலையில் அதற்கான சூழல் தற்போது துரிதப்படுத்தப்பட்டுள்ளது. உங்களுக்கான தேவைகள் எமது அரசாங்கத்தின் ஊடாகவும், புலம் பெயர்ந்த இஸ்ஸாமிய அமைப்புகளுடன் தொடர்பு கொண்டும் நிறைவேற்றித் தருவதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.

நாம் இன்றுவரை தேசிய இனப் பிரச்சினைக்கு முகம் கொடுத்துவருகின்றோம். இதில், எமக்கான உரிமைகள் மத்திய அரசாங்கத்தினால் மழுங்கடிக்கப்பட்டு வருவது காலம் காலமாகத் தொடரும் அவலமாக இருந்து வருகிறது.

இந்த நிலையில் எமது மண்ணின் உரிமைகளில் ஒன்றான மீள்குடியேற்றம் என்பது எமக்கு இன்றியமையாத ஒன்றாகக் காணப்படுகின்றது.

இவ்வாறு இருக்கையில் எமக்கான தேவைகளைத் தற்போதைய சூழலை உரிய வகையில் பயன்படுத்தி நிறைவேற்றிக் கொள்ளாவிடில் இதற்கான வாய்ப்புக்கள் பின்னர் இல்லாமல் போய்விடும் எனவும் தெரிவித்தார்.

2 கருத்துரைகள்:

இதைத்தான் ஜயா 30 வருடங்களுக்கு முன்பு முஸ்லீம்களும் தமிழர்களும் வடக்கில் வாழ்ந்து வந்தார்கள் எவ்வளவு ஒற்றுமையாக வாழ்ந்தவர்கள் என்பது தாங்கள் அறிவீர்கள்,
இடையில் புலிகள் செய்த நாசகார வேளையினால் முஸ்லீம்கள் இந்த நிலைமையைக்கு
தள்ளப்பட்டாரகள் புலிகள் செய்த தவரினால் தமிழ்மக்களை குற்றம் கூற முடியாது
மறுபடியும் பலய நிழமை உறுவாக வேண்டும் அதற்கு தங்களின் முயற்சி காலத்தின்
தேவையாக உள்ளது என்பதை மணதில் நிருத்தி முஸ்லீம்களின் மீள் குடியேற்றத்தை
துறித கதியில் அமுல்படுத்தி தருவீர்கள் என மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர்,

ஐயா,தமிழ் முஸ்லிம் உறவே இரு சமூகங்களுக்கான பலம்

Post a Comment